டெல்லி: கிரிக்கெட் வீரர் ஷிகர் தவான் தனது காதலை பட்டவர்த்தனமாக அறிவித்துள்ளார். அயர்லாந்து நாட்டைச் சேர்ந்த ஷோபி ஷைன் என்பவருடன் அவர் காதலில் இருப்பதாக தெரிவித்துள்ளார்.
"என் இதயம்" என்று ஹார்ட்டின் எமோஜியுடன் கூடிய பதிவை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் போட்டுள்ளார் ஷிகர் தவான். சாம்பியன்ஸ் டிராபி 2025 போட்டியில் தவானும் ஒரு மர்ம பெண்ணும் இருக்கும் புகைப்படம் வைரலானது. அந்த பெண் அயர்லாந்தை சேர்ந்த ஷோபி ஷைன் என்றும் தகவல்கள் வெளியாகின. சமீபத்தில் ஒரு நிகழ்ச்சியில் தவானிடம் அவரது காதலி பற்றி கேள்வி கேட்கப்பட்டது.
முதலில் தயங்கிய அவர், "நான் பெயர் சொல்ல விரும்பவில்லை. ஆனால் இந்த அறையில் இருக்கும் அழகான பெண் தான் என் காதலி" என்று கூறினார். இப்போது அவரே இன்ஸ்டாகிராம் மூலம் தனது காதலியை வெளியுலகுக்கு அறிமுகப்படுத்தியுள்ளார்.
ஷிகர் தவானின் 2வது காதல் இது. இதற்கு முன்பு 2008ம் ஆண்டு ஆஸ்திரேலியாவைச் சேர்ந்த ஆயிஷா முகர்ஜி என்ற கிக்பாஸ்கருடன் காதல் கொண்டு பின்னர் அவரை 2012ம் ஆண்டு திருமணம் செய்து கொண்டார் ஷிகர் தவான். ஹர்பஜன் சிங் மூலம்தான் ஆயிஷாவுக்கும், ஷிகருக்கும் இடையே நட்பு ஏற்பட்டது. ஆயிஷா, ஷிகர் தவானை விட 12 வயது மூத்தவர் என்பது குறிப்பிடத்தக்கது. இந்தத் தம்பதிக்கு ஒரு மகன் உள்ளார். அதேசமயம், ஆயிஷாவுக்கு அவரது முதல் கணவர் மூலம் 2 மகள்கள் உள்ளனர். அந்தக் குழந்தைகளையும் ஷிகர் தவான் தனது மகள்களாக தத்தெடுத்துக் கொண்டார். ஆனால் இந்தக் காதல் கல்யாணம் 2021ம் ஆண்டு செப்டம்பருடன் முடிவுக்கு வந்து விட்டது. இருவரும் கடந்த 2023ம் ஆண்டு முறைப்படி விவாகரத்து செய்து கொண்டு விட்டனர்.
இந்த நிலையில் தற்போது அயர்லாந்து பெண்ணுடன் காதல் கொண்டுள்ளார் ஷிகர் தவான். இவர்களது திருமணம் எப்போது நடைபெறும் என்று தெரியவில்லை.
அணு ஆயுதங்களைக் காட்டி இந்தியாவை யாரும் மிரட்ட முடியாது.. பிரதமர் மோடி எச்சரிக்கை
தனியார் துறையில் முதல் வேலை பெறுவோருக்கு ரூ. 15,000.. புதிய திட்டத்தை அறிவித்தார் பிரதமர் மோடி
சிறந்த மாநகராட்சியாக ஆவடி, நாமக்கல் தேர்வு.. சென்னை சுதந்திர தின விழாவில் விருது
வருடாந்திர பாஸ்டாக் பாஸ்.. இன்று முதல் அமலுக்கு வந்தது.. யாருக்கெல்லாம் லாபம்?
50 ஆண்டு கால திரைப்பயணம்... வாழ்த்து தெரிவித்தவர்களுக்கு நன்றி: சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த்!
பிரதமர் மோடி அறிவித்த டபுள் தீபாவளி.. ஜிஎஸ்டி வரி விதிப்பில் என்னெல்லாம் மாற்றம் இருக்கும்?
சுதந்திரம்.. ஆன்மீகம்.. இரண்டுக்கும் தொடர்பிருக்கு தெரியுமா?
சுகமாய் சுற்றித் திரிவோரே.. இன்று மட்டுமாயின்.. ஒர் நாழிகையேனும் நினைவுகூறுக!
சுதந்திரம் காப்போம்!
{{comments.comment}}