சென்னை: சென்னை போலீஸார் கொடுத்த சம்மனை வாங்க மறுத்து விட்டு நடிகை கஸ்தூரி தலைமறைவாகி விட்டதாக பரபரப்பு கிளம்பியுள்ளது.
சென்னையில் சமீபத்தில் பிராமணர்கள் பாதுகாப்பு தொடர்பான கூட்டம் நடந்தது. அதில் கலந்து கொண்டு பேசிய கஸ்தூரி தெலுங்கர்கள் குறித்துக் கூறிய கருத்துக்கள் சர்ச்சையை ஏற்படுத்தின. பல்வேறு தரப்பினரும் கண்டனம் தெரிவித்தனர். பல்வேறு தெலுங்கு சங்கங்கள் சார்பில் போலீஸில் புகாரும் தரப்பட்டது. சென்னையிலும் நான்கு பிரிவுகளின் கீழ் கஸ்தூரி மீது போலீஸார் வழக்குப் பதிவு செய்தனர்.

இந்த வழக்கில் விசாரணைக்கு ஆஜராகுமாறு நடிகை கஸ்தூரிக்கு போலீஸார் சம்மன் அனுப்பினர். ஆனால் அவர் சம்மனைப் பெறவில்லை. அவரது வீட்டும் பூட்டப்பட்டிருப்பதாக கூறப்படுகிறது. அவரது செல்போனும் ஆனில் இல்லையாம். அதுவும் ஸ்விட்ச் ஆப் ஆகி விட்டதாக செய்திகள் தெரிவிக்கின்றன. நடிகை கஸ்தூரி எங்கு சென்றார் என்று தெரியவில்லை. அவர் சென்னையில் வேறு எங்காவது தங்கியுள்ளாரா அல்லது ஆந்திரா போயுள்ளாரா என்றும் தெரியவில்லை.
கஸ்தூரியைக் கண்டுபிடிக்கவும், அவரிடம் சம்மனை வழங்கி விசாரணை நடத்தவும் சென்னை போலீஸார் தீவிர முயற்சி மேற்கொண்டுள்ளதாக தெரிகிறது. மறுபக்கம் தான் கைது செய்யப்படும் சாத்தியக் கூறுகளைத் தவிர்க்க முன்ஜாமின் கோரி கோர்ட்டை கஸ்தூரி அணுகுவாரா என்ற எதிர்பார்ப்பும் எழுந்துள்ளது.
செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்
தீயசக்தி திமுக.,விற்கும் தவெக.,விற்கும் தான் போட்டி...ஈரோட்டில் விஜய் மாஸ் பேச்சு
தமிழகத்தை ஆளப்போவது புரட்சி தளபதி விஜய் தான்: செங்கோட்டையன்
எதிர்மறை எண்ணங்கள்.. எப்போதும் பிரகாசமான எதிர்காலத்தைத் தராது!
மக்களை காக்க குரல் கொடுக்கச் சொன்னால், டெல்லியை குளிர்விக்க அறிக்கை விடுகிறார்:முதல்வர் முக ஸ்டாலின்
கரூருக்கு வரமாட்டீங்களா?...ஈரோட்டில் விஜய்க்கு எதிரான போஸ்டர்களால் பரபரப்பு
12 ராசிகளுக்குமான இன்றைய ராசிபலன் டிசம்பர் 18, 2025... இன்று நல்ல காலம் பிறக்குது
தொடர்ந்து உயர்ந்து வரும் தங்கம் வெள்ளி விலை... இதோ இன்றைய விலை நிலவரம்!
மார்கழி 03ம் நாள் வழிபாடு : திருப்பாவை, திருவெம்பாவை பாடல் 03 வரிகள்
திருவல்லிக்கேணி பார்த்த சாரதி கோவிலில் மார்கழி,15 சொர்க்க வாசல் திறப்பு
{{comments.comment}}