வாய்ப்புகள் அதிகரிப்பு.. தேசிய ஜனநாயக கூட்டணி வெற்றி பிரகாசமாக உள்ளது: ஜிகே.வாசன்

Apr 24, 2024,06:14 PM IST
தூத்துக்குடி: தமிழகத்தில் தேசிய ஜனநாயக கூட்டணி வெற்றி வாய்ப்பு பல இடங்களில் அதிகரித்துள்ளது. வாக்கு சதவீதம் எதிர்பார்த்ததை விட அதிகரிக்கும்  என்ற நம்பிக்கை உள்ளது என்று தமாகா தலைவர் ஜிகே வாசன் தெரிவித்துள்ளார்.

லோக்சபா தேர்தல் வாக்குப்ப பதிவு தொடங்கியுள்ளது. ஒரு கட்ட வாக்குப் பதிவு முடிந்து விட்டது. 2வது கட்ட வாக்குப் பதிவு 26ம்தேதி நடைபெறவுள்ளது.  ஜூன் 4ம் தேதி முடிவுகள் அறிவிக்கப்பட உள்ளன. இந்நிலையில் தூத்துக்குடி விமான நிலையத்தில் தமிழ் மாநில காங்கிரஸ் கட்சி தலைவர் ஜி.கே.வாசன் செய்தியாளர்களை சந்தித்து பேசுகையில் கூறியதாவது:



என்னை பொருத்தவ ரை இந்தியா முழுவதும் தேசிய ஜனநாயக கூட்டணி வெற்றி பிரகாசமாக உள்ளது. இந்தியா கூட்டணி முரண்பாட்டின் மொத்த உருவமாக உள்ளது. கேரள முதல்வர் இந்தியா கூட்டணி இல்லை என்று உறுதிப்படுத்தி உள்ளார். இதற்கு காரணம் இது தேர்தலுக்கான ஒரு அமைப்பு என்று தெளிவுபடுத்தி உள்ளார். தலைமை இல்லாத முதன்மையான கூட்டணி நாட்டின் பாதுகாப்பிற்கும் வளர்ச்சிக்கும் ஒருபோதும் நம்பிக்கை அளிக்க முடியாது.

தமிழகத்தில் தேசிய ஜனநாயக கூட்டணி வெற்றி வாய்ப்பு பல இடங்களில் அதிகரித்துள்ளது. வாக்கு சதவீதம் எதிர்பார்த்ததை விட அதிகரிக்கும் நம்பிக்கை உள்ளது. பலருக்கு வாக்குகள் இல்லை என்று வாக்களிக்க முடியாமல் நிராகரித்து இருப்பது ஏற்புடையது அல்ல. அதற்கு தேர்தல் ஆணையம் பொறுப்பேற்க வேண்டும். நம்முடைய விவசாயிகளுக்கு பயிர் பிரச்சனை மட்டுமல்ல உயிர் பிரச்சனை. 

ஆட்சியாளர்கள் எந்தவித ஆக்ரோஷமான பதிலையும் எதிரொலிக்கவில்லை.  இது கூட்டணி அரசியல், வாக்கு வங்கிக்காக விவசாயிகள் பக்கம் ஆட்சியாளர்கள் இல்லை என்பது வேதனைக்குரிய விஷயம்.  தமிழகத்தில் போதைப்பொருள் நடமாட்டம் அதிகரித்து வருவது கவலை அளிக்கிறது. போதைபொருளுக்கு முற்றுப்புள்ளி வைக்கக்கூடிய அரசாக செயல்பட இந்த அரசு தவறிவிட்டது. 

சட்ட ஒழுங்கு தமிழகத்தில் தொடர்ந்து சீர் கெட்டு போய்க்கொண்டிருக்கிறது. இளைஞர்கள் தவறான பாதைக்கு சென்று கொண்டிருக்கின்றனர். அரசு விழித்துக் கொள்ள வேண்டும். பள்ளிகள் கல்லூரிகள் துவங்குவதற்கு முன் போதை பொருள் நடமாட்டத்திற்கு முற்றுப்புள்ளி வைக்க வேண்டும். பறவை காய்ச்சல் தடுப்பதற்கான அனைத்து நடவடிக்கைகளும் சுகாதாரத்துறை மேற்கொள்ள வேண்டும் என்று கூறியுள்ளார்.

சமீபத்திய செய்திகள்

news

மக்களே உஷார்...இன்று இரவு கரையை கடக்கிறது மோன்டா புயல்

news

திருச்செந்தூரில் நடைபெறும் சாயா அபிஷேகம் பற்றி தெரியுமா?

news

12 ராசிகளுக்குமான இன்றைய ராசிபலன் அக்டோபர் 28, 2025... இன்று வெற்றிகள் தேடி வரும் ராசிகள்

news

தமிழ்நாட்டில் தேர்தல் ஆணையத்தின் SIR... நவ 2ல் அனைத்துக் கட்சிக் கூட்டம்.. முதல்வர் மு.க.ஸ்டாலின்!

news

நெருங்கும் மோன்தா புயல்.. தமிழகத்தில் 5 மாவட்டங்களுக்கு ஆரஞ்சு அலர்ட்.. வானிலை மையம் எச்சரிக்கை!

news

கரூர் கூட்ட நெரிசல் சம்பவம்: பலியானவர்களின் குடும்பங்களை சந்தித்து விஜய் ஆறுதல்!

news

மழையினால் சரக்குந்துகளிலேயே முளைத்த 36,000 நெல் மூட்டைகள்..திமுக அரசின் புதிய சாதனை:அன்புமணி ராமதாஸ்

news

பொய்கள் மூலம் திசைதிருப்ப முயற்சிக்க வேண்டாம்..தோல்விக்கு இப்போதே காரணம் தேடுகிறார் முதல்வர்:நயினார்

news

நடித்தாலே நாட்டை ஆளக் கூடிய அனைத்து திறமையும் வந்து விடுகிறது... இது ரொம்ப கொடுமையானது: சீமான்!

அதிகம் பார்க்கும் செய்திகள்