கைகள் ஓவியம் வரையும்.. ஆனால் ஓவியங்களே கைகளாக மாறி விட்டால்.. அசரடிக்கும் ராஜேஸ்வரி!

Sep 27, 2025,03:48 PM IST

கைகள் ஓவியம் வரையும்.. அதுதான் எதார்த்தமும் கூட.. ஆனால் ஓவியமே கைகளாக மாறி விட்டால் என்னாகும்.. கற்பனை செய்து பார்க்கவே வியப்பாக இருக்கும் அல்லவா.. ஆனால் மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி, பட்டேல் தெருவில் வசித்து வரும் இரெ. ராஜேஸ்வரியின் விரல்கள் விளையாடும் விதத்தைப் பார்த்தால் அப்படித்தான் சொல்லத் தோன்றுகிறது. அந்த அளவுக்கு ஓவியத்தில் முத்திரை பதித்துக் கொண்டிருக்கிறார் இரெ.ராஜேஸ்வரி.


எப்படி மேடம் இப்படி வரையறீங்க.. எங்க இருந்து இந்த வித்தையைக் கத்துக்கிட்டீங்க.. உங்களைப் பத்தி சொல்லுங்க என்று அவரிடமே கேட்டோம்.. மடை திறந்த வெள்ளமாக அவர் கொட்டிய வார்த்தைகள் உங்களுக்காக... 




நான் சீர்காழியில் வசித்து வருகிறேன். என் கணவர் சித்திவிநாயகம் பதிவுத்துறையில் பணி புரிந்து ஓய்வு பெற்றவர். தற்போதுஅவர் இல்லை. நான் நீதித் துறையில் (judicial department) முதல் நிலை உதவியாளராக பணி புரிந்து ஓய்வு பெற்றுள்ளேன். மயிலாடுதுறை நாகப்பட்டினம் திருவாரூர் ஆகிய மாவட்டங்களில் பணி புரிந்து 32ஆண்டுகள் பணி புரிந்து கடந்த 2013ஆம் ஆண்டு நாகப்பட்டினம் மாவட்ட நீதி மன்றத்தில் இறுதியாக பணி புரிந்து ஓய்வு பெற்றேன். எனக்கு ஒரு பெண் ஒரு பையன் இருவரும் திருமணம் ஆகி செட்டில் ஆகி சென்னையில் வசித்து வருகின்றனர் 

  

நான் நேர்மையும் நீதியும் நிறைந்த நீதித்துறையில் பணி புரிந்ததை எண்ணி மிகுந்த பெருமை அடைகிறேன். மிகவும் பரபரப்பாக எந்த நேரமும் டென்ஷன் ஆகவே பணி புரிந்த எனக்கு திடீரென்று கண்ணை கட்டி காட்டில் விட்டது போல் இருந்தது. சாப்பிடவோ தூங்கவோ நேரமின்றி பரபரப்பாக இருந்த எனக்கு அமைதியான சூழ்நிலை சோம்பலாக்கி விடும் போல் இருந்தது. சின்ன வயதில் இருந்தே நான் கோலம் அருமையாக போடுவேன் அதனால் வாசலில் கோலம் போடுவதில் கொஞ்சம் ஆர்வம் வந்தது. இந்நிலையில் மார்கழி மாதங்களில் விதம் விதமாக வண்ண மயமாக கோலம் வரையும் போது அக்ரகாரத்தில் வந்து வந்து என் கோலங்களை பார்த்தவிட்டும் போட்டோ எடுத்துக் கொண்டும் போவார்கள். வண்டியில் போகுபவர்களும் நிறுத்தி நின்று போட்டோ எடுத்துக் கொண்டு போவார்கள் 


அதன் பின்னர் எனக்கு அதிக ஆர்வம் வந்தது. பின்னர் பட்டி மன்றங்களில் பேசப்பட்ட பெரிய தலைப்பு என்னவென்றால் கம்பிக்கோலம் பழங்காலத்தோடு அழிந்து விட்டது. மறந்து போன விஷயமாகி விட்டது என்பதுதான். எனவே அதிலும் நான் கம்பி கோலம் 65 புள்ளிகள வைத்து கோடு கோலமிட்டு அழிந்து போகவில்லை என்று நிரூபித்தேன். சிதம்பரம் பட்டி மன்றத்தில் ‌அதே கம்பி கோலத்திற்கு மீண்டும் ஒரு முறை அவார்டு வாங்கினேன். 




Sarala quiz என்ற நிறுவனம் நடத்திய international art contest இல் கலந்து 3rd Award வாங்கினேன். பின்னர் இன்னொரு 2nd Award வாங்கினேன். Participate Award அதிகம் வாங்கிருக்கேன். இப்படியாக என்னுடைய whatsapp  குழுக்கள் face book எல்லாவற்றிலும் போட்டுக்கொண்டிருந்த போது குழுவில் யார் என்றே தெரியாதவர்கள் கூட போன் பண்ணி பாராட்டுவார்கள்.


