புடவை குடுங்க ப்ளீஸ் (ஒரு நிமிட சிறுகதை)

Feb 26, 2026,01:38 PM IST

- ஷீலா ராஜன்


"இந்த புடவையை கொடுங்களேன் இது ஒரு புடவை" கையில் எடுத்து வைத்துக் கொண்டிருந்த  நபரைப் பார்த்து காசு கொடுனு  கேப்பீங்க, இன்னைக்கு புடவை கேக்குறீங்களா???? சரி கொடுத்து அனுப்பு .....காலங் காத்தால எதுக்கு பிரச்சனை என்ற முதலாளி சொன்னதை கேட்டு துணி கடையில் வேலை செய்து கொண்டிருந்த பாலு புடவைய எடுத்து கொடுத்துவிட்டு காசு குடுங்க என்று கேட்க முன்னரே புடவையை வாங்கிய நபர் ஓட்டமும் நடையாக வெளியே போய்விட்டார்.


சரி விடு விடு காலங்காத்தால என்ன பண்றது என்று சலித்துக் கொண்ட முதலாளியை பார்த்து இருங்க , அவங்க எதுக்கு அப்படி காசு கொடுக்காம ஓடினாங்க?? நான் போய் பார்த்துட்டு வரேன் என்று வேகமாக கடையை விட்டு வெளியே வந்தான் பாலு. புடவை வாங்கிய நபர் வேகவேகமாக நடந்து போவதை பார்த்துக் கொண்டு அவரை பின்னாலயே பின் தொடர்ந்தான்.. கூட்ட நெரிசலில் சில நிமிடங்கள் அந்த நபரை பாலுவால் பார்க்க முடியவில்லை..


இங்கும் அங்கும் கண்களை அலையவிட்டபடி நடந்த பாலுவின் கண்களில் கண்ட காட்சி ஒரு அரிய காட்சி அவனுக்கு மட்டுமல்ல அங்கு இருந்தவர்களின் கண்களில் கண்ணீரை வரவழைத்தது.




மெதுவாக நடந்து தான் வேலை செய்த துணிக்கடைக்குள் நுழைந்தான்..


போன வேகத்தில் திரும்பி வந்தவனைப் பார்த்த முதலாளி, "என்னப்பா பாலு ஒன்னும் பேசாம வேலைய பாக்க ஆரம்பிச்சிட்ட என்ன நடந்துச்சு எங்க போன? என்ற முதலாளியை பார்த்தபோது அவன் கண்களில் இருந்து கண்ணீர் கொட்டியது... ஏம்பா ??என்ன எதுக்கு அழுவுற என்னப்பா?? ஆச்சு சொல்லுப்பா? என்றவுடன் பாலுவின் மௌனம் கலைந்தது... ஐயா! புடவையை இனாமா கேட்டு வாங்கிட்டு போனாங்கனு அவங்கள  நம்ம கேவலமான நினைச்சோம்,,, ஆனா அவங்க செஞ்சது இமயமலை அளவுக்கு பெருசுங்க...


நம்ம ரோடு முனையில் ஒரு அம்மா மனநிலை சரியில்லாம கிழிஞ்சு போன புடவைய போட்டுக்கிட்டு உட்கார்ந்துட்டு இருந்தாங்க போல. அவங்கள சில காலி பசங்க வேடிக்கை பார்த்து இருக்காங்க. அசிங்க அசிங்கமா கேலி பண்ணி இருக்காங்க. அதை பார்த்துட்டு தான் நம்ம கடையில வந்து ஒரு புடவை எடுத்துட்டு போய் அந்த அம்மாவுக்கு கட்டி விட்டாங்க. இதை என் கண்ணால பார்த்தேங்க... புடவை வாங்கிட்டு போனவங்கள நம்ம ரெண்டுங்கட்டானுங்க ஒன்பது, அலி இப்படியெல்லாம் சொல்லி இருக்கும்.. ஆனா அவங்களுக்கு இருக்கிற நல்ல மனசு நமக்கு இல்லையேனு  நினைச்சப்ப போது கண்ணுல இருந்து தானா கண்ணீர் வந்துருச்சுங்க என்ற பாலு ஐயா! இந்தாங்க அவங்க எடுத்துட்டு போன புடவைக்கு காசும் கொடுத்துட்டாங்க .. முதலாளியின் கையில் காசை திணித்தான்.. பாலு காசு கொடுத்தாங்களா அப்ப இனாமா கேட்கலையா??


இல்லங்க! அந்த அம்மாவ பசங்க சுத்தி வளச்சுட்டு கேவலமா பேசாத பாத்துட்டு அவசரமா புடவையை வாங்க வந்திருக்காங்க.. வாங்கிட்டு போயிட்டு அப்புறம் வந்து குடுக்கலாம்னு இருந்தாங்களாம் ..அவங்க ஒரு கவர்மெண்ட் ஆபீஸ்ல கிளர்க்கா இருக்காங்களாம் ,,,நமக்கு தாங்க விவரம் புரியாம என்னென்னமோ பேசுறோம் அவங்க எல்லாம் வேற மாதிரி வாழ ஆரம்பிச்சிட்டாங்க என சொல்லியபடியே பாலு கஸ்டமர்களை கவனிக்க ஆரம்பித்து விட்டான்...


அப்புறம் அந்த மனநிலை சரியாம இருக்காங்க இல்ல அவங்கள சாயந்திரமா ஆபீஸ்ல முடிஞ்சு வந்து ஒரு அரசாங்க பெண்கள் இல்லத்துல சேர்த்து விடப் போறாங்களாம். அதுக்கும் ஏற்பாடு பண்ணி இருக்காங்க பாருங்க. அவங்க வேற லெவலுங்க என்ற பாலுவை பார்த்துக் கொண்டிருந்த கடை முதலாளி என்ன பேசுவது என்று தெரியாமல் அதிர்ச்சியில் உறைந்து போனார்.

செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்

சமீபத்திய செய்திகள்

news

IPL 2026: கடைசி வரை போராட்டம்.. 10 ரன்கள் வித்தியாயசத்தில் வெற்றியை நழுவ விட்ட சென்னை சூப்பர் கிங்ஸ்

news

மகளிர் சக்தியை அவமதித்தவர்களுக்குத் தண்டனை நிச்சயம்.. பிரதமர் மோடி ஆவேச உரை!

news

எடுக்கவோ கோர்க்கவோ.. ஏட்டில் படித்ததை.. பார்த்து பார்த்து .. பரவசத்தில் புதுப் பூவாய் பூத்தேன்!

news

Priase the Husband Day: கணவரை மனசார பாராட்டுங்கள் இன்னிக்கு!

news

பூவிதா...! நான் உன்னை நேசிக்கிறேன்.. (மெல்லிய பூங்காற்று - 3)

news

சிவகங்கை குடியிருப்பு பகுதியில் புகுந்த கண்ணாடி விரியன்.. லாவகமாக மீட்ட தீயணைப்புத் துறையினர்!

news

A Vency Raj short story: முடியுமா என்னால்?.. ஒரு வினாவே விடையாகும் தருணம்!

news

மனங்களில் வாழும் ரங்கா மாமா.. Ranga Mama – The Guruswamy of Our Hearts!

news

True Wisdom.. உண்மையான ஞானம் எதிலிருந்து நமக்குக் கிடைக்கும்?

அதிகம் பார்க்கும் செய்திகள்