ஹைதராபாத்: ஹைதராபாத்தைச் சேர்ந்த ஒரு வாடிக்கையாளர் கடந்த 12 மாதத்தில் மட்டும் ரூ. 6 லட்சத்துக்கு இட்லியாக ஆர்டர் செய்து வாங்கி சாப்பிட்டுள்ளார்.
இந்தியாவைப் போல வித்தியாசமான கலாச்சார கலவையுடன் கூடிய நாட்டை உலகில் வேறு எங்குமே பார்க்க முடியாது. அத்தனை சிறப்பு வாய்ந்த நாடு இது. இந்த நாட்டின் கலாச்சாரம் மட்டுமல்லாமல் உணவுப் பழக்கமும் கூட விதம் விதமாக பிராந்தியத்திற்கு பிராந்தியம் மாறிக் காணப்படும்.
தென் இந்தியாவைப் பொறுத்தவரை காலை உணவு வகைகளில் பொதுவாக அனைவருமே சாப்பிடுவது இட்லிதான். தென்னிந்தியர்களின் விருப்ப காலை உணவும் கூட இட்லிதான். நாலு இட்லியும், கெட்டி சட்னியும், சுடச் சுட சாம்பாரும், கூடவே 2 வடையும் வச்சு சாப்பிட்டா.. ஆஹாஹா.. அதை விட சிறப்பு ஏதும் உண்டா!
தென்னிந்தியர்கள் விதம் விதமான உணவுகளுக்கு மாறினாலும் கூட இட்லியை மட்டும் விடவே மாட்டார்கள். காலையிலோ அல்லது இரவிலோ கண்டிப்பாக இட்லி இருந்தே ஆக வேண்டும். இப்படிப்பட்ட நிலையில் நேற்று உலக இட்லி தினம் கொண்டாடப்பட்டது. இதையொட்டி உணவு டெலிவரி ஆப்பான ஸ்விக்கி ஒரு சுவாரஸ்யமான புள்ளிவிவரத்தகவலை வெளியிட்டிருந்தது.
அதாவது கடந்த 12 மாதங்களில் ஸ்விக்கி மூலம் 33 மில்லியன் அதாவது 3 கோடி பிளேட் இட்லி ஆர்டர் செய்யப்பட்டுள்ளதாம். வழக்கமாக ஸ்விக்கி ஆய்வில் பிரியாணிக்குத்தான் அதிக இடம் கிடைக்கும். ஆனால் சைவ உணவான இட்லிக்கு இந்த அளவுக்கு ஆர்டர் கிடைத்திருப்பது ஆச்சரியம் தருவதாக அமைந்துள்ளது.
2022ம் ஆண்டு மார்ச் 30ம் தேதி முதல் 2023ம் ஆண்டு மார்ச் 25ம் தேதி வரையிலான டேட்டாவின் அடிப்படையில் இது தெரிய வந்துள்ளது. இட்லியை அதிக அளவில் ஆர்டர் செய்த நகரங்கள் எது என்று பார்த்தால் - பெங்களூர், ஹைதராபாத் மற்றும் சென்னை ஆகியவை வருகின்றன. இதுதவிர டெல்லி, கொல்கத்தா, கொச்சி, மும்பை, கோயம்புத்தூர், புனே ஆகிய நகரங்களும் அடுத்தடுத்த இடங்களில் வருகின்றன.
ஹைதராபாத்காரரின் அசத்தல் சாதனை
ஹைதராபாத்தைச் சேர்ந்த ஒரு ஸ்விக்கி பயன்பாட்டாளர் ஒரே வருடத்தில் அதிக அளவிலான இட்லியை ஆர்டர் செய்துள்ளார். அதாவது ரூ. 6 லட்சம் அளவுக்கு அவர் இட்லி ஆர்டர் செய்துள்ளார். தனது குடும்பத்துக்காக, நண்பர்களுக்காக அவர் இத்தனை ரூபாய்க்கு இட்லி வாங்கி கொடுத்து தானும் சாப்பிட்டுள்ளார். மொத்தமாக 8428 பிளேட் இட்லியை அவர் வாங்கியுள்ளார். பெங்களூர், சென்னைக்கு போகும் போதெல்லாம் அவர் இட்லிதான் வாங்கிச் சாப்���ிட்டுள்ளார்.