என் கணவர் 2021ஆம் ஆண்டு இறந்து விட்டார். அதில் மனம் உடைந்து போய் சுமார் ஒரு வருடம் கோலம் போடுவதில் மனம் ஈடுபாடு இல்லாமல் விட்டு விட்டேன். என் பையனும் பெண்ணும் என் மேல் ரொம்ப பாசமாக இருப்பார்கள். நான் கவலையாக இருப்பதால் என் பையன் ஏராளமான கலர் சென்னையிலிருந்து வாங்கி வந்து கொடுத்து படம் வரைந்தால் உன் கவலை குறையும் என சொன்னான். உடனே மீண்டும் வரைய தொடங்கினேன். மீண்டும் குரூப்பில் அதே பாராட்டுக்கள் என் கூட பணி செய்தவர்களும் அதிகம் interest கொடுத்தார்கள். எல்லாப் புகழும் எனது கணவருக்குத்தான் போக வேண்டும். காரணம் முதன் முதலில் ஊக்கமளித்தவர் என் கணவர் தான்.


இந்த சமயத்தில்தான் ஒரு அதிசயம் நடந்தது. திருவண்ணாமலை  தடம் பதிக்கும் தளிர்கள் பன்னாட்டு மையம் திருவாசகம் எழுதுமாறு விடுத்திருந்த அழைப்பை youtube link இல் பார்த்தேன். கடவுள் நம்பிக்கை பக்தி அதிகம் கொண்டவள். எனவே நான் திருவாசகம் எழுத தொடங்கி விட்டேன். அது முதல் என் மனம் கொஞ்சம் அமைதி அடைந்தது. திருவண்ணாமலைக்கு திருவாசக திருவிழாவிற்கு வந்தேன். மனம் சந்தோஷமாக இருந்தது. எவ்ளோ சந்தோஷமாக இருந்தாலும் இந்த இடத்தில் அவர் இல்லையே என்ற கவலை வரும். இரவு  நேரங்களில் தான் கோலம் வரைவேன். அப்போதெல்லாம் என் கணவர் தூங்காமல் என்னுடனே இருப்பார்.




அதன் பின்னர் தடம்பதிக்கும் தளிர்களின் இயக்குனர் ரத்தினா செந்தில் குமார் அம்மா அவர்கள் என்னையும் தடம் பதிக்கும் தளிர்களில் ஒரு தளிராக இல்லை ஒரு கிளையாகவே என்னை சேர்த்து ‌விட்டார்கள். என் மனம் மிக சந்தோஷமாக இருந்தது. ஒருங்கிணைப்பாளராக என்னை இணைத்து என்னுடைய படங்களுக்கு ஒரு பெரிய அங்கீகாரம் தேடிக்கொடுத்துள்ளார்கள். அன்றாடம் என்னை ஊக்குவித்தது என்னுடைய படங்களை அனைத்து குழுவிலும் பதிவிட்டு எனக்கு மிகுந்த பெருமையை தேடிக் கொடுத்துள்ளார் அதற்கு நான் மிகுந்த நன்றிக் கடன் பட்டுள்ளேன் 


சீர்காழியில் எங்கோ ஒரு மூலையில் இருந்து என்னை உலக சாதனைக்கு கொண்டு சென்று youtube இல் படம் வரைய வைத்து முகம் தெரிய வைத்தார். 63 நாயன்மார்கள் உங்களால் வரைய முடியும். நீங்கள் வரையுங்கள் என கூறி என் மேல் நம்பிக்கை வைத்து வரைய வைத்தவர் அவர் தான். இந்த நன்றியை நான் என்றும மறக்க மாட்டேன். 63 நாயன்மார்கள் என ஐடியா கொடுத்தவரும் அவரே. ஏதோ ஒரு கடமைக்கு பொழுது போக்கிற்காக வரைந்து கொண்டிருந்த நான் இன்று முழு நேர வேலையாக செய்து கொண்டிருக்கிறேன் என்றால் அவர் தான் காரணம் என்று கூறி முடித்தார் இரெ. ராஜேஸ்வரி.


கலைக்கும், ஆர்வத்திற்கும், கற்றுக் கொள்வதற்கும் வயது ஒரு பொருட்டில்லை என்பதற்கு ராஜேஸ்வரி அவர்கள் ஒரு சிறந்த உதாரணம் என்பதில் சந்தேகமே இல்லை.

செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்

சமீபத்திய செய்திகள்

news

4 மாவட்டங்களுக்கு இன்று கனமழைக்கு வாய்ப்பு இருக்காம்... எந்தெந்த மாவட்டங்கள் தெரியுமா?

news

கதையளக்கும் மனநோயாளியாக மாறி வருகிறார் சீமான்.. திமுக கண்டனம்

news

யோவ் என்று விளித்து.. தவெக தலைவர் விஜய்க்குப் பதிலடி கொடுத்த திமுக ராஜீவ் காந்தி!

news

வாக்குறுதி எண் 456.. கொடுத்தது யாரு.. திமுகவிடம் எச்சரிக்கையாக இருங்கள்.. விஜய் பேச்சு

news

அம்மா அம்மான்னு சொல்லிட்டு.. அதிமுகவை அதன் கோட்டையில் வைத்து கடுமையாக விமர்சித்த விஜய்!

news

கல்வியில் மட்டுமல்ல பல்வேறு துறைகளில் தமிழகம் சிறந்து விளங்குகிறது: முதல்வர் மு.க.ஸ்டாலின்!

news

அண்ணா, எம்ஜிஆர் குறித்து இனியும் அநாகரீகமாக பேசினால்.. சீமானுக்கு டிடிவி தினகரன் எச்சரிக்கை

news

இது ஒரு சனியன்.. அது ஒரு சனியன்.. அண்ணா, எம்ஜிஆர் குறித்த சீமான் பேச்சால் சலசலப்பு!

news

தமிழன்னையே!

அதிகம் பார்க்கும் செய்திகள்