சென்னை : இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர்களில் ஒருவரான நல்லகண்ணுவின் நூற்றாண்டு விழாவை முன்னிட்டு அவர் பிறந்த தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள ஸ்ரீவைகுண்டம் அரசு மருத்துவமனைக்கு அவரது பெயரை வைக்க உள்ளதாக தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார்.
இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர்களில் ஒருவரான நல்லகண்ணு, தூத்துக்குடி மாவட்டம் ஸ்ரீவைகுண்டத்தில் 1925ம் ஆண்டு பிறந்தார். தன்னுடைய 18 வயதிலேயே இந்திய கம்யூனிஸ்ட் கட்சியில் இணைந்தார். அதற்கு பிறகு விவசாய தொழிலாளர்கள், இந்திய பொதுவுடைமை சங்கம் உள்ளிட்ட பல சங்கங்களின் தலைவராக இருந்துள்ளார். அரசியல் மற்றும் பொது வாழ்க்கையில் பல சேவைகளை ஆற்றிய இவர் தமிழக அரசின் அம்பேத்கர் விருது உள்ளிட்ட பல விருதுகளை பெற்றுள்ளார். அம்பேத்கர் விருதுடன் வழங்கப்பட்ட ரூ. ஒரு லட்சம் ரொக்க பணத்தில் பாதியை கட்சிக்கும், மீதமுள்ள தொகையை விவசாய தொழிலாளர் சங்கத்திற்கும் அளித்தவர் நல்லகண்ணு.

நல்லகண்ணுவின் 100வது பிறந்த நாள் இன்று கொண்டாடப்படுகிறது. இதற்காக சென்னையில் ஏற்பாடு செய்யப்பட்ட விழாவில் கலந்து கொண்ட முதல்வர் மு.க.ஸ்டாலின், நல்லகண்ணுவிற்கு பொன்னாடை போர்த்தி வாழ்த்து தெரிவித்ததுடன், திருவள்ளுவர் சிலை ஒன்றையும் அவருக்கு அன்பளிப்பாக வழங்கினார். பிறகு விழாவில் பேசிய முதல்வர் மு.க.ஸ்டாலின், பொதுவுடைமை இயக்கத்திற்கு மட்டுமின்றி நல்லகண்ணுவுக்கும் நூற்றாண்டு. தோழர் நல்லகண்ணுவை வாழ்த்த வரவில்லை. அவரிடம் வாழ்த்து பெற வந்தேன்.
திராவிட மாடல் ஆட்சி நிறைவேற்றிக் கொண்டிருக்கக் கூடிய திட்டங்களுக்கு உறுதுணையாக விளங்கிக் கொண்டிருப்பவர் ஐயா நல்லகண்ணு. எங்களைப் போன்ற இளைஞர்களுக்கு வழிகாட்டிட வேண்டும் என அவரை கேட்டுக் கொள்கிறேன். அவர் பிறந்த ஸ்ரீவைகுண்டம் பகுதியில் உள்ள அரசு மருத்துவமனைக்கு அவரது பெயர் சூட்டப்படும். அந்த மருத்துவமனையும் மேம்படுத்தப்படும் என அறிவித்தார்.
செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்
World Daughters Day: இரவில் நீலாம்பரியாய் தாயாகி தாலாட்டுபவள் அவள்!!
சர்வதேச மகள்கள் தினம்.. மகாலட்சுமியின் ரூபமே பெண் குழந்தைகள்!
மகள் இல்லாக் குறையைப் போக்க வந்த மருமகள்!
தென்தமிழ் தலையங்கம்: சுற்றுலா.. மனிதத்தையும் தேசத்தையும் இணைக்கும் பாலம்!
மகாளயபட்சம்.. முன்னோர்களுக்குத் தர்ப்பணம், அன்னதானம் செய்வது சிறப்பு!
முதல்வர் ரிவ்யூ கூட்டம் நடத்தவில்லை; Reels தான் எடுத்துள்ளார்! - மு.க.ஸ்டாலின் கடும் தாக்கு
ஜெம் வீரமணி போக்சோ வழக்கு: சாந்தி மற்றும் கணவருக்கு ஜாமீன் வழங்க காவல்துறை எதிர்ப்பு
மின்சாரத் துறை அமைச்சர் நிர்மல் குமார் கலந்து கொண்ட விழாவில் மின்தடை
தென்தமிழ்த் தலையங்கம்: உலகம் இதற்கு முன்பு எதைப் பார்த்தெல்லாம் பயந்திருக்கிறது?
{{comments.comment}}