சென்னை: பல்கலைக்கழக துணைவேந்தர் நியமனம் தொடர்பாக யுஜிசி புதிய விதிகளை வெளியிட்டுள்ள நிலையில், இந்த யுஜிசி விதிகளுக்கு எதிராக முதல்வர் மு க ஸ்டாலின் கொண்டு வந்த தனித் தீர்மானம் இன்று தமிழக சட்டப்பேரவையில் ஒரு மனதாக நிறைவேற்றப்பட்டது.
பல்கலைக்கழகத்தில் துணை வேந்தர் நியமனம் தொடர்பாக பல்கலைக்கழக மானிய குழு புதிய விதிகளை உருவாக்கியுள்ளது. அதன்படி பல்கலைக்கழக துணை வேந்தர் நியமன தேர்வுக் குழு குறித்து ஆளுநரே முடிவு செய்வார் என்பது உள்பட பல்வேறு புதிய திருத்தங்கள் கொண்டு வரப்படுகின்றன. இதற்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் கடும் எதிர்ப்பு தெரிவித்திருந்தார். பல்வேறு கட்சிகளும் இதை கடுமையாக எதிர்த்துள்ளன.
இந்த நிலையில் பல்கலைக்கழக மானியக் குழுவின் புதிய விதிகளுக்கு எதிராகத் தமிழக சட்டசபைக் கூட்டத்தில் இன்று முதல்வர் மு.க.ஸ்டாலின் தனித் தீர்மானம் கொண்டு வந்தார். இந்த தீர்மானத்திற்கு ஆளும் திமுக கூட்டணி, அதிமுக, பாமக உள்பட சபையில் இருந்த அனைத்துக் கட்சிகளும் ஆதரவு அளிக்கவே தீர்மானம் ஒரு மனதாக நிறைவேறியது. அதேசமயம், இந்தத் தீர்மானத்தை எதிர்த்து பாஜக வெளிநடப்பு செய்தது.
முன்னதாக சட்டசபையில் முதல்வர் மு.க.ஸ்டாலின் பேசும்போது கூறியதாவது:
யுஜிசியின் நடவடிக்கை அரசியலமைப்பு சட்டத்தின் அடிப்படை கோட்பாடான கூட்டாட்சித் தத்துவத்துக்கு எதிரானது.பல்கலைக்கழகங்களில் துணைவேந்தர்களை நியமிப்பது தொடர்பாக சமீபத்தில் பல்கலைக்கழக நிதிநல்கைக் குழு வெளியிட்ட வரைவு நெறிமுறைகளைத் திரும்பப்பெற வேண்டுமென இப்பேரவை கருதுகிறது.
பல்கலைக்கழக நிதிநல்கைக் குழுவின் இத்தகைய நடவடிக்கைகள் இந்திய அரசமைப்புச் சட்டத்தின் அடிப்படைக் கோட்பாடான கூட்டாட்சித் தத்துவத்திற்கு எதிரானது மட்டுமல்ல. தமிழ்நாட்டின் உயர் கல்வி முறைக்கு பாதிப்பை ஏற்படுத்தக்கூடியதாகவும் அமைந்துள்ளது.
இளங்கலை, முதுகலைப் பட்டப்படிப்புகளில் கற்கை முறைகளுக்கான குறைந்தபட்ச வரைவு நெறிமுறைகள், 2024 மற்றும் பல்கலைக்கழகங்கள், கல்லூரிகளில் ஆசிரியர்கள், கல்விப் பணியாளர்கள் நியமனம் மற்றும் பதவி உயர்வு குறித்து வெளியிட்ட வரைவு நெறிமுறைகள், 2025 ஆகியன தேசிய கல்விக் கொள்கை, 2020-ன் அடிப்படையில் உருவாக்கப்பட்டுள்ளன.
தமிழ்நாட்டில் சமூகநீதிக் கோட்பாட்டின் அடிப்படையில் உருவாக்கப்பட்ட வலுவான உயர் கல்விக் கட்டமைப்பை இந்த வரைவு நெறிமுறைகள் பாதிக்கும் வகையில் அமைந்துள்ளதாலும், தமிழக இளைஞர்களின் எதிர்காலத்தை கடுமையாகப் பாதிக்கும் என்பதாலும் பல்கலைக்கழக நிதிநல்கைக் குழுவின் இந்த இரண்டு வரைவு நெறிமுறைகளையும், துணைவேந்தர் நியமனம் தொடர்பாக வெளியிடப்பட்டுள்ள வரைவு நெறிமுறைகளையும் உடனடியாகத் திரும்பப் பெற வேண்டும் என்று ஒன்றிய அரசின் கல்வித் துறையை இப்பேரவை ஒருமனதாக வலியுறுத்துகிறது என கூறியுள்ளார்.
செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்
தமிழ்நாட்டில்.. இன்று 9 மாவட்டங்களில் கன மழைக்கு வாய்ப்பு.. நாளை 5.. வானிலை மையம் தகவல்
பொது சிவில் சட்டம், ஒரே நாடு ஒரே தேர்தல் திட்டத்தால் பேராபத்து.. உதயநிதி ஸ்டாலின் கருத்து
நடிகர் விஜய் இந்தியா கூட்டணியில் வந்து சேரலாம்.. காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்தகை யோசனை!
வெகுவிரைவில் மக்கள் திமுக ஆட்சியை புறக்கணிப்பார்கள்.. பிரேமலதா விஜயகாந்த் பேச்சு
இந்த வருடம் நாங்கள் ஏன் சர் ஜான் மார்ஷல் பொங்கல் என்று கொண்டாடினோம்?
Taste Atlas most hated foods 2025.. லிஸ்ட்டுல உப்புமா இல்லை.. பஞ்சாபி மிஸ்ஸி ரொட்டிக்கு 56வது இடம்!
சாம்பியன்ஸ் டிராபி 2025.. இந்திய அணியை அறிவித்தது பிசிசிஐ.. துணை கேப்டனானார் சுப்மன் கில்!
Budget 2025.. ஜன. 31 முதல் பிப். 13 வரை பட்ஜெட் கூட்டத்தொடர்.. பிப். 1ல் பட்ஜெட் தாக்கல்!
ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல்.. திமுக, நாம் தமிழர் கட்சி வேட்பு மனுக்கள் ஏற்பு!
{{comments.comment}}