திருச்செந்தூர்: திருச்செந்தூர் முருகன் கோயிலில் கந்த சஷ்டி விழாவில் முருகனை தரிசனம் செய்ய, விரைவு தரிசன கட்டணமாக ரூ.1000 நிர்ணயம் செய்து கோவில் நிர்வாகம் அறிவித்துள்ளது. இந்த அறிவிப்பு பக்தர்களிடையே அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.
திருச்செந்தூர் முருகன் கோயிலில் ஒவ்வொரு ஆண்டும் கந்த சஷ்டி விழா நடைபெறும். இந்த ஆண்டு இந்த விழா நவம்பர் 2ம் தேதி தொடங்கி, விழாவின் முக்கிய நிகழ்வான சூரனை முருகன் வதை செய்யும் நிகழ்ச்சி நவம்பர் 7ம் தேதி நடைபெறுகிறது. இந்த விழா நடைபெறும் 6 நாட்களும் பக்தர்கள் தங்கியிருந்து முருகனை தரிசனம் செய்து வருவார்கள். இந்த விழாவில் கலந்து கொள்ள பக்தர்கள் வெளி மாவட்டம், வெளி மாநிலங்கள் மற்றும் வெளி நாடுகளில் இருந்தும் வந்து முருகனை தரிசனம் செய்வார்கள்.

இப்படி வரும் பக்தர்கள் கூட்ட நெரிசலில் சிக்காமல் சாமியை தரிசனம் செய்ய, சிறப்பு தரிசனத்திற்கு கட்டணம் வசூலிக்கப்படும். அத்தகைய கட்டணத்திற்கு இந்த ஆண்டு ரூ.1000 என கோவில் நிர்வாகம் நிர்ணயம் செய்துள்ளது. நீதிமன்ற உத்தரவின்படி சிறப்பு தரிசனத்திற்கு ரூ.100 தான் வசூலிக்க வேண்டும் என்று கூறப்பட்டுள்ளது. ஆனால் இந்தாண்டு ரூ.1000 நிர்ணயிக்கப்பட்டுள்ளது பக்தர்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
ரூ. 5.15 கோடி காணிக்கை வசூல்
இதற்கிடையே, திருச்செந்தூர் முருகன் கோவிலில் செப்டம்பர் மாதத்திற்கான உண்டியல் காணிக்கை எண்ணும் பணி நேற்று நடைபெற்று வந்தது. இதில் உண்டியல் காணிக்கை மூலம் ரூபாய் 5.15 கோடி வருமானம் வசூலாகி இருப்பதாக கோயில் நிர்வாகம் தெரிவித்துள்ளது. அதேபோல் தங்கம் 2 கிலோ 352 கிராமும், வெள்ளி 41 கிலோ 998 கிராமும், 1589 வெளிநாட்டு கரன்சிகளும் பக்தர்கள் காணிக்கையாக செலுத்தியுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்
அதிமுக - பாஜக கூட்டணி: யார் யாருக்கு எத்தனை சீட்.. தொகுதிப் பங்கீடு பேச்சுவார்த்தை தொடங்கியது!
கால் வைக்கிற இடமெல்லாம் கன்னிவெடியா இருக்கே...மலேசியாவில் அரசியல் பேச விஜய்க்கு தடை!
புத்தகப் பிரியர்களின் கவனத்திற்கு.. 49-வது சென்னை புத்தகத் திருவிழா தேதி மாற்றம்!
சார்பு ஆய்வாளர் தேர்வில்... தமிழ் கேள்விகளை நீக்கியுள்ள திமுக அரசிற்கு கண்டனம்: அண்ணாமலை
மாணவர்களுக்கு ஓர் அரிய வாய்ப்பு... விஜய் மெரிட் ஸ்காலர்ஷிப் திட்டம்...பிப்.28 வரை விண்ணப்பிக்கலாம்!
பொங்கல் பரிசுடன் ரூ.5000 வழங்க வேண்டும்...எடப்பாடி பழனிச்சாமி வலியுறுத்தல்
உதயநிதியை முதல்வராக்குவதே திமுக.,வின் முக்கிய நோக்கம்...நயினார் நாகேந்திரன் குற்றச்சாட்டு
வி..யில் தொடங்கும் தொகுதியில் போட்டியிடுவாரா விஜய்??.. பரபரக்கும் புதிய தகவல்!
பெங்களூருவின் அழகிய கலைப் பொக்கிஷம்.. பனசங்கரி சிற்பப் பூங்கா
{{comments.comment}}