- ஸ்வர்ணலட்சுமி
சென்னை: ஆட்டாவில் செய்த அடையும், கூடவே கொங்கு நாட்டு ஸ்பெஷல் ஐட்டமான நெல்லி தக்காளி சட்னியும் சேர்ந்து சாப்பிட்டா எப்படி இருக்கும் தெரியுமா.. அப்படி இருக்கும் மக்களே!
காலைல சாப்பிடுவதற்கு சூப்பரான டிஷ் இது. நைட்டும் கூட சாப்பிடலாம். தப்பே இல்லை. நல்ல சுவையான, மொறுமொறுப்பான இந்த அடை பிளஸ் நெல்லி தக்காளி சட்னி சூப்பரான காம்போ மட்டுமல்ல, ஹெல்த்தியான உணவும் கூட.
சாப்டலாமா!
multigrains ஆட்டா அடை
தேவையான பொருட்கள் :
1. multigrains ஆட்டா (ரெடிமேட் ஆட்டா)- 1 கப்
2.பெரிய வெங்காயம் - 1 (பொடியாக நறுக்கியது)
3. மல்லித்தழை - 1 கப் (கழுவி நறுக்கியது)
4.இஞ்சி - துருவியது 1/2 ஸ்பூன்
5. பச்சை மிளகாய் - 1 (பொடியாக நறுக்கியது)
6. கருவேப்பிலை - 1 கைப்பிடி (நறுக்கியது)
7. எண்ணெய் - தேவைக்கு ஏற்ப
செய்முறை :
1. ஒரு பவுலில் 2 கப் தண்ணீர் ஊற்றி சிறிது சிறிதாக மாவு சேர்த்து கட்டி இல்லாமல் கலக்கவும். அதோடு தேவையான அளவு உப்பு சேர்த்துக் கொள்ளவும்.
2. வெங்காயம், மல்லி, பச்சை மிளகாய், இஞ்சி, கருவேப்பிலை ஆகியவற்றை சேர்த்து தோசை பதம் வரும் வரை கலக்கவும்.
3. தோசைக்காய் சூடானதும் மிதமான சூட்டில் தோசை வார்த்து கிரிஸ்பியாக சுட்டு எடுக்கவும்.
கொங்குநாட்டு நெல்லி தக்காளி சட்னி :
தேவையான பொருட்கள் :
1. தக்காளி - 4 (கழுவி நறுக்கி கொள்ளவும்)
2.நெல்லிக்காய் பெரியது - 1 (கழுவி நறுக்கிக் கொள்ளவும்)
3. வரமிளகாய் - 3
4. இஞ்சி, பூண்டு - 1 ஸ்பூன் (பொடியாக நறுக்கியது
5. சீரகம், எண்ணெய் - தலா 1 ஸ்பூன்
6. கடலை பருப்பு, உளுந்தம் பருப்பு - தலா 1 ஸ்பூன்
(உப்பு, புளி, காரம் தேவைக்கு ஏற்ப)
செய்முறை :
1.கடாயில் எண்ணெய் ஊற்றி கடலை பருப்பு, உளுந்தம் பருப்பு, வர மிளகாய், தக்காளி, இஞ்சி, பூண்டு ஆகியவற்றை ஒன்றன் பின் ஒன்றாக, பருப்பு பொன்னிறமாக மாறியதும் சேர்க்கவும்.
2. அனைத்தும் நன்றாக வதங்கியதும் ஆற வைத்து, மிக்ஸி ஜாருக்கு மாற்றி, பிறகு அதோடு நெல்லிக்காய் , மல்லித்தழை, கருவேப்பிலை ஆகியவற்றை சேர்த்து அரைத்து எடுத்தால் சூப்பரான, சுவையான நெல்லிக்காய் தக்காளி சட்னி ரெடி.
நன்மைகள் :
1. மல்டிகிரைன் ஆட்டா அடை அனைத்து வயதினருக்கும் சாப்பிட ஏற்ற உணவு
2. மல்டிகிரைன் புரதத்தின் மூலமாகும். இதனை சாப்பிடுவதால் உடல் எடை குறையும். நார்ச்சத்து மிக்க உணவு என்பதால் சர்க்கரையின் அளவை கட்டுக்குள் வைத்திருக்க உதவும்.
3. நீண்ட நேரத்திற்கு பசிக்காது.
4. தக்காளி நெல்லி சட்னி வைட்டமின் சி நிறைந்தது.
5. செரிமானத்திற்கு நல்லது.
6. இந்த அடையும் சட்னியும் புரதம் மற்றும் பிற வைட்டமின்களின் மிகச் சிறந்த உணவாகும்.
செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்
வெளுத்து வாங்க காத்திருக்கும் கனமழை...தென் மாவட்டங்களுக்கு ஆரஞ்ச் அலர்ட் விடுத்த சென்னை வானிலை மையம
நான்கரை ஆண்டுகளில் திமுக அமைத்த குழுக்களால் மக்களுக்குக் கிடைத்த நன்மை என்ன?: அண்ணாமலை கேள்வி
மின்னல் தாக்கி உயிரிழந்த 4 பெண்களின் குடும்பத்தினருக்கு தலா 50 இலட்சம் நிதி வழங்க வேண்டும்: சீமான்!
தவெக அங்கீகாரத்தை ரத்து செய்ய முடியாது.. ஏன்னா.. உயர்நீதிமன்றத்தில் தேர்தல் ஆணையம் விளக்கம்
சவரன் ஒரு லட்சத்தை நோக்கி உயர்ந்து வரும் தங்கம் விலை... இன்று மட்டும் சவரனுக்கு ரூ.2400 உயர்வு!
உலகின் சக்தி வாய்ந்த பாஸ்போர்ட்.. 85வது இடத்திற்கு இறங்கியது இந்தியா.. நம்பர் 1 யார் தெரியுமா?
வெற்றிகரமாக தொடங்கிய வட கிழக்குப் பருவ மழை.. தமிழ்நாடு முழுவதும் ஜில் ஜில் கூல் கூல்!
பாதுகாப்பான தீபாவளி - பள்ளி மாணவர்களுக்கு தீயணைப்பு அலுவலர் விழிப்புணர்வு பேச்சு
ஏங்க! தீபாவளிக்கு முறுக்கு சுடலான்னு இருக்கேன்.. நான் கடைக்கு போயி சுத்தியல் வாங்கிட்டு வந்திடுறேன்
{{comments.comment}}