ஹைதராபாத்: சானியா மிர்ஸா தனது கணவர் சோயப் மாலிக்கை 8 மாதத்திற்கு முன்பே விவாகரத்து செய்து விட்டார். சோயப் மாலிக்கின் புதிய திருமண வாழ்க்கைக்கு அவர் வாழ்த்து தெரிவித்துள்ளார். சானியாவின் தனிப்பட்ட உணர்வுகளை அனைவரும் மதிக்க வேண்டும் என்று அவரது தங்கை ஆனம் மிர்ஸா கூறியுள்ளார்.
சோயப் மாலிக் 3வதாக திருமணம் செய்து கொண்டுள்ளார். ஏற்கனவே விவாகரத்தான பாகிஸ்தான் நடிகை சனா ஜாவேத்தை அவர் மணந்துள்ளார். இந்த விவாகரம் தொடர்ந்து இந்தியா மற்றும் பாகிஸ்தானில் பேசு பொருளாக இருந்து வருகிறது.

இந்த நிலையில், சானியா மிர்ஸாவின் தங்கை ஆனம் மிர்ஸா தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ஒரு பதிவு போட்டுள்ளார்.
அதில், சானியா மிர்ஸா தனது தனிப்பட்ட வாழ்க்கையை எப்போதும் பொது வெளியில் கொண்டு வந்ததில்லை. இருப்பினும் இப்போது அதுபற்றி பேசும் நிலை வந்துள்ளது. சோயப்பை அவர் 8 மாதங்களுக்கு முன்பே விவாகரத்து செய்து விட்டார். சோயப் தனது புதிய பயணத்தில் வெற்றி பெற வேண்டும் என்று அவர் வாழ்த்தியுள்ளார். மிகவும் உணர்வுப்பூர்வமான இந்த தருணத்தில் அவர் குறித்து யாரும் தேவையில்லாமல் ஊகம் செய்வதைத் தவிர்க்கவும், அவரது பிரைவசியை மதிக்க வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன் என்று கூறியுள்ளார் ஆனம்.
சானியா மிர்ஸாவின் திருமண வாழ்க்கை கசந்தது குறித்து பல்வேறு தகவல்கள் வெளியாகி வருகின்றன. இருவரும் பிரியும் முடிவுக்கு வந்து சில வருடங்கள் ஆகி விட்டதாகவும் கூறப்படுகிறது. உண்மையில் இந்தத் திருமணத்தை முடிவுக்குக் கொண்டு வரும் முடிவை சானியாதான் எடுத்ததாக சொல்கிறார்கள். கணவரின் போக்கை சரி செய்ய சானியா தீவிரமாக முயற்சித்ததாகவும், அது சரிப்பட்டு வராத காரணத்தால்தான் விவாகரத்து முடிவுக்கு சானியா வந்ததாகவும் சொல்லப்படுகிறது.
இஸ்லாமிய முறைப்படி பெண்கள் திருமண வாழ்க்கை பிடிக்காமல் போகும்போது சுயேச்சையாக விவாகரத்து தர முடியும். அதை, குலா என்று சொல்கிறார்கள். அந்த முறைப்படிதான் இந்தத் திருமணத்தை சானியா மிர்ஸா முடிவுக்கு கொண்டு வந்து விட்டதாக அவரது தந்தை நேற்று தெரிவித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
சானியாவின் மகனுக்கு தற்போது 5 வயதாகிறது. தனது தாயாருடன்தான் மகன் இஷான் வசித்து வருகிறான். தொடர்ந்து சானியாவிடமே அவன் வளர்ந்து வருவானா, என்ன என்பது குறித்து தெரிவிக்கப்படவில்லை. சானியா மிர்ஸாவின் அடுத்த கட்ட செயல்பாடுகள் குறித்தும் தெரிவிக்கப்படவில்லை.
நகைப்பிரியர்களுக்குப் பேரதிர்ச்சி: ஒரே நாளில் இரண்டு முறை உயர்ந்த தங்கம் விலை!
தியேட்டர்களை விழுங்கப் போகிறதா ஓடிடி.. OTT vs Theatre!
அவள் எழுகிறாள்.. அதனால் ஒளிர்கிறாள்.. She Rises, She Shines!
ஆட்சிக்கு வந்த 1728 நாட்களில் 4000 திருக்கோயில் குடமுழுக்குகள்: முதல்வர் மு.க.ஸ்டாலின் பதிவு!
அடுத்தடுத்து அதிர்ச்சி கொடுக்கும் திமுக...காங்கிரசின் கொந்தளிப்பிற்கு இது தான் காரணமா?
தனியா.. கெத்தா.. மாமல்லபுரத்தில் சொன்னது போல நடக்கப் போகிறாரா விஜய்?
விஜய் உடன் சேர்ந்தால் காங்கிரஸ் மீண்டும் ஆட்சிக்கு வரலாம்...ஆரூடம் சொல்லும் எஸ்ஏசி
கண்களின் பார்வையில்.. காதல் கொண்டேனே!
25 சீட்டுதானா.. அல்லது கூடுதலாக கிடைக்குமா.. எதிர்பார்ப்பில் காங்கிரஸ்.. என்ன நடக்கும்?
{{comments.comment}}