அலையடிக்கும் "மஞ்சும்மல் பாய்ஸ்".. தமிழிலும் குவியும் பாராட்டுகள்.. "குணா" கமல், உதயநிதி வாழ்த்து!

Feb 29, 2024,01:11 PM IST

சென்னை: சமீபத்தில் வெளியான மலையாள படமான மஞ்சும்மல் பாய்ஸ் தமிழகத்தில் ஹவுஸ்புல் காட்சிகளாக ஓடி வருகிறது. மலையாளத்தைத் தாண்டி தமிழிலும் இப்படம் பெரும் வரவேற்புப் பெற்றுள்ளது. இதற்கு முக்கியக் காரணம் கமல்ஹாசன் பல ஆண்டுகளுக்கு முன்பு நடித்த குணா படம்தான்.


குணா படம்தான் இந்த மஞ்சும்மல் பாய்ஸ் படத்தின் கதைக்களமான குணா குகைக்கு அடித்தளம் போட்ட முதல் படம். குணா படத்திற்காக கண்டுபிடிக்கப்பட்ட இடம்தான் தற்போது வரை புகழ் பெற்று விளங்கும் குணா குகை பகுதி. குணா படத்திற்காக லொக்கேஷன் தேடி அலைந்த கமல்ஹாசனும், இயக்குநர் சந்தான பாரதியும் கண்டுபிடித்த இடம்தான் இந்த குகைப் பகுதி.




மிகவும் அபாயகரமான இந்தப் பகுதியில்தான் உயிரைப் பணயம் வைத்து குணா என்ற படத்தை எடுத்து முடித்தார்கள் கமல்ஹாசனும், சந்தான பாரதியும். படம் அப்போது சரியாக போகவில்லை. ஆனால் இந்தப் படத்தைத் தழுவி தனுஷ் நடிப்பில் காதல் கொண்டேன் படம் வந்தது. அந்தப் படம் மிகப் பெரிய ஹிட் கொடுத்தது. இப்போது குணா குகையிலேயே களமாக வைத்து மஞ்சும்மல் பாய்ஸ் படம் எடுக்கப்பட்டு மிகப் பெரிய வெற்றியைப் பெற்றது.


நடிகர் கமலஹாசனை மஞ்சும்மல் பாய்ஸ் படத்தின் இயக்குநர் சிதம்பரம் உள்ளிட்டோர் மொத்தமாக வந்து பார்த்து மெய் சிலிர்த்துப் போய் அவரிடம் பேசி மகிழ்ந்துள்ளனர். அவர்களுடன் தனது குணா குகை அனுபவத்தை கமல்ஹாசனும் பகிர்ந்து கொண்டாராம். அதேபோல அமைச்சர் உதயநிதி ஸ்டாலினையும் படக் குழுவினர் பார்த்து மகிழ்ந்துள்ளனர்.


கடந்த 22 ஆம் தேதி வெளியான மலையாள படம் தான் மஞ்சும்மல் பாய்ஸ் திரைப்படம்.  சிதம்பரம் பொடுவல் இயக்கிய இந்த படத்தில் ஸ்ரீநாத் பாஸி , செளபின் சாயிர், பாலு வர்கீஸ், காலித் ரஹ்மான் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். சுஷின் ஷயாம் இசையமைத்துள்ளார்.


1991இல் கமல்ஹாசன் நடிப்பில் வெளியான குணா படத்தில் இடம் பெற்ற குணா குகையைக் கதைக்களமாக கொண்டு உருவான படம் இது. இந்த குகைக்கு சென்ற கேரளாவை சேர்ந்த இளைஞர்களுக்கு நேர்ந்த சம்பவங்கள் குறித்த உண்மை கதையை அடிப்படையாகக் கொண்டு சிதம்பரம் பொடுவல் இயக்கத்தில் வெளியான படம் அஞ்சும்மல் பாய்ஸ். 4 நாட்களில் இந்த படம் 36.11 கோடி வசூல்  ஈட்டியுள்ளதாக அதிகாரப்பூர்வமாக தெரிவிக்கப்பட்டுள்ளது. 




படம் வெளியான முதல் கேரளா மற்றும் தமிழ்நாட்டிலும் நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது. தமிழகத்தில் சென்னை, திருச்சி, கோவை என பெருநகர தியேட்டர்களில் ஓடிக்கொண்டிருக்கிறது மஞ்சும்மல் பாய்ஸ். 

இந்நிலையில்,  குணா படத்தில் நடித்த கமலஹாசன் படக்குழுவினரை அழைத்து வாழ்த்து தெரிவித்துள்ளார். அதைத்தொடர்ந்து தமிழக அமைச்சர் உதயநிதி ஸ்டாலினும் படக்குழுவினரை அழைத்து பாராட்டுகளை தெரிவித்துள்ளார்.


இது குறித்து உதயநிதி ஸ்டாலின் வெளியிட்ட டிவீட்டில், மலையாளத்தில் சமீபத்தில் வெளியான மஞ்சும்மல் பாய்ஸ் திரைப்படம் பல்வேறு தரப்பிலும் வரவேற்பு பெற்று வருகிறது. இந்த நிலையில், திரைப்பட குழுவினரை இன்று நேரில் சந்தித்தோம். நாம் அப்படத்தை பாராட்டியதற்காக அவர்கள் நன்றி தெரிவித்து அன்பை வெளிப்படுத்தினர். ஒளிப்பதிவு, பின்னணி இசை, திரைக்கதை, காட்சி அமைப்பு என அனைத்து வகையிலும் தரமான படைபாக மஞ்சும்மல் பாய்ஸ் ஐ தந்த பட குழுவிற்கு என் வாழ்த்துக்கள் என்று தெரிவித்துள்ளார்.


காதல் கொண்டேனாக இருந்தாலும் சரி, மஞ்சும்மல் பாய்ஸாக இருந்தாலும் சரி.. களம் "குணா"தான்.. ஆனால் அதுக்குப் விதை போட்டது கமல்ஹாசன் என்பது நல்ல படங்களை ஆதரிப்போருக்கு பெரும் சந்தோஷம் தரும் விஷயம்!

சமீபத்திய செய்திகள்

news

எதிர்ப்பேன்... ஆதரிப்பேன்... ஆலோசனை சொல்வேன்... எம்.பி., கமல்ஹாசனின் முதல் பதிவு!

news

கமல்ஹாசன்.. களத்தூர் கண்ணம்மா முதல் ராஜ்யசபா வரை!

news

இன்ஸ்டாகிராம் ரீல்ஸ் பிரபலம்... நடிகை இலக்கியாவுக்கு என்னாச்சு?

news

உஷார் மக்களே உஷார்... தமிழ்நாட்டில் இன்று எங்கெல்லாம் கனமழை பெய்யப்போகுது தெரியுமா?

news

விஜய் சீமானை நேரடியாக அழைக்கவில்லை... எங்களது விருப்பத்தை நாங்கள் சொல்கிறோம்...எடப்பாடி பழனிச்சாமி

news

கமல்ஹாசனின் புதிய அத்தியாயம்.. ராஜ்யசபா உறுப்பினராக தமிழில் பதவியேற்றார்

news

Friday Motivation: மனைவி ஸ்ரீதேவியின் ஆசையை.. 69 வயதில் நிறைவேற்றிய போனி கபூர்

news

ருத்ர தாண்டவம் (சிறுகதை)

news

உரிமை மீட்க தலைமுறை காக்க... திட்டமிட்ட படி இன்று நடைபயணம் தொடங்குகிறார் அன்புமணி ராமதாஸ்!

அதிகம் பார்க்கும் செய்திகள்