- சுமதி சிவக்குமார்
கோயம்புத்தூர்: இந்திய மாணவர்களுக்கு ஓவரால் பர்சனாலிட்டி டெவலப்மெண்ட் வேண்டும் என்று இஸ்ரோ தலைவர் டாக்டர் வி. நாராயணன் கூறியுள்ளார்.
கோவை நவக்கரையில் உள்ள ஏ. ஜே. கே கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் தேசிய அளவிலான சிறந்த கல்வியாளர் விருதுகள் வழங்கும் விழா நடைபெற்றது. அதில் கலந்து கொண்டு சிறப்பாக பணியாற்றிய ஆசிரியர்கள், பேராசிரியர்கள் மற்றும் பள்ளி கல்வியியல் முதல்வர்கள் என இவர்களுக்கு இஸ்ரோ தலைவர் டாக்டர் வி. நாராயணன் விருதுகள் வழங்கி கௌரவித்தார்.
பின்னர் அவர் செய்தியாளர்களிடம் பேசுகையில், இந்த நாள் மிகவும் மகிழ்ச்சியான நாளாகும். ஏ.ஜே.கே கல்வி நிறுவனத்தின் சார்பாக தமிழ்நாடு, கர்நாடகா, கேரளா மற்றும் பாண்டிச்சேரி என நான்கு மாநிலங்களில் இருந்தும் மாணவர்களுக்கு சிறப்பு பணியாற்றிய ஆசிரியர்களுக்கு என் கரங்களால் விருது அளிப்பதில் மகிழ்ச்சி.
இந்த நிறுவனம் மறைந்த விலங்கியல் துறை விஞ்ஞானி டாக்டர் லால் மோகன் அவர்கள் நினைவாக நடைபெறுகிறது. அதுவும் நிறுவனத்தின் தலைவர் அஜித் குமார் லால் மோகன் அவர்கள் தலைமையில் நடைபெற்றது சிறப்பானது. தனது தந்தையின் நினைவாக இந்த நிகழ்ச்சியை சிறப்பாக செய்துள்ளார்.
இந்திய விண்வெளி திட்டங்கள் நமது பிரதமரின் கீழ் பெரிய பெரிய திட்டங்கள் நிறைவேறப் போகின்றன. முக்கியமாக விண்வெளியில் இந்திய விண்வெளி நிலையம் அமைக்கும் அமோகமான திட்டம், மனிதர்களை நிலவுக்கு அனுப்பி திரும்பி வரக்கூடிய திட்டங்கள் என உள்ளன. வெளிநாடுகளுடன் நட்போடு இணைந்து ( கிட்டத்தட்ட 60 நாடுகள் ) செயலாற்றுகிறோம்.
இந்திய மாணவர்களுக்கு சொல்லும் அறிவுரை. பிராக்டிகல் ( செய்முறை ), தியரி (புத்தக படிப்பு ) மட்டுமல்லாமல் நன்றாக படிப்பதுடன் ஓவரால் பர்சனாலிட்டி டெவலப்மெண்ட் ( ஒட்டுமொத்த தனிநபர் வளர்ச்சி அல்லது ஆளுமை மேம்பாடு ) மற்றும் நல்லவர்களாக வாழ வேண்டும் என்று குறிப்பிட்டார் டாக்டர் வி. நாராயணன்.
கதை அல்ல நிஜம்.. "ரோஷினியின் டைரி" .. அவள் எழுதிய வரிகள் நிஜமானது!
Sunday Special: சுவையான மக்ரூனி பிரியாணி.. சாப்ட்டுப் பாருங்க.. கிறங்கிப் போய்ருவீங்க!
கதை கேளு... கதை கேளு!
Malliga Selvaraj: அன்னை மடி!
தென்தமிழ் தலையங்கம்: திரைக்கலைத் தாத்தா சிங்கீதம் சீனிவாச ராவ்!
Asiad 2026 Cricket: தங்க மகளிரைப் பின்பற்றி.. பாகிஸ்தானை வீழ்த்தி தங்கம் வென்ற இந்திய ஆடவர்!
தவெக வேட்பாளர் குறித்து உருவக் கேலி: திமுக தலைவர் மு.க.ஸ்டாலினுக்கு முதல்வர் விஜய் கண்டனம்!
தாராபுரம் தவெக வேட்பாளரை உருவகேலி செய்த விவகாரம் : மு.க.ஸ்டாலின் மீது புகார்
மதுராந்தகம் இடைத்தேர்தல்: செங்கல்பட்டு மாவட்டம் முழுவதும் 4 நாட்கள் டாஸ்மாக் கடைகள் மூடல்
{{comments.comment}}