மும்பை: பேக்கரி கடை விற்பனையாளர்.. ஆபாசப் பட நடிகை.. கவர்ச்சி நடிகை.. இப்படி பல முகம் கொண்டவரான சன்னி லியோன் தனது 42வது பிறந்த நாளை உற்சாகமாகக் கொண்டாடியுள்ளார்.
சன்னி லியோனின் வாழ்க்கை நெடுகிலும் சவால்களும், சங்கடங்களும்தான் அதிகம் விரவிக் கிடப்பதைப் பார்க்க முடியும். 1981ம் ஆண்டு மே 13ம் தேதி சீக்கிய குடும்பப் பின்னணியில் கனடாவில் பிறந்தவர் சன்னி லியோன். இவரது இயற்பெயர் கரன்ஜித் கவுர் வோரா. ஆரம்ப காலத்தில் அமெரிக்காவில் தனது தாத்தா வீட்டில் வளர்ந்தவர் சன்னி லியோன். கலாச்சார மாற்றங்கள் காரணமாக இளம் வயதிலேயே ஆபாசப் பட நடிகையாக தனது தொழிலை ஆரம்பித்தார்.
சினிமாவுக்கு வருவதற்கு முன்பு சில காலம் ஒரு பேக்கரிக் கடையில் வேலை பார்த்தார் சன்னி. அதன் பிறகு அவர் மாடலிங்கில் குதித்தார். அங்குதான் அவருக்கு ஆபாசப் பட உலகினரின் அறிமுகம் கிடைத்து அதில் புகுந்தார். ஆபாசப் பட நடிகையாக பிரபலமாகி வந்த அவருக்கு மிகப்பெரிய திருப்புமுனையாக அமைந்தது பிக் பாஸ் நிகழ்ச்சிதான். இந்த நிகழ்ச்சியின் மூலம் சன்னி லியோன் குறித்த பார்வை வெகுவாக மாறியது. கனடாவில் ஆபாச படங்களில் நடித்து வந்த இவர் கடந்த 2011 ஆம் ஆண்டு பிக் பாஸ் நிகழ்ச்சியில் பங்கேற்றார் சன்னி லியோன். இந்நிகழ்ச்சியின் மூலம் இந்தியாவில் பிரபலமானார்.
இதையடுத்து அவருக்கு பாலிவுட் அழைப்பு விடுத்தது. அதை அவரும் ஏற்றுக் கொண்டார். இதைத் தொடர்ந்து, 2012ம் ஆண்டு வெளியான ஜிஸம் என்ற இந்தி திரைப்படம் மூலம் பாலிவுட் திரைப்பட உலகில் அடி எடுத்து வைத்தார். தற்போது வரை பாலிவுட் படங்களில் நடித்து தனக்கென்று ஒரு ரசிகர் பட்டாளத்தை பெற்று வலம் வருகிறார். பாலிவுட் மட்டும் இன்றி தமிழில் வடகறி என்ற படத்தில் ஒரு பாடலுக்கு நடனம் ஆடியுள்ளார்.
இவரது வாழ்க்கை வரலாறு கரன்ஜித் கவுர் என்ற பெயரில் வெப் சீரிசாக வந்துள்ளது. இந்த வெப் சீரிசின் மூலம் இவர் எப்படி ஆபாச பட உலகுக்கு வந்தார் என்பது பற்றி கூறப்பட்டிருக்கிறது. சன்னி லியோனுக்கு திருமணமாகி 2 குழந்தைகள் உள்ளன நிலையில், ஒரு பெண் குழந்தையையும் தத்தெடுத்து வளர்ந்து வருகிறார். அடல்ட் பட நடிகை என்று அவர் மீது பல விமர்சனங்கள் இருந்தாலும் அவரது இரக்க குணத்தை கண்டு ரசிகர்கள் வியப்படைகின்றனர்.
அமெரிக்காவில் செக்ஸ் நடிகையாக வாழ்க்கையைத் தொடங்கி, பாலிவுட்டில் கவர்ச்சி நடிகையாக தனது வாழ்க்கையை மாற்றி இன்று அனைத்து விதமான பாத்திரங்களையும் ஏற்று நடிக்கும் இந்திய நடிகையாக மாறியிருக்கிறார் சன்னி லியோன். கவர்ச்சி, ஆபாசம் ஆகியவற்றைத் தாண்டி எல்லா நடிகைகளுக்கும் மனசு என்று ஒன்று உண்டு.. அதை பலரும் வசதியாக மறந்து விடுவார்கள்.. ஆனால் சன்னி லியோனின் அந்த ஈர மனசையும் மக்கள் ரசித்து வரவேற்றுக் கொண்டாடியதுதான் இங்கு விசேஷமானது.. நாமும் சன்னி லியோனுக்கு பிறந்த நாள் வாழ்த்து கூறுவோம்.
முதல்வரின் கோரிக்கை மனு... தமிழ்நாடு வரும் பிரதமர் மோடியிடம் வழங்கப் போவது யார் தெரியுமா?
தமிழ்நாட்டுக்கு வரும் பிரதமர் நரேந்திர மோடியைச் சந்திக்க எடப்பாடி பழனிச்சாமி திட்டம்!
நான் வெற்றி பெற்றவன்.. இமயம் தொட்டு விட்டவன்.. பகையை முட்டி விட்டவன்.. கமலுக்கு வைரமுத்து வாழ்த்து!
திமுக ஆட்சியின் போலீசுக்கே பாதுகாப்பு இல்லை... சட்டம் ஒழுங்கு சீர்கெட்டுள்ளது: எடப்பாடி பழனிச்சாமி
கோவை, நீலகிரிக்கு இன்று ஆரஞ்ச் அலர்ட் - வானிலை ஆய்வு மையம் தகவல்!
வைகோவால் மனஉளைச்சல்.. ஆகஸ்ட் 2ம் தேதி உண்ணாவிரதம்.. அறிவித்தார் மல்லை சத்யா
கார்கில் வெற்றி தினம்.. தியாகிகளின் நினைவிடத்தில் குடும்பத்தினர், பொதுமக்கள் வீர அஞ்சலி
தாய்லாந்து-கம்போடியா எல்லை மோதல்.. கவனமாக இருக்குமாறு இந்தியர்களுக்கு அறிவுரை
நடிப்பு சலித்துவிட்டால்.... பார்ஸிலோனாவில் ஊபர் டிரைவராகிவிடுவேன்: மனம் திறந்த நடிகர் பகத் பாசில்
{{comments.comment}}