இடையில் கொஞ்சம் காணாமல் போன ஆதவ் அர்ஜூனா.. தேர்தல் உத்தி வகுப்பாளராக.. விஜய்யுடன் இணைகிறாரா?

Jan 29, 2025,04:11 PM IST

சென்னை: தமிழ்நாடு சட்டசபைத் தேர்தல் உத்தி வகுப்புப் பணிக்காக ஆதவ் அர்ஜூனாவின் Voice of commons தனியார் நிறுவனத்துடன், தமிழக வெற்றிக் கழகம் கட்சி, ஒப்பந்தம் செய்ய உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. 


தமிழக வெற்றி கழகத்தின் அரசியல் ஆலோசகராக ஜான் ஆரோக்கியசாமி இருந்து வருகிறார். கடந்த சில நாட்களுக்கு முன்னர் சர்ச்சைக்குரிய வகையில் ஜான் ஆரோக்கியசாமி பேசியதாக ஆடியோ ஒன்று வெளியானது. அந்த ஆடியோவில் கட்சியினுடைய பொதுச் செயலாளராக இருக்க கூடிய  புஸ்ஸி ஆனந்தை கடுமையாக விமர்சனம் செய்திருந்தார். புஸ்ஸி ஆனந்த தவெகவை முடக்க உள்ளதாகவும் பேசியிருந்தார். இந்த நிலை நீடித்தால் வருகிற சட்டமன்ற தேர்தலில் தவெகவின் நிலை கடுமையாக பாதிக்கப்படும் என்றும் பரபரப்பு ஏற்பட்டது.


இந்நிலையில், விடுதலை சிறுத்தைகள் கட்சியின் முன்னாள் பொதுச் செயலாளராக இருந்த ஆதவ் ஆர்ஜூனாவின் வாய்ஸ் ஆப் காமன்ஸ் என்ற தனியார் நிறுவனத்துடன் விஜய்யின் தவெக கட்சி ஒப்பந்தம் செய்ய உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. புதிய அரசியல் ஆலோசகராக ஆதவ் அர்ஜூனாவை விஜய் சேர்த்துள்ளதாகவும் கூறப்பட்டு வருகிறது.  




ஜான் ஆரோக்கியசாமியுடன் தவெக செய்துள்ள ஒப்பந்தம் முடிவுக்கு வருமா? அல்லது ஆதவ் ஆர்ஜூனாவுடன் சேர்ந்து சட்டமன்ற தேர்தல் கள வேலைகள் நடைபெறுமா என்ற கேள்விகள் எழுந்து வருகிறது. இந்த சூழலில் தான் இன்று மாலை ஆதவ் அர்ஜூனாவுடன் ஒப்பந்தம் செய்ய உள்ளதாக  தகவல் வெளியாகி இருப்பதாக கூறப்படுகிறது. 


ஜான் ஆரோக்கியசாமிதான் ஆரம்பத்திலிருந்து விஜய்க்கு வழிகாட்டி வருகிறார். அதேசமயம், திமுக, அதிமுகவைச் சேர்ந்த முக்கியத் தலைவர்களை தவெகவில் சேர்க்க அவர் எதிர்ப்பு தெரிவித்து வந்ததாக கூறப்படுகிறது. இதுதவிