திருவனந்தபுரம்: சபரிமலையில், 18-ஆம் படியேறி சுவாமி ஐயப்பன் தரிசனம் செய்ய வேண்டும் என்பது என் சிறு வயது கனவு. 50 ஆண்டுகால வேண்டுதல் நிறைவேறியது என பசுமை தாயகம் தலைவர் சௌமியா அன்புமணி நெகிழ்ச்சியாக பதிவிட்டுள்ளார்.
கேரளாவில் அமைந்துள்ள உலகப் பிரசித்தி பெற்ற ஐயப்பன் கோவிலில் மாலை அணிந்து இருமுடி கட்டி ஒரு மண்டலம் விரதம் இருந்து ஐயப்பனை தரிசிக்கும் வழக்கம் நடைமுறையில் உள்ளது.அதன்படி ஒவ்வொரு வருடமும் கார்த்திகை மாதம் தொடங்கி விட்டாலே சுவாமி ஐயப்பனை தரிசிக்க மாலை அணிவித்து விரதம் இருந்து பல்வேறு பகுதிகளில் இருந்தும் பக்தர்கள் சாரை சாரையாக சென்று ஐயப்பனை தரிசித்து வருகின்றனர். அதே சமயத்தில் முக்கிய தமிழ் மாத தொடக்கத்தில் சபரிமலை ஐயப்பன் கோவில் நடை திறக்கப்பட்டு சிறப்பு பூஜைகளும் நடைபெறுவது வழக்கம்.
இதனைக் காணவும் ஏராளமான பக்தர்கள் சுவாமி ஐயப்பனின் தரிசனம் செய்து வருகின்றனர். ஆண்கள் மட்டுமே தரிசித்து வரும் கன்னி சாமியாக இருக்கும் இத்தல இறைவனை பத்து வயதிற்குட்பட்ட சிறு குழந்தைகளும், 50 வயதுக்கு மேற்பட்ட பெண்களும் மட்டுமே தரிசிக்க அனுமதி அளிக்கப்படுகிறது. 50 வயதுக்கு மேற்பட்ட பெண்கள் மற்றும் 10 வயதுக்கு மேற்பட்ட கன்னிப் பெண்களுக்கும் அனுமதி அளிப்பதில்லை.
இதனால் பொதுவாக வாழ்வில் ஒரு தடவையாவது ஐயப்பன் முகத்தை தரிசிக்க மாட்டோமா.. இந்த வாய்ப்பு கிடைக்காதா என ஆவலுடன் ஏங்கும் பெண்கள் அதிகம்.அந்த வகையில் பாட்டாளி மக்கள் கட்சியின் தலைவர் அன்புமணியின் மனைவியான, பசுமைத்தாயகம் தலைவர் சௌமியா அன்புமணி என் 50 ஆண்டுகால வேண்டுதல் நிறைவேறியது.. சாமியே சரணம் ஐயப்பா.. என நெகழ்ச்சியாக பதிவிட்டுள்ளார்.
இதுகுறித்து தனது எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டு கூறியதாவது: சபரிமலையில் பதினெட்டாம் படி ஏறி சுவாமி ஐயப்பனை தரிசனம் செய்ய வேண்டும் என்பது எனது சிறிய வயது கனவு. என்50 ஆண்டுகால வேண்டுதல் தற்போது நிறைவேறியது. சாமியே சரணம் ஐயப்பா.. என பதிவிட்டு, அவர் பதினெட்டாம் படி வந்து உணர்ச்சிபூர்வமாக கண்கலங்கி அழும் நெகிழ்ச்சியான வீடியோ ஒன்றையும் வெளியிட்டுள்ளார்.
அந்த வீடியோவில் சௌமியா அன்புமணி மாலை அணிந்து, கருப்பு உடை அணிந்து தலையில் இருமுடி சுமந்தபடி சாமி ஐயப்பனை தரிசிக்க பாதயாத்திரை சென்றுள்ளார். இறுதியாக மலையில் ஏறி பதினெட்டாம் படி அடிவாரத்தில் வந்த உடனையே நல்லபடியாக ஐயனை தரிசிக்க வந்து விட்டோம் என எண்ணி உணர்ச்சிபூர்வமாக கண்கலங்கி கதறி அழுக ஆரம்பித்து விட்டார். பின்னர் இருமுடி சுமந்து கொண்டே சாமியே சரணம் ஐயப்பா என்ற கோஷம் முழங்க 18 படிகளில் ஏறினார். இது தொடர்பான வீடியோ சோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறது.
இந்த வீடியோ தற்போது பார்ப்போரையும் மனம் நெகிழச் செய்து கண் கலங்க வைத்துள்ளது.
முட்டி மோதிய சென்னை சூப்பர் கிங்ஸ்.. மீண்டும் தோல்வி.. தட்டித் தூக்கிய ஹைதராபாத்!
ஆளுநர் ஆர். என். ரவி.. பாஜக தலைவராக வந்து அரசியல் செய்யலாமே.. அமைச்சர் கோவி. செழியன்
துணைவேந்தர்களுக்கு மிரட்டல்.. முதல்வர் ஸ்டாலின் அச்சப்படுகிறாரா.. ஆளுநர் ஆர். என். ரவி கேள்வி
ஏ.ஆர்.ரஹ்மான் மீது காப்புரிமை வழக்கு... ரூ.2 கோடி செலுத்த டெல்லி உயர்நீதிமன்றம் உத்தரவு!
பாகிஸ்தானியர்களை வெளியேற்றுங்கள்.. மாநில அரசுகளுக்கு மத்திய அமைச்சர் அமித்ஷா அறிவுறுத்தல்!
ஒரு வருஷத்துக்கு முன்பு என்னைப் புகழ்ந்தவர்களா இவர்கள்??.. ஒலிம்பியன் நீரஜ்சோப்ரா பெரும் வேதனை!
எல்லைக் கட்டுப்பாட்டுக் கோட்டுப் பகுதியில்.. துப்பாக்கிச் சூட்டில் இறங்கிய பாக்.. இந்தியா பதிலடி
முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கு மே 3ம் தேதி பாராட்டு விழா: அமைச்சர் கோவி செழியன் அறிவிப்பு
ஆளுநர் ஆர். என். ரவி கூட்டிய ஊட்டி மாநாடு.. அரசு பல்கலைக்கழக துணைவேந்தர்கள் பங்கேற்கவில்லை
{{comments.comment}}