விஷ்ணு ஸஹஸ்ரநாம ஸ்லோகம்.. யானை முகம் கொண்ட கணேசன் முதலான கணங்கள்!

Sep 24, 2026,10:40 AM IST

- தா. மணிமேகலை


வியாச முனிவர் தொகுத்தளித்த விஷ்ணு சஹஸ்ரநாமத்தில் நாம் இன்று இன்னொரு ஸ்லோகம் குறித்துப் பார்ப்போம். 


2.யஸ்ய த்3விரத3

வக்த்ராத்3யா:

பாரிஷத்3:

பரஷ்ஷ2தம்.

விக்4நம் நிக்4 நந்தி

ஸததம்

விஷ்வகஸேநம் தமாஷ்2ரயே.


பொருள்:




யஸ்ய-யாருடைய

ஞத்3விரத-இரண்டு தந்தங்களையுடைய( யானை) போன்ற


வக்த்ராத்3யா(வக்த்ர+ஆத்யா)

வக்த்ர- முகத்தை உடைய


ஆத்யா- முதலானவர்கள்


பாரிஷத்யா- படைவீரர்கள்


பரஷ்ஷ2தம்- நூற்றுக்கணக்கானவிக்நம்- தடைகளை


நக்4நந்தி - அழிக்கிறார்களோ


விஷ்வக்ஸேனம்-ஸ்ரீ விஷ்வக்ஸேனரை

தமாஷ்2ரயே( தம்+ ஆஷ்ரயே)


அத்தகைய பெருமை வாய்ந்த அவரை

நான் வணங்குகிறேன் 

நான் சரண்டைகிறேன்


இதன் விளக்கம் என்னவென்றால், யானை முகத்தைக் கொண்ட கணேசர் முதலான நூற்றுக்கணக்கான

கணங்கள் (படைவீரர்கள்) யாருடைய கட்டளைக்கு கீழ்ப்படிந்து காரியங்களில் ஏற்படும் தடைகளை நீக்குகிறார்களோ அந்த ஸ்ரீ விஷ்வக்ஸேனரை சேனாதிபதியை நான் வணங்குகிறேன்


(தா. மணிமேகலை, பி.காம், திருச்சிராப்பள்ளி. அருள் சக்தி ஆலயம் குழுவில் பகவத்கீதை வகுப்பு எடுக்கிறார்)

செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்

அதிகம் பார்க்கும் செய்திகள்