இஸ்லாமாபாத்: பாகிஸ்தான் கிரிக்கெட் வீரர் சோயப் மாலிக் திடீரென பாகிஸ்தான் நடிகை சனா ஜாவேத் என்பவரை திருமணம் செய்து புகைப்படங்களையும் போட்டுள்ளார். அவர் தனது மனைவி சானியா மிர்ஸாவை விவாகரத்து செய்து விட்டதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
சோயப் மாலிக்கின் இந்தத் திருமணம் இந்தியா மட்டுமல்லாமல் பாகிஸ்தானிலும் கூட வியப்பலைகளை ஏற்படுத்தியுள்ளது. கடந்த 2010ம் ஆண்டு மிகப் பெரிய பரபரப்புக்கு மத்தியில் சோயப் மாலிக் - சானியா மிர்ஸா ஆகியோரின் திருமணம் ஹைதராபாத்தில் நடைபெற்றது. இந்தத் தம்பதிக்கு இஷான் என்ற மகனும் உள்ளார்.
ஆனால் கடந்த சில வருடங்களாக இவர்களுக்குள் உறவு சரியில்லை. இருவரும் பிரிந்து வாழ்வதாக செய்திகள் வெளியாகின. ஆனால் இருவருமே அதை உறுதிப்படுத்தவும் இல்லை, மறுக்கவும் இல்லை. இந்த நிலையில் சமீபத்தில் சானியாமிர்ஸாவை சோயப் மாலிக் விவாகரத்து செய்து விட்டதாக தகவல்கள் வெளியாகின. மேலும் நடிகை சனா ஜாவேத்துடன் சோயப் மாலிக் நெருக்கமாக பழகி வருவதாகவும் தகவல்கள் வெளியாகின.

ஆனால் எதுவுமே உறுதிப்படுத்தப்படாமல் இருந்த நிலையில்தான் தற்போது சோயப் மாலிக்கின் திருமணச் செய்து வந்துள்ளது. இது சானியா மிர்ஸா ரசிகர்களை அதிர்ச்சியிலும், வருத்தத்திலும் ஆழ்த்தியுள்ளது.
எப்படி சனாவுக்கும், சோயப்புக்கும் இடையே பழக்கம் ஏற்பட்டது.. இந்த நட்பின் காரணமாகத்தான் சானியாவுக்கும், சோயப்புக்கும் இடையே மண முறிவு ஏற்பட்டதா என்று தெரியவில்லை. ஆனால் 2021ம் ஆண்டிலிருந்தே சனாவுடன், சோயப் நெருங்கிப் பழகி வந்துள்ளதாக பாகிஸ்தான் மீடியாக்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
சமீபத்தில் சானியா மிர்ஸா ஒரு இன்ஸ்டாகிராம் போஸ்ட் போட்டிருந்தார். அதில், திருமணம் கடினமானது.. விவாகரத்து கடினமானது.. இதில் எந்த கடினம் உங்களுக்குத் தேவை என்பதை நீங்களே தேர்வு செய்ய வேண்டும்.. பருமனாக இருப்பது கடினமானது.. பிட்டாக இருப்பது கடினமானது.. உங்களுக்குத் தேவையானதை நீங்கள்தான் தேர்வு செய்ய வேண்டும்.. கடன்பட்டிருப்பது கடினமானது.. நிதி ரீதியாக நன்றாக இருப்பதும் கடினமானது.. உங்களுக்கானதை நீங்களே தேர்வு செய்ய வேண்டும். தொடர்பில் இருப்பது கடினமானது.. தொடர்பை துண்டிப்பதும் கடினமானது.. உங்களது தேவை உங்களிடமே. வாழ்க்கை எப்போதுமே எளிதானது இல்லை.. எப்போதுமே அது கடினமானதுதான்.. நாம் தான் தேர்வு செய்ய வேண்டும்.. புத்திசாலித்தனமாக என்று தத்துவார்த்தமாக எழுதியிருந்தார்.

சானியா மிர்ஸா - சோயப் திருமணத்திற்கு முன்பு இதே ஆந்திர மாநிலத்தைச் சேர்ந்தவரான ஆயிஷா சித்திக்கி என்பவரை தொலைபேசி மூலம் சோயப் மாலிக், மணந்து கொண்டதாக அப்போது பெரும் பரபரப்பு ஏற்பட்டது. இதுதொடர்பாக ஆயிஷா சித்திக்கி பெரும் பிரச்சினையைக் கிளப்பி நாட்டையே அதிர வைத்து விட்டார் என்பது நினைவிருக்கலாம். தனக்கும் சோயப்புக்கும் இடையே உடல் ரீதியான உறவு இருந்ததாகவும் ஆயிஷா கூறி அதிர்ச்சி ஏற்படுத்தினார் என்பது நினைவிருக்கலாம்.
தீஞ்ச சக்தியிலிருந்து ஆட்களை இழுக்கும் நீங்க என்ன.. காஞ்சு போன சக்தியா? .. மு.க. ஸ்டாலின் தாக்கு
KG முதல் PG வரை இலவச கல்வி.. ஒடிசா அதிரடியை எல்லோரும் கடைப்பிடிக்கலாமே?
தவெக.,வை நோக்கி படையெடுக்கும் மாற்று கட்சியினர்... பலமா? பலவீனமா?
டீசல் விற்பனைக்கு கடும் கட்டுப்பாடு: மத்திய அரசு அதிரடி உத்தரவு!
Vijay Birthday: முதல்வராக முதல் முறையாக.. 52வது பிறந்த நாளைக் கொண்டாடத் தயாராகும் விஜய்
அதிமுக தேர்தல் தோல்வி எதிரொலி: மாவட்ட வாரியாக எடப்பாடி பழனிசாமி ஆலோசனை
பாஜவிலிருந்து விலகி தவெகவில் இணைகிறார் முன்னாள் எம்.எல்.ஏ விஜயதரணி
லியோனல் மெஸ்ஸியின் உலகக் கோப்பை வேட்டை எப்போது தொடங்குகிறது?
Seven Days, Twenty Kilometres.. மற்றும் மறக்க முடியாத சில நினைவுகள்!
{{comments.comment}}