சென்னை: ஹைதராபாத்தில் தலைமறைவாக பதுங்கியிருந்த நடிகை கஸ்தூரி நேற்று கைது செய்யப்பட்ட நிலையில் இன்று அவரை சென்னைக்கு தனிப்படை போலீஸார் கொண்டு வந்து கோர்ட்டில் ஆஜர்படுத்தினர். அவரை நவம்பர் 29ம் தேதி வரை சிறையில் அடைக்க நீதிமன்றம் உத்தரவிட்டது.
சென்னையில் நடந்த பிராமண சமுதாயத்தினர் பங்கேற்ற போராட்ட கூட்டத்தில் கலந்து கொண்டு பேசும்போது, தெலுங்கு பேசும் பெண்கள் குறித்து நடிகை கஸ்தூரி தெரிவித்த கருத்துக்கள் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தின. அவர் மீது சென்னை, மதுரை, கோவையில் தெலுங்கு சங்கங்கள் சார்பில் புகார்கள் தரப்பட்டன. இதையடுத்து பல்வேறு பிரிவுகளில் கஸ்தூரி மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டது.

இதைத் தொடர்ந்து அவர் முன்ஜாமின் கோரி மதுரை உயர்நீதிமன்றக் கிளையை அணுகியபோது முன்ஜாமின் கிடைக்கவில்லை. இந்த நிலையில் தலைமறைவாக இருந்து வந்த கஸ்தூரியைக் கைது செய்ய போலீஸார் தீவிரம் காட்டினர். இந்தப் பின்னணியில் ஹைதராபாத்தில் ஒரு தயாரிப்பாளரின் வீட்டில் கஸ்தூரி அடைக்கலம் புகுந்திருப்பதாக கிடைத்த தகவலின் பேரில் சென்னை எழும்பூர் போலீஸார் அங்கு விரைந்து சென்று நேற்று கஸ்தூரியைக் கைது செய்தனர்.
கைது செய்யப்பட்ட கஸ்தூரி இன்று சென்னைக்குக் கொண்டு வரப்பட்டார். அவரை சிந்தாதிரிப்பேட்டை காவல் நிலையத்தில் வைத்து முதலில் போலீஸார் விசாரணை நடத்தினர். இதையடுத்து அவர் எழும்பூர் நீதிமன்ற, நீதித்துறை நடுவர் ரகுபதி ராஜா முன்னிலையில் ஆஜர்படுத்தப்பட்டார். விசாரணைக்குப் பின்னர் கஸ்தூரியை நவம்பர் 29ம் தேதி வரை நீதிமன்றக் காவலில் வைக்க நீதிபதி உத்தரவிட்டார். இதையடுத்து கஸ்தூரி புழல் சிறைக்குக் கொண்டு செல்லப்பட்டார்.
செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்
இப்பூவுலகில் அழகில் சிறந்த பெண்கள் எங்கே ??
மத்தியில் பிரதமர் மோடி தலைமையில் ஆட்சி..தமிழ்நாட்டில் அதிமுக ஆட்சி: எடப்பாடி பழனிச்சாமி திட்டவட்டம்
தாத்தா பாட்டிகள் தினம்.. கொண்டாடுவோம் இந்தக் குழந்தைகளையும்!
சத்தம் ஏதுமின்றி... மௌனமாய் விழிகளில்!
திருப்பூரில் பரபரப்பு... கவிஞர் வைரமுத்து பங்கேற்ற நிகழ்ச்சியில் காலணி வீச்சு
விநாயகப் பெருமானை வழிபட்டு.. தடைகள் நீங்கி வெற்றி பெற.. வர சதுர்த்தி!
ஜெட் வேகத்தில் உயர்ந்த தங்கம் இன்று சற்று குறைந்தது... இதோ இன்றைய விலை நிலவரம்!
மக்கள் ஆதரவை இழந்து விட்டது திமுக.. அடுத்து தேசிய ஜனநாயகக் கூட்டணி ஆட்சிதான் - பாஜக
ஜனவரி 25 விஜய் தலைமையில் தவெக செயல் வீரர்கள் கூட்டம்
{{comments.comment}}