காலைல இருந்து ஒரே கடுப்பா இருக்கு.. வெறுப்பா இருக்கு.. ஒரு மாதிரி இருக்கு.
அட எதுக்குங்க டென்ஷன்.. ஜாலியா இருக்க வேண்டியதுதானே.. கலகலன்னு சிரிச்சுட்டே அடுத்தடுத்த வேலையைப் பார்த்தா ஒரு இதுவா இருக்கும்ல..
எதுவா?
ஒரு ஜாலியாதான்..
அதுக்கு இப்ப என்ன பண்ணனும்ங்கிற
அப்படி வாங்க வழிக்கு.. இந்தாங்க கடி ஜோக்ஸ்.. ரொம்பக் கடியாத்தான் இருக்கும்.. இருந்தாலும் படிக்கப் படிக்க மைன்ட் ரிலாக்ஸ் ஆய்ரும்... அப்புறம் ப்ரீ ஆய்டுவீங்க .. சரியா.. வாங்க ஜோக்குக்குள்ள போய்ரலாம்
1. சிவகாசிக்கும் நெய்வேலிக்கும் என்ன வித்தியாசம்?
சிவகாசில காச கரியாக்குவாங்க.
நெய்வேலிலே கரிய காசாக்குவாங்க!
2. FILES க்கும் PILES க்கும் என்ன வித்தியாசம்?
FILES அ உட்கார்ந்து பார்க்கணும்.
PILES க்கு பார்த்து உட்காரணும்.
3. செல்போனுக்கும் மனிதனுக்கும் என்ன வித்தியாசம்?
மனிதனுக்கு கால் இல்லேன்னா பேலனஸ் பண்ண முடியாது.
செல் போன்ல பேலன்ஸ் இல்லேன்னா கால் பண்ண முடியாது.
4. என்னதான் சென்டிமென்ட் பார்த்தாலும் கப்பல் கிளம்பும்போது பூசணிக்காய் எலுமிச்சம் பழம் வச்சு நசுக்கினாலும்.. சங்கு ஊதிட்டுதான் கிளம்பும்!
5. கணிப் பொறிக்கும் எலிப் பொறிக்கும் என்ன வித்தியாசம்???
கணிப் பொறியில் எலி வெளியே இருக்கும்.
எலிப் பொறியில் எலி உள்ளே இருக்கும்.
6. சரக்கு ரயில் தடம் புரண்டிருச்சாமே
அச்சச்சோ.. சரக்கு பூரா வீணாப் போய்ருக்குமே!
7. டாக்டர்: Very sad.. ஒரு அரை மணி நேரத்திற்கு முன்னாடி வந்திருந்தா உசுரைக் காப்பாத்திருக்கலாம்.
நோயாளியுடன் வந்தவர்: ஆனால் இவருக்கு ஆக்சிடன்ட் நடந்தே கால் மணி நேரம்தானே ஆச்சு டாக்டர்!
8. என்னடா சொல்ற மழைல நனஞ்சுதுல உன் தலை வீங்கிருச்சா
ஆமாடா
அதெப்படி வீங்கும்
நான் நனஞ்சது கொட்டுற மழையாச்சே!
9. உங்க போன் மூலமா பணம் சம்பாதிக்கணுமா
ஆமாங்க ஆமா.. ஆனா எப்படி
போனை வித்துருங்க!
10. 6ல 6 போகுமா
போகாது.. படகுதான் போகும்!
செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்
தனியார் துறையில் முதல் வேலை பெறுவோருக்கு ரூ. 15,000.. புதிய திட்டத்தை அறிவித்தார் பிரதமர் மோடி
இன்னும் எத்தனை காலந்தான் ஏமாற்றுவார் இந்த நாட்டிலே சொந்த நாட்டிலே நம் நாட்டிலே?: டாக்டர் அன்புமணி
எப்போது வாய்ப்பு கிடைக்கிறதோ அப்போது அஜித்தை வைத்து படம் இயக்குவேன்: லோகேஷ் கனகராஜ்
சென்னையில் தூய்மை பணியாளர்களுக்கு காலை உணவு திட்டம் தொடக்கம்: அமைச்சர் தங்கம் தென்னரசு
அவதூறு பரப்புகிறார்கள்..போற்றுவோர் போற்றட்டும்..புழுதி வாரி தூற்றுவோர் தூற்றட்டும்..டாக்டர் ராமதாஸ்
மலையாள நடிகை மினு முனீர் கைது.. சிறுமியை தவறாகப் பயன்படுத்தியதாக சென்னையில் புகார்
பணி நிரந்தரம் கோரி போராட்டத்தில் ஈடுபட்ட தூய்மை பணியாளர்கள் கைதுக்கு ஈபிஎஸ் கண்டனம்
Coolie Movie Review: ரஜினியின் "கூலி" படம் எப்படி இருக்கு.. தியேட்டர் அதிருதா.. இல்லை..?
ஆபரணத் தங்கத்தின் விலை இன்று எவ்வளவு தெரியுமா?
{{comments.comment}}