டெல்லி: விவிபாட் இயந்திரங்களில் பதிவான வாக்குகளை முழுமையாக எண்ண வேண்டும் என்று கோரி தொடரப்பட்ட அனைத்து மனுக்களையும் சுப்ரீம் கோர்ட் டிஸ்மிஸ் செய்துள்ளது.
மீண்டும் வாக்குச் சீட்டு முறைக்கு உத்தரவிட முடியாது என்றும் உச்சநீதிமன்றம் தனது தீர்ப்பில் தெரிவித்துள்ளது. நீதிபதிகள் சஞ்சீவ் கண்ணா, தீபாங்கர் தத்தா ஆகியோர் அடங்கிய பெஞ்ச் இந்த தீர்ப்பை அளித்துள்ளது. கண்மூடித்தனமாக ஒரு நடைமுறை மீது குற்றம் சாட்டுவது பல்வேறு சந்தேகங்களுக்கே வழி வகுக்கும் என்றும் உச்சநீதிமன்றம் கருத்து தெரிவித்துள்ளது.
பிரஷாந்த் பூஷன் உள்ளிட்டோர் தாக்கல் செய்த மனுக்களை டிஸ்மிஸ் செய்து நீதிபதிகள் அளித்த தீர்ப்பின் விவரம்:
- ஒரு நடைமுறை மீது கண்மூடித்தனமாக குற்றம் சாட்டுவது, சந்தேகப்படுவது சரியான நடைமுறையாக இருக்காது. அது பல சந்தேகங்களுக்கே வழி வகுக்கும்.
- நீதித்துறையாக இருந்தாலும் சரி, நாடாளுமன்றம் சட்டசபையாக இருந்தாலும் சரி, ஆரோக்கியமான விமர்சனம் தேவைதான். ஆனால் சமூகத்தின் அனைத்துத் தூண்களையும் சரிசமமாக நம்ப வேண்டும். நம்பிக்கை ஒத்துழைப்பின் மூலம் நாம் அனைத்துத் தூண்களையும் பாதுகாக்க முடியும்.
- உரிய தொழில்நுட்பம் மற்றும் ஆய்வுகள் மூலம் நாங்கள் இந்தத் தீர்ப்பை அளிக்கிறோம்.
- சின்னம் பொருத்தும் எந்திரங்களையும், வாக்குப் பதிவு இயந்திரங்களுடன் சேர்த்துப் பாதுகாக்க வேண்டும்.
- மின்னணு வாக்குப் பதிவு இயந்திரங்களை 45 நாட்களுக்குப் பாதுகாத்து வைக்க வேண்டும்.
- தேர்தல் முடிவில் யாருக்கேனும் சந்தேகம் இருந்தால் சம்பந்தப்பட்ட மின்னணு வாக்குப் பதிவு இயந்திரத்திந் மைக்ரோ கன்ட்ரோலரை உரிய பொறியாளர்கள் மூலம், முடிவு அறிவிக்கப்பட்ட 7 நாட்களுக்குள் பரிசோதிக்கலாம். இதற்கு ஆகும் செலவை, சம்பந்தப்பட்ட வேட்பாளரே ஏற்றுக் கொள்ள வேண்டும்.
- விவிபாட் ஸ்லிப்புகளை எண்ணுவதற்கு இயந்திரங்களைப் பயன்படுத்த முடியுமா என்பது குறித்து தேர்தல் ஆணையம் பரிசீலிக்க வேண்டும்.
- கட்சிகளின் சின்னங்களுக்குப் பார்கோடு பயன்படுத்துவது குறித்து தேர்தல் ஆணையம் பரிசீலிக்க வேண்டும்.
முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையில் நாளை திமுக மாவட்டச் செயலாளர்கள் கூட்டம்
தலைமை சொல்வதை கேட்பதே எனது பொறுப்பு: தமிழக பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன்!
ரஷ்யா மீது 2வது கட்ட பொருளாதார தடை விதிக்கப் போறேன்.. டொனால்ட் டிரம்ப் அறிவிப்பு
அதிரடியாக உயர்ந்த தங்கம் விலை... இன்று திடீர் குறைவு... எவ்வளவு தெரியுமா?
வாழப்பாடி வெள்ளாள குண்டம் ராஜலிங்கேஸ்வர் சிவன் கோவில் நந்தியைப் பார்த்திருக்கீர்களா?
கண்மணியே உன் கா(த)ல் தடம் தேடி..1 (கவிதைத் தொடர்)
ஆசிய கோப்பை ஹாக்கி 2025.. 8 வருடங்களுக்குப் பிறகு கோப்பையை வென்று இந்தியா அசத்தல்
ரஜினிகாந்துடன் இணைந்து நடிக்கப் போகிறீர்களா.. கமல்ஹாசனே சொன்ன ஹேப்பி நியூஸ்
12 ராசிகளுக்குமான இன்றைய ராசிபலன் செப்டம்பர் 08, 2025... நல்ல காலம் பிறக்குது
{{comments.comment}}