எந்த நேரத்தில் இட்லிக்கு ஆர்டர் அதிகம் வருகிறது என்று பார்த்தால்அது காலை 8 மணி முதல் 10 மணிக்குள்தான். சென்னை, ஹைதராபாத், பெங்களூரு, கோயம்புத்தூர், மும்பையைச் சேர்ந்த வாடிக்கையாளர்கள் அதிகஅளவில் இரவில் இட்லி வாங்கி சாப்பிட்டுள்ளனர்.
பொதுவாக சாதாரண அரிசி இட்லிதான் அதிக அளவில் வாங்கப்பட்டுள்ளது. அடுத்த இடம் ரவா இட்லி.. இது பெங்களூரில் அதிகம் வாங்கப்பட்டுள்ளது. நெய் காரப் பொடி இட்லி தமிழ்நாடு, ஆந்திரா, தெலங்கானாவில் அதிகம் வாங்கப்பட்டுள்ளது. அதேபோல தட்டு இட்லி, மினி இட்லியும் அதிக அளவில் வாங்கப்பட்டுள்ளது.
ஸ்விக்கியில் அதிக அளவில் ஆர்டர் செய்யப்பட்ட காலை உணவு மசாலா தோசைதான். அடுத்த இடத்தில் இட்லி இருக்கிறதாம்.
இட்லிக்குப் புகழ் பெற்ற ஐந்து ஹோட்டல்களையும் ஸ்விக்கி வரிசைப்படுத்தியுள்ளது. சென்னை, பெங்களூரில் உள்ள அடையாறு ஆனந்தபவன் (ஏ2பி), ஹைதராபாத்தில் உள்ள வரலட்சுமி டிபன்ஸ், சென்னை சங்கீதா வெஜ் ரெஸ்டாரென்ட், ஹைதராபாத்தில் உள்ள உடுப்பி உபஹார் ஆகியவைதான் அவை. இங்குதான் அதிக அளவிலான இட்லி ஆர்டர் செய்யப்பட்டு வாங்கப்பட்டுள்ளதாம்.
SIR:முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உடனடியாக அனைத்து கட்சி கூட்டத்தை கூட்ட வேண்டும்: திருமாவளவன்
ஆந்திராவில் பேருந்து விபத்தில் 20 பேர் பலி: விபத்திற்கான காரணமாக வெளிவந்த அதிர்ச்சி தகவல்
ஐஸ்லாந்தும் என் ஆளுகையில்.. ஒத்தக் கொசு.. மொத்த நாடும் அலறுதே.. க(ப)டிச்சுப் பாருங்க!
12 மாவட்டங்களுக்கு இன்றும், 6 மாவட்டங்களுக்கு நாளையும் கனமழைக்கு வாய்ப்பு: சென்னை வானிலை மையம் தகவல்
பாமக செயல் தலைவராக ஸ்ரீகாந்திமதி நியமனம்: பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ் அறிவிப்பு!
Cyclone Montha... அக்.,28ல் ஆந்திரா மாநிலம் காக்கிநாடா அருகே கரையை கடக்கிறது: வானிலை மையம் அறிவிப்பு
நெல்லின் ஈரப் பதம்.. தமிழ்நாட்டில் மத்தியக் குழு.. நாமக்கல் அரிசி ஆலையில் இன்று ஆய்வு
10 மற்றும் 12ம் வகுப்பு பொதுத்தேர்வு அட்டவணை நவ., 4ம் தேதி வெளியீடு: அமைச்சர் அன்பில் மகேஸ்!
காலையில் தினமும் கண் விழித்தால் கை தொழும் தேவதை... டீ.. ஆனால் வெறும் வயிற்றில் குடித்தால்??
{{comments.comment}}