பில்கிஸ் பானு வழக்கு.. உச்சநீதிமன்றம் கூறிய அதிரடி "பாயின்ட்".. விடுவிக்கப்பட்ட 11 பேருக்கும் கெடு!

Jan 08, 2024,03:51 PM IST

டெல்லி: பில்கிஸ் பானு  கூட்டு பாலியல் பலாத்கார வழக்கில் தண்டனை விதிக்கப்பட்ட 11 குற்றவாளிகளையும் குஜராத் அரசு முன்கூட்டியே விடுதலை செய்த உத்தரவை, உச்ச நீதிமன்றம் ரத்து செய்துள்ளது. இதுதொடர்பான முந்தைய உச்சநீதிமன்ற உத்தரவு தவறானது என்று கூறியுள்ள உச்சநீதிமன்றம், மகாராஷ்டிர மாநில அரசின் அதிகாரத்தை குஜராத் அரசு கையில் எடுத்துக் கொண்டது தவறு என்றும் கூறியுள்ளது.


விடுவிக்கப்பட்ட 11 குற்றவாளிகளும் இன்னும் 2 வாரத்தில் சரணடையுமாறும் உச்சநீதிமன்றம் கெடு விதித்து உத்தரவிட்டுள்ளது.


கடந்த 2002 ஆம் ஆண்டு குஜராத் மாநிலம் கோத்ராவில், பயணிகள் ரயில் தீவைத்து எரிக்கப்பட்டது. இந்த சம்பவத்தைத் தொடர்ந்து குஜராத்தில் பெரும் மதக் கலவரம் வெடித்தது. இந்த கலவரத்தின் போது இஸ்லாமியப் பெண்ணான பில்கிஸ் பானுவை  17 பேர் கொண்ட கும்பலால் வன்கொடுமை செய்து பலாத்காரம் செய்தது. அப்போது கர்ப்பிணியாக இருந்தார் பில்கிஸ் பானு. ஆனால் மத வெறி கண்ணை மறைத்த நிலையில் அந்த வெறிக் கும்பல் பில்கிஸ் பானுவை  கூட்டு பலாத்காரம் செய்தனர் . 




மேலும், பில்கிஸ் பானுவின் உறவினர்களான மூன்று குழந்தைகள் உட்பட 14 பேர் கொடூரமாக கொல்லப்பட்டனர். 14 பேரின் உடல்களையும் பிரேத பரிசோதனைக்கு கூட உட்படுத்தாமல் அடக்கம் செய்தனர். இந்த வழக்கு நீண்ட காலமாக விசாரிக்கப்பட்டு வந்தது. இதற்காக பில்கிஸ் பானு நடத்திய சட்டப் போராட்டம் மிகுந்த வலி உடையது. பல்வேறு கட்ட போராட்டங்களுக்குப் பிறகு 2004 ஆம் ஆண்டு இந்த வழக்கு சிபிஐயிடம் ஒப்படைக்கப்பட்டது .


அதன் பிறகு  தேசிய மனித உரிமைகள் ஆணைய உதவியுடன் பில்கிஸ் பானு வழக்கு மகாராஷ்டிராவிற்கு மாற்றப்பட்டு, விசாரணை நடத்தி குற்றவாளிகளுக்கு ஆயுள் தண்டனை வழங்கப்பட்டது. ஆனால், வக்கிரம் பிடித்த 11 குற்றவாளிகளையும்  கடந்த 2022 ஆம் ஆண்டு ஆகஸ்ட் 15ஆம் தேதி  குஜராத் அரசு முன்கூட்டியே விடுதலை செய்து நாட்டையே அதிர வைத்தது. இதற்கு கடும் எதிர்ப்பு கிளம்பியது. 


மிகவும் வேதனையுடன் இதுகுறித்து கருத்து தெரிவித்த பில்கிஸ் பானு இந்த விடுதலையை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்தார். அந்த மனுவில் குஜராத் நீதிமன்றங்களால் நீதி வழங்க முடியாது என கூறியிருந்தார்.  இந்த மனுவை ஏற்ற உச்ச நீதிமன்றம், 11 பேரும் விடுதலை செய்யப்பட்ட உத்தரவை ரத்து செய்து உத்தரவிட்டுள்ளது.


தீர்ப்பை அளித்த நீதிபதிகளில் ஒருவரான நாகரத்தினா கூறுகையில், நீதிமன்றத்தையே மோசடி செய்து குற்றவாளிகள் முன் விடுதலை  செய்யப்பட்டுள்ளனர்.  இது மிகுந்த வேதனை அளிக்கிறது. பெண்ணின் உரிமையை காப்பது மிகவும் முக்கியமானது. பதினோரு குற்றவாளிகளையும் முன்கூட்டியே விடுதலை செய்ய குஜராத் அரசுக்கு உரிமை இல்லை. அதிகாரமும் இல்லை.


பில்கிஸ் பானு வழக்கு மகாராஷ்டிராவில் நடந்ததால் 11 பேரையும் விடுவிப்பது குறித்து மகாராஷ்டிரா அரசே முடிவெடுக்க வேண்டும். மகாராஷ்டிரா அரசுக்கே உரிமை உண்டு. குஜராத் அரசுக்கு அதிகாரம் இல்லை . உண்மையை மறைத்து முன்கூட்டியே விடுதலை செய்யுமாறு  குஜராத் அரசிடம் குற்றவாளிகள் முறையிட்டுள்ளனர். பதினோரு குற்றவாளிகளையும்  முன் விடுதலை செய்ய, 2022 மே மாதம் உச்ச நீதிமன்றம் அளித்த தீர்ப்பும் மிக தவறானது என்று கூறியுள்ளார் நீதிபதி நாகரத்தினா.

சமீபத்திய செய்திகள்

news

இந்த வாழ்க்கை ஒரு கனவா?

news

பசும்பொன் முத்துராமலிங்கத் தேவர் குருபூஜை.. முதல்வர் மு.க.ஸ்டாலின், எடப்பாடி பழனிச்சாமி அஞ்சலி

news

12 ராசிகளுக்குமான இன்றைய ராசிபலன் அக்டோபர் 30, 2025... இன்று மகிழ்ச்சி தேடி வரும் ராசிகள்

news

பணியாளர் நியமனத்தில் முறைகேடா?.. களங்கம் கற்பிக்க மத்திய அரசு முயற்சி.. அமைச்சர் கே. என். நேரு

news

2,538 பணியிடங்களுக்கு முறைகேடாக பணி நியமனம் செய்து ரூ.888 கோடி திமுக ஊழல்: அண்ணாமலை குற்றச்சாட்டு

news

Rain Rain come again.. தமிழ்நாட்டில் அடுத்த 7 நாட்களுக்கு மழைக்கு வாய்ப்பு – வானிலை மையம் தகவல்

news

மக்களைக் காக்க யாரும் எங்களுக்கு சொல்லித் தர வேண்டாம்: முதல்வர் மு.க.ஸ்டாலின்!

news

நவ. 5ல் சிறப்பு பொதுக்குழு: ஆழ் நீள் அடர் அமைதிக்குப் பிறகு.. பேசப் போகிறேன்.. விஜய் அறிக்கை

news

காலையில் மட்டுமில்லங்க..பிற்பகலிலும் உயர்ந்தது தங்கம் விலை.. இன்று மட்டும் சவரனுக்கு ரூ.2,000 உயர்வு

அதிகம் பார்க்கும் செய்திகள்