கொலம்பஸ்.. கொலம்பஸ்.. வரப் போகுது லீவு.. ஏப்ரல் 13 முதல்.. மாணவர்களுக்கு கோடை விடுமுறை!

Mar 21, 2024,04:13 PM IST

சென்னை:  ஏப்ரல் 13ம் தேதி முதல் பள்ளி மாணவர்களுக்கு கோடை விடுமுறையை அறிவித்தது தமிழக அரசு. மக்களவை தேர்தல் ஏப்ரல் 19ம் தேதி நடைபெறுவதால், 1 முதல் 9ம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு ஏப்ரல் 12ஆம் தேதியுடன் தேர்வுகளை நடத்தி முடிக்க உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.


2024ம் ஆண்டிற்கான லோக்சபா தேர்தல் வருகின்ற ஏப்ரல் 19ம் தேதி நடைபெறுகிறது. 5 ஆண்டுகளுக்கு ஒரு முறை இந்த தேர்தல் நடைபெற்று வருகிறது. இந்த லோக்சபா தேர்தலில் வெற்றி பெரும் கட்சி தான் அடுத்த 5 ஆண்டுகளுக்கு இந்திய நாட்டை ஆளப்போகிறது. 




மக்களவை தேர்தல் ஏப்ரல் 19ம் தேதி நடைபெறுவதால், 1 முதல் 9ம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு ஏப்ரல் 12ஆம் தேதியுடன் தேர்வுகளை நடத்தி முடிக்க உத்தரவிட்டுள்ளது. இது தொடர்பாக அரசு அறிவித்துள்ள  அறிக்கையில், 18வது மக்களவைத் தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ளதால், தமிழகத்தில் உள்ள அனைத்து அரசு, உதவி பெறும், தனியார் பள்ளிகளில் பயிலும் 1 முதல் 9ஆம் வகுப்பு மாணவர்களுக்கான 2023-2024ம் கல்வி ஆண்டிற்கான பள்ளி இறுதி தேர்வுகள் 02.04.2024 அன்று தொடங்கி 12.04.2024 வரை நடைபெறும் எனவும், 13.04.2024 முதல் மாணவர்களுக்கு கோடை விடுமுறை எனவும் இதன் மூலம் தெரிவிக்கப்படுகிறது.


மேலும், ஆசிரியர்கள் 19.04.2024 அன்று நடைபெற உள்ள பதினெட்டாவது மக்களவைத் தேர்தல் சார்ந்த பயிற்சிகள் உள்ளிட்ட அனைத்து தேர்தல் பணிகளையும் மேற்கொள்ள வேண்டும் என தெரிவிக்கப்படுகிறது. மேலும் 23.04.2024 முதல் 26.04.2024 வரையில் 1 முதல் 9ஆம் வகுப்பு மாணவர்களுக்கான விடைத்தாள் திருத்துதல், தேர்வு முடிவுகள் வெளியிடுதல் மற்றும் அடுத்த கல்வி ஆண்டிற்கான(2024-2025) மாணவர்கள் சேர்க்கை போன்ற பணிகளை மேற்கொள்ள வேண்டும் எனவும், 26.04.2024 அன்று இக்கல்வி ஆண்டிற்கான கடைசி வேலை நாளாக இருக்கும் எனவும் தெரிவிக்கப்படுகிறது.

சமீபத்திய செய்திகள்

news

தனுஷின் இட்லி கடை திரைப்படத்தின் படப்பிடிப்பு நிறைவு.. படக்குழு அதிகாரப்பூர்வ அறிவிப்பு..!

news

நடுநிலையான விசாரணைக்கு பாகிஸ்தான் தயாராக உள்ளது: பாகிஸ்தான் பிரதமர் ஷெபாஸ் ஷெரீப் அறிவிப்பு!

news

கல்வி தான் நமக்கான ஆயுதம்...கல்வியை மட்டும் விட்டுவிடவே கூடாது: முதல்வர் மு.க.ஸ்டாலின்!

news

மறைந்த போப் ஆண்டவர் உடலுக்கு.. ஜனாதிபதி முர்மு இன்று அஞ்சலி.. குவியும் உலக தலைவர்கள்..!

news

ஸ்டெர்லைட்டுக்கு ஒரு நீதி என்.எல்.சிக்கு ஒரு நீதியா? உடனடியாக ஆலையை மூட வேண்டும்: டாக்டர் அன்புமணி

news

கடந்த 3 நாட்களாக சரிந்து வரும் தங்கம் விலை... மகிழ்ச்சியில் வாடிக்கையாளர்கள்!

news

பட்டாசு வெடித்து.. உயிரிழந்தவர் குடும்பத்திற்கு தலா 3 லட்சம் நிதி உதவி.. முதல்வர் மு க ஸ்டாலின்!

news

இந்தியாவுக்கும், பாகிஸ்தானுக்கும் இடையே முழு அளவிலான போர் மூண்டால் என்னாகும்?

news

தவெகவின் பூத் கமிட்டி மாநாட்டில்.. கலந்து கொள்வதற்காக சென்னையிலிருந்து புறப்பட்டார்.. விஜய்!

அதிகம் பார்க்கும் செய்திகள்