பசும்பொன் : பசும்பொன் முத்துராமலிங்க தேவர் நினைவிடத்தில் மூவேந்தர் முன்னேற்ற கழக தலைவர் ஸ்ரீதர் வாண்டையர் திடீரென தர்ணாவில் ஈடுபட்டதால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது. அவரை செங்கோட்டையன் உள்ளிட்ட தலைவர்கள் சமாதானப்படுத்தி அனுப்பி வைத்துள்ளனர்.
பசும்பொன் முத்துராமலிங்க தேவரின் குருபூஜை இன்று கொண்டாடப்படுகிறது. இதனை முன்னிட்டு ராமநாதபுரம் மாவட்டம் பசும்பொன்னில் இருக்கும் அவரது நினைவிடத்தில் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின், அமைச்சர்கள், அதிமுக பொதுச் செயலாளர் இபிஎஸ் உள்ளிட்ட பல்வேறு அரசியல் கட்சி தலைவர்களும் மாலை அணிவித்து அஞ்சலி செலுத்தி வருகின்றனர். இந்நிலையில் இன்று மூவேந்தர் முன்னேற்ற கழகத்தின் தலைவர் ஸ்ரீதர் வாண்டையரும் பசும்பொன்னிற்கு அஞ்சலி செலுத்துவதற்காக சென்றார்.
ஸ்ரீதர் வாண்டையர் அஞ்சலி செலுத்த சென்ற போது அங்கிருந்த பூசாரிகளுக்கும் ஸ்ரீதர் வாண்டையாருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. இதில் ஸ்ரீதர் வாண்டையர் அங்கிருந்த பூசாரி ஒருவரை தாக்கியதால் பரபரப்பு ஏற்பட்டது. இரு தரப்பு இடையே வாக்குவாதம் ஏற்பட்ட நிலையில், ஸ்ரீதர் வாண்டையார், பசும்பொன் முத்துராமலிங்க தேவர் நினைவிடத்திலேயே அமர்ந்து தர்ணாவில் ஈடுபட்டார். போலீசார் அவரை சமாதானப்படுத்த முயன்றும், அவர் அங்கிருந்து எழுந்து செல்ல மறுத்து விட்டார்.

அந்த நேரமாகப் பார்த்து தேவருக்கு அஞ்சலி செலுத்துவதற்காக வந்த செங்கோட்டையன், டிடிவி தினகரன் ஆகியோர் ஸ்ரீதர் வாண்டையர் மற்றும் பூசாரிகள் தரப்பு இடையே நடந்த மோதலைக் கேள்விப்பட்டு, சமரசம் பேசி, ஸ்ரீதர் வாண்டையரை சமாதானம் செய்து, அங்கிருந்து அனுப்பி வைத்தனர். ஸ்ரீதர் வாண்டையரின் போராட்டம் காரணமாக அங்கு சிறிது நேரம் சலசலப்பு ஏற்பட்டது.
ஸ்ரீதர் வாண்டையரின் மூவேந்தர் முன்னேற்ற கழகம் ஆரம்பத்தில் அதிமுக கூட்டணியில் இருந்து வந்தது. பிறகு அங்கிருந்து விலகி, கடந்த ஆண்டு நடைபெற்ற லோக்சபா தேர்தலின் போது இந்தியா கூட்டணியில் இணைந்து, அவர்களுக்கு ஆதரவாக பிரச்சாரம் செய்து வந்தது குறிப்பிடத்தக்கது.
இன்றைக்கு மழை வருமா வராதா? எங்கெல்லாம் மழை வரும்... இதோ வானிலை கொடுத்த அப்டேட்!
எடப்பாடி பழனிச்சாமி தான் எங்கள் எதிரி.. ஓபிஎஸ், டிடிவி தினகரன் ஒன்றிணைந்து பகிரங்க பேட்டி
கரூர் அதிர்ச்சியிலிருந்து மீண்டுட்டாரா விஜய்.. சிறப்பு பொதுக்குழுவால்.. தொண்டர்களிடையே உற்சாகம்
பசும்பொன் முத்துராமலிங்கத் தேவர் குருபூஜை.. முதல்வர் மு.க.ஸ்டாலின், எடப்பாடி பழனிச்சாமி அஞ்சலி
இந்தியாவில்.. தேர்தல் மூலம் தேர்ந்தெடுக்கப்பட்ட 14 லட்சம் பெண் பிரதிநிதிகள்.. பி.வில்சன் பெருமிதம்
திமுக ஆட்சியில் மருத்துவர் இல்லாததால் தொடரும் உயிர்பலி: நயினார் நகேந்திரன் வேதனை!
தேவர் ஜெயந்தி விழா... முத்துராமலிங்க தேவருக்கு மனமார்ந்த அஞ்சலி: பிரதமர் மோடியின் பதிவு!
சமூக ஒற்றுமை, மத நல்லிணக்கத்திற்காகத் தன்னை அர்ப்பணித்த அய்யா முத்துராமலிங்கத் தேவர்: விஜய்
கல்வித்துறையில் தமிழகத்தை மிகவும் பின்தங்கிய நிலைக்குத் தள்ளியுள்ளது திமுக அரசு: அண்ணாமலை
{{comments.comment}}