Short Story by Sudha Thirunarayanan: பை!

Sep 23, 2026,11:54 AM IST

- சுதா திருநாராயணன்


மாலதி மிகுந்த ஆர்வத்துடனும் மகிழ்ச்சியுடனும் ஜானகியம்மாளை சந்திக்க கிளம்பிக் கொண்டிருந்தாள். 


பம்பாயில் உறவினர் திருமணத்தில் சந்தித்த ஜானகியம்மாள்  மாலதியின் மனதை ஆக்கிரமித்து விட்டார். 82 வயதிலும் என்ன சுறுசுறுப்பு, எதிலும் ஒரு நேர்த்தி என ஜானகியம்மாளின் திறமைகள் மாலதியை கவர்ந்து விட்டன.


“வயலின் அவ்வளவு நல்லா வாசிக்கிறாங்க. ஃப்ரெஞ்ச் டீச்சரா இருந்திருக்காங்க. நிறைய பேருக்கு பிரெஞ்சும்  வயலின் வாசிக்கவும்  இன்னமும் சொல்லிக் கொடுக்கிறாங்களாம். சமையலும் அவ்வளவு அருமையா செய்வாங்களாம். நிறைய புது புது ரெசிபி எனக்கு சொல்லிக் கொடுத்தாங்க. நல்ல ஞாபக சக்தி அவங்களுக்கு. பழைய கால சினிமா பாட்டெல்லாம் நல்ல நினைவில் வைத்து வயலின்ல  அவ்ளோ அருமையா வாசிக்கிறாங்க. ”  


“அம்மா, போதும் உன் ஜானகிம்மா புராணம்” என்று மகன் அலுத்துக் கொண்டான்.


"ஜானகியம்மா  ஏதோ தனியார் பள்ளிக்கூடத்தில் தான் வேலை பார்த்து இருக்காங்க. பென்ஷன் எல்லாம் கிடையாது. என்னமோ தச்சு கொடுக்கிறது, நைட்டி பெட்டிக்கோட் எல்லாம் வாங்கி விக்கிறதுன்னு அதுல வர பணத்துல தன் செலவை பாத்துக்கிறாங்க. அவங்க மகனுக்கு ரொம்ப பெரிய வேலை  இல்லை." மாலதி ஜானகி அம்மாளுக்காகவும் அவர்கள் குடும்பத்தினருக்காகவும் பழங்கள் இனிப்பு காரம் எல்லாம் வாங்கிக் கொண்டாள்.




திருப்பூரிலிருந்து எப்போதாவது    சென்னை வந்தால் ஜானகியம்மாளை சந்திப்பதாக கூறியிருந்தாள் மாலதி.


பேரக்குழந்தைகளையும்  அழைத்துக் கொண்டு கிளம்பினாள்.


“கொரட்டூர் வரைக்கும் போகணும். டிராபிக் ரொம்ப ஜாஸ்தியாக இருக்கும்.” முனகிக்கொண்டே காரை ஓட்டினான் மகன் சங்கர். ஜானகி அம்மாளின் வீட்டை அடைந்தனர். 


பழைய வீடு.  சுவர்கள் காரை பெயர்ந்து பல்லிளித்துக் கொண்டிருந்தன. ஜானகியம்மாவின் மகனும் மருமகளும் அன்புடன் இவர்களை வரவேற்றனர்.


உடைந்த மேஜையும் பிய்ந்து போன பிளாஸ்டிக் நாற்காலியும் அவர்களின் வசதியின்மையை பறைசாற்றியது. 


ஜானகியம்மாள் மாலதியை மகிழ்ச்சியுடன் தழுவிக் கொண்டு பல கதைகளை பேசினார். மிக்சர் லட்டு  காப்பி உண்டு மகிழ்ந்தனர்.  


கிளம்பும்போது  ஜானகியம்மாள் தான் தைத்த அழகான பை ஒன்றை மாலதிக்கு பரிசாக கொடுத்தார்.


"ஸ்கூல்ல சில சமயம் சீஃப் கெஸ்ட்டா  கூப்பிடுவாங்க. அப்போ பொன்னாடை போர்த்துவாங்க. வெச்சிகிட்டு என்ன செய்யறது அதுல இந்த மாதிரி பை தைச்சிடுவேன்." புன்முறுவலுடன் சொல்லிக்கொண்டே  ஜானகி அம்மாள் கொடுத்தார்.  பை உண்மையிலேயே மிகவும் அழகாக இருந்தது. மூன்று கம்பார்ட்மெண்ட் வைத்து மிக நேர்த்தியாக தைத்திருந்தார்.  


வீட்டிற்கு வந்தவுடன்  பையில் இருந்து ஜிப் பிய்ந்துவிட்டது.


சங்கர் ஏளனமாக சிரித்தான். சேஃப்டி பின் போட்டு பையை மூடிவிட்டு மாலதி சொன்னாள். 


“இந்தப் பையில இருக்கிறது எங்க நட்பின் அன்பும் பாசமும். அவங்களுக்கு எந்த விதத்திலாவது  உதவி செய்ய முயற்சிப்பேன். உண்மையான நட்பை யாருடனாவது  நீயும் ஒரு நாள் அனுபவிப்பாய் சங்கர். அப்போ உனக்கு புரியும் ஜானகி அம்மா மேல நான் வைத்திருக்கும் மரியாதை மதிப்பு.”


(சுதா திருநாராயணன், கேலக்ஸி பப்ளிகேஷன்ஸ், அனிச்சம் மின்னிதழ், மங்கையர் மலர், கல்கி, அன்னை ஸ்வர்ணாம்பாள் நினைவு சிறுகதை போட்டி ஆகியவை நடத்திய போட்டிகளில்  பரிசு பெற்றவர். தி ஹிந்து லிட் ஃபார் லைஃப் நடத்திய சிறுகதை போட்டியில் 1200 சிறுகதைகளில்  தேர்ந்தெடுக்கப்பட்ட 10 சிறுகதைகளில் இவருடையதும் ஒன்று. பல சமையல் குறிப்புகள் மற்றும் துணுக்குகள் எழுதியுள்ளார்)

செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்

சமீபத்திய செய்திகள்

news

அமைதியா இரு

news

Short Story by Sudha Thirunarayanan: பை!

news

தலையங்கம்: நாட்டின் பாதுகாப்பில் பெண்மையின் பேராற்றல்.. CRPF Women Battalion turns 40!

news

ஜெம் கிரானைட் வீரமணி வழக்கு: அடுத்தடுத்து சிக்கும் நபர்கள்... தீவிரமடையும் விசாரணை

news

பிரே பண்ணிட்டு சாப்பிடுவோமா?.. நீட்டிக்கப்பட்ட காலை உணவுத் திட்டம்.. தொடங்கி வைத்தார் முதல்வர் விஜய்

news

திமுக.,வுக்கும் ஜெம் கிரானைட்ஸ் வீரமணிக்கும் தொடர்பு இல்லை: முன்னாள் அமைச்சர் ரகுபதி

news

அமைச்சர் ஆதவ் அர்ஜுனாவின் "கை சுத்தமில்லை"...கோர்ட்டில் மு.க.ஸ்டாலின் பதில் மனு தாக்கல்

news

ஆசிய விளையாட்டு போட்டி 2026: இந்திய மகளிர் கிரிக்கெட் அணி தங்கப் பதக்கம் வென்று சாதனை

news

Short story by Joseph Samraj: செதுக்குமுத்து!

அதிகம் பார்க்கும் செய்திகள்