நியூயார்க்: அமெரிக்காவின் தெற்கு கரோலினா மாகாணத்தை சேர்ந்த 22 வயதான பெண்ணுக்கு நீர் அலர்ஜி உள்ளதாம். இதனால் இந்த பெண் குளிப்பதே இல்லையாம்.
சன் லைட், பாக்டீரியா, வைரஸ், உணவு, பூஞ்சை போன்றவற்றால் ஏற்படும் ஒவ்வாமையால் அலர்ஜி ஏற்படும் என்பதை கேள்விப்பட்டிருப்பீர்கள். ஆனா தண்ணில அலர்ஜி வரும் என்று கேள்விப்பட்டிருக்கிறீர்களா? என்னடா கொடுமை. புதுசு புதுசா டிசைன் டிசைனா நோய் வருது தானே யோசிக்கிறீங்க.
அமெரிக்காவைச் சேர்ந்த லோரன் மான்டெஃபுஸ்கோ. இவருக்கு வயது 22. இவர் அக்வாஜெனிக் யூர்டிகேரியா என்ற பிரச்சினையால் பாதிக்கப்பட்டுள்ளார். இது தண்ணீர் உடம்பில் பட்டால் சொரி போல் தோன்றும் படை நோயின் வெளிப்பாடு. அதாவது தண்ணீரை தொடர்ந்து பயன்படுத்துவதால் ஏற்படும் ஒவ்வாமையால் இந்த நோய் உருவாகிறது. இவ்வாறு தண்ணீரை பயன்படுத்துவதால் அரிப்பு ஏற்படுகிறது. இது மிகவும் அரிதான நோய். இதற்கு மருந்து கிடையாது. சிகிச்சையும் கிடையாது.
இது குறித்து மான்டபெஸ்கோ கூறுகையில்,பனிப்பொழிவு ஏற்படும் போது அல்லது தண்ணீரை பயன்படுத்தும் போது கடுமையான அரிப்பு ஏற்படும். இந்த அரிப்பு ஒரு மணி நேரம் வரை நீடிக்கும். முடிந்தவரை குளிப்பதை தவிர்க்க வேண்டும். இந்த விஷயத்தை தவிர்க்க வேறு வழியில்லை
நான் எனது தோலின் மேற்பரப்பில் ஆழமான அரிப்பை உணர்ந்தேன். இந்த அரிப்பு ஏற்படாமல் இருக்க என்ன செய்ய வேண்டும் என்று எனக்கு தெரியவில்லை. எனது பனிரெண்டாவது வயதில் தான் நீர் ஒவ்வாமையை முதன் முதலில் கவனித்தேன். பின்னர் பல ஆண்டுகாலம் என் நிலைமை மிகவும் மோசமாகவே இருந்தது. மூன்று வருடங்களுக்குப் பிறகு மருத்துவரிடம் சென்றேன். அப்போது நீர் ஒவ்வாமை பற்றி விவரித்தேன். மருத்துவர் தனக்கு H2O ஒவ்வாமை இருப்பதாகவும் அதனால் அரிப்பு ஏற்பட்டதாகவும் கண்டறிந்தார். பின்னர் இந்த ஒவ்வாமைக்கு எந்த சிகிச்சையும் இல்லை எனவும் கூறினார்.
இதனால் முடிந்தவரை குளிப்பதை தவிர்த்தேன். குளிர்ந்த காற்று வலியை அதிகரிக்கச் செய்யும் என்பதால், உடலைத் துடைப்பது அல்லது ஷேவிங் செய்வது போன்றவற்றை பயன்படுத்தி என்னை சுத்தப்படுத்த முயற்சித்தேன். முடிந்தவரை ஆடைகளை மாற்றிக் கொண்டே இருந்தேன். இதற்கும் தண்ணீரை பயன்படுத்துவதால் இன்னும் ஒவ்வாமை எதிர்வினையை ஏற்படுத்துகிறது. குளிக்காமல் இருப்பது அருவருப்பானது என்று நினைத்தேன் என்றார் அவர்.
.
மக்களின் வாழ்வாதாரமாக இருக்கும்.. சிந்து நதியை தடுத்து நிறுத்தும் முடிவை மாற்றுங்கள்.. சீமான்
ஆம்... மகளிருக்கு உரிமை வேண்டும்..!!
கோவை வந்த விஜய்க்கு பிரம்மாண்ட வரவேற்பு... தொண்டர்களின் ஆரவாரத்தால் ஸ்தம்பித்தது கோவை!
Sunday Special Veg dish.. மீன் குழம்புக்கு டஃப் தரும் கத்திரிக்காய் பலாக்கொட்டை புளிக்குழம்பு!
வலுக்கட்டாயமாக கடன் வசூலித்தால் 3ஆண்டு வரை சிறை.. சட்டசபையில் புதிய மசோதா தாக்கல்..!
தனுஷின் இட்லி கடை திரைப்படத்தின் படப்பிடிப்பு நிறைவு.. படக்குழு அதிகாரப்பூர்வ அறிவிப்பு..!
நடுநிலையான விசாரணைக்கு பாகிஸ்தான் தயாராக உள்ளது: பாகிஸ்தான் பிரதமர் ஷெபாஸ் ஷெரீப் அறிவிப்பு!
கல்வி தான் நமக்கான ஆயுதம்...கல்வியை மட்டும் விட்டுவிடவே கூடாது: முதல்வர் மு.க.ஸ்டாலின்!
மறைந்த போப் ஆண்டவர் உடலுக்கு.. ஜனாதிபதி முர்மு இன்று அஞ்சலி.. குவியும் உலக தலைவர்கள்..!
{{comments.comment}}