இந்தியா பக்கம் வராதீங்க.. அப்புறம் அடி தாங்கமாட்டீங்க!.. பாக். அணிக்கு ஸ்ரீகாந்த் எச்சரிக்கை!

Jan 28, 2026,11:54 AM IST

சென்னை: இந்திய வீரர்கள் தற்போது விளையாடும் பார்மைப் பார்த்தால் பாகிஸ்தான் அணி இங்கு வராமல் இருப்பதே அவர்களுக்கு நல்லது. இல்லாவிட்டால் கொழும்பில் சிக்ஸர் அடித்தால் சென்னையில்தான் வந்து விழும். எனவே பாகிஸ்தான் வராமல் இருப்பதே நல்லது என்று முன்னாள் கேப்டன் ஸ்ரீகாந்த் எச்சரிக்கை கலந்த அட்வைஸ் கொடுத்துள்ளார்.

  

பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியத்தின் தலைவர் மொஹ்சின் நக்வி, கிரிக்கெட்டையும் அரசியலையும் தேவையில்லாமல் கலந்து குழப்புவதை வழக்கமாகக் கொண்டுள்ளார். வங்கதேச அணி டி20 உலகக்கோப்பையில் இருந்து நீக்கப்பட்டதற்கு எதிர்ப்புத் தெரிவிப்பதாகக் கூறி, பாகிஸ்தானும் 2026 உலகக்கோப்பையில் இருந்து விலகக்கூடும் என அவர் சமீபத்தில் ஒரு மிரட்டலை விடுத்திருந்தார்.


நக்வியின் இந்த அரசியல் நாடகத்திற்கு, இந்திய அணியின் முன்னாள் ஜாம்பவான் கிருஷ்ணமாச்சாரி ஸ்ரீகாந்த் தனது பாணியில் மிகக் கடுமையான பதிலடி கொடுத்துள்ளார்.




இந்திய அணி தற்போது விளையாடி வரும் அதிரடி ஆட்டத்தைக் கண்டு உலக நாடுகளே மிரண்டு போயுள்ளன. இதனைச் சுட்டிக்காட்டிய ஸ்ரீகாந்த், பாகிஸ்தான் அணி இந்தியாவுக்கு வராமல் இருப்பதே அவர்களுக்கு நல்லது என எச்சரித்துள்ளார். இது குறித்து அவர் தனது யூடியூப் சானலில் பேசும்போது கூறுகையில், இந்தியா அடிக்கும் அடியைப் பார்த்தால், மற்ற அணிகள் கோப்பை உங்களுக்கே இருக்கட்டும், நாங்க வரல என்று ஓடிவிடும் போலிருக்கிறது. 


நக்வி சொன்னது போலவே பாகிஸ்தான் அணி வராமல் இருப்பதே அவர்களுக்கு கௌரவம். மீறி வந்தால் மைதானத்தில் பலத்த அடி விழும். கொழும்பில் அடிக்கும் சிக்ஸர் மெட்ராஸில் வந்து விழும் அளவுக்கு இந்திய வீரர்கள் தெறிக்கவிடுகிறார்கள். ஏதாவது ஒரு சாக்கு சொல்லிவிட்டு வீட்டிலேயே இருந்துவிடுங்கள், இல்லையென்றால் சிதறிவிடுவீர்கள் எனத் தன் யூடியூப் பக்கத்தில் கிண்டலாகவும் ஆவேசமாகவும் பேசியுள்ளார் ஸ்ரீகாந்த்.


ஒருபுறம் உலகக்கோப்பையில் இருந்து விலகுவோம் என நக்வி மிரட்டினாலும், மறுபுறம் பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் டி20 உலகக்கோப்பைக்கான தனது அணியை அறிவித்துள்ளது. ஆனால், இந்தியாவிற்குச் சென்று விளையாட தங்களுக்கு இன்னும் பாகிஸ்தான் அரசின் அனுமதி கிடைக்கவில்லை என்றும், பாகிஸ்தான் அரசு என்ன சொல்கிறதோ அதைக் கேட்போம் என்றும் கூறி நக்வி மீண்டும் ஒரு மழுப்பலான நிலைப்பாட்டை எடுத்துள்ளார்.


டி 20 உலகக் கோப்பைப் போட்டியை இந்தியாவும், இலங்கையும் இணைந்து நடத்தவுள்ளன. இந்தத்  தொடரில் தாங்கள் விளையாடும் போட்டிகளை இலங்கைக்கு மாற்ற வேண்டும் என்று வங்கதேசம் வம்பு செய்து வந்தது. அதை சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் ஏற்கவில்லை நிராகரித்து விட்டது என்பது நினைவிருக்கலாம்.

செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்

சமீபத்திய செய்திகள்

news

தென்றலே... என் தொலைந்து போன நிழலே!

news

இந்தியா பக்கம் வராதீங்க.. அப்புறம் அடி தாங்கமாட்டீங்க!.. பாக். அணிக்கு ஸ்ரீகாந்த் எச்சரிக்கை!

news

சேலம் அங்காள பரமேஸ்வரி ஆலயம் மாசி திருவிழா கொடியேற்றம் கோலாகலம்!

news

அடிமட்ட மக்களுடன் நெருக்கமாக இருந்தவர் அஜீத் பவார்.. பிரதமர் மோடி இரங்கல்

news

மகாராஷ்டிரா துணை முதல்வர் அஜீத் பவார்.. விமான விபத்தில் உயிரிழப்பு!

news

சரத் பவார் - அஜீத் பவார்.. குரு சிஷ்யராக.. தந்தை மகனாக.. நெகிழ வைத்த உறவு!

news

மகாராஷ்டிராவை அதிர வைத்த அஜீத் பவார் விமான விபத்து.. மறக்க முடியாத தலைவர்!

news

தமிழ்நாடு தலைகுனியாது.. 234 தொகுதிகளிலும்.. பிரச்சாரத்தைத் தொடங்கும் திமுக

news

விஜய்யின் நிலைப்பாடு என்ன என புரியவில்லை... செங்கோட்டையன் விவகாரம் குறித்து டிடிவி தினகரன் விளக்கம்

அதிகம் பார்க்கும் செய்திகள்