டெல்லி: தங்க நகைக்கடன் பெறுவது குறித்து ரிசர்வ் வங்கி 9 விதிமுறைகளை அறிவித்துள்ளது.
சாமானிய மக்கள் தங்களது அவசர தேவைக்கு பெருவது தான் நகைகடன். அத்தகைய நகைக்கடன் வழங்குவதில் சமீபகாலமாக ரிசர்வ் வங்கி பல்வேறு கட்டுப்பாடுகளை விதித்து வருகிறது. இந்த கட்டுப்பாடுகள் அனைத்தும் வாடிக்கையாளர்களின் நலன் காக்கவே விதிக்கப்பட்டு வருவதாகவும் ரிசர்வ் வங்கி தெரிவித்துள்ளது.
இந்த நிலையில், தற்போது புதிதாக 9 விதிமுறைகளை அறிவித்துள்ளது. வங்கிகள் மற்றும் வங்கியல்லா நிதி நிறுவனங்களும் ஒரே மாதிரியான நடவடிக்கைகளை மேற்கொள்ள இந்த நடைமுறை கொண்டுவரப்பட்டுள்ளதாகவும் ரிசர்வ் வங்கி தெரிவித்துள்ளது.
ரிசர்வ் வங்கியின் புதிய 9 விதிமுறைகள்:
1. தங்க நகையின் மதிப்பில் 75% தொகை மட்டுமே கடன் வழங்கப்படும்.
2. அடமானம் வைக்கப்படும் நகைகளுக்கு உரிய ஆவணங்களை சமர்ப்பிக்க வேண்டும்.
3. வங்கிகள்(அ) வங்கியல்லா நிதி நிறுவனங்கள் தங்கத்திற்கான தூய்மை சான்றிதழை வழங்க வேண்டும்.
4. தங்க ஆபரணங்கள் மற்றும் வங்கிகளில் வாங்கிய தங்க நாணயங்களுக்கு மட்டுமே கடன் பெற முடியும்.
5. வெள்ளிப் பொருட்களுக்கும் கடன் வழங்க ரிசர்வ் வங்கி அனுமதி.
6. ஒரு கிலோவுக்கு குறைவாக உள்ள நகைகளுக்கு மட்டுமே கடன் வழங்க அனுமதி.
7. அடகு வைக்கப்படும் நகைகள் 22 காரட் தங்கத்தின் விலையில் மட்டுமே மதிப்பிடப்படும்.
8.கடன் ஒப்பந்தத்தில் முழுமையான விவரங்கள் இருக்க வேண்டும்.
9. அடகு வைக்கப்பட்ட தங்கத்திற்கான முழு தொகையையும் வாடிக்கையாளர்கள் செலுத்திய 7 நாட்களுக்குள் நகைகளை திருப்பித் தரவேண்டும். தாமதம் ஆகும் ஒவ்வொரு நாளுக்கும் வாடிக்கையாளர்களுக்கு கடன் வழங்குபவர்கள் 5 ஆயிரம் ரூபாய் செலுத்த வேண்டும்.
இதற்கு முன்னர் ரிசர்வ் வங்கி வெளியிட்ட அறிவிப்பில், நகைக்கடனுக்கான அவகாசம் நிறைவு பெற்றதும், மறு அடமானம் வைக்கும் முறை ரத்து செய்யப்பட்டு, நகைக்கட் பெற்றவர்கள் முழு தொகையையும் செலுத்தி மீட்டு பிறகே, அந்த நகையை மறு அடமானம் வைக்க வேண்டும் என்ற விதியை அறிவித்திருந்தது. இந்த நிலையில், தற்போது மேலும் 9 விதிகளை விதித்துள்ளது.
இதனால், பொதுமக்கள் மிகவும் சிரமம் அடைந்து வருகின்றனர். இனி வரும் காலங்களில் நகை வாங்குவது மட்டுமின்றி நகை அடகு வைப்பதும் கஷ்டமே என்று பொதுமக்கள புலம்பி வருகின்றனர்.
விஜய்யின் காஸ்ட்லி மிஸ்.. ஓபிஎஸ்ஸை தவற விட்டது எப்படி?.. திமுகவின் மின்னல் வேக ஸ்கெட்ச்!
காமெடி நடிகர் மதன்பாப் மரணம்.. புற்றுநோயால் உயிர் பிரிந்தது.. திரையுலகினர் அஞ்சலி
இந்தியப் பொருளாதாரம் எப்படி இருக்கு.. டிரம்ப்புக்கு நோஸ் கட் கொடுத்த .. அமெரிக்க ஏஐ தளங்கள்!
11 மாவட்டங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்பு: சென்னை வானிலை ஆய்வு மையம்!
எத்தனைப் பேரின் உயிரை திமுக அரசு பறிக்கப் போகிறது என்று தெரியவில்லை: டாக்டர் அன்புமணி ராமதாஸ்!
தந்தையை உளவு பார்த்த மகன்: டாக்டர் அன்புமணி ராமதாஸ் மீது குற்றச்சாட்டு வைத்த டாக்டர் ராமதாஸ்!
நலம் காக்கும் ஸ்டாலின்... சிறப்பு மருத்துவ முகாமினை தொடங்கி வைத்தார் முதல்வர் மு.க.ஸ்டாலின்!
இந்தியாவின் தேசிய நூலாக திருக்குறளை அறிவிக்க வேண்டும்: பிரதமர் மோடிக்கு வைரமுத்து கோரிக்கை!
இன்று ஒரு கவிதை.. இனிமைத் தமிழ் மொழி எமது!
{{comments.comment}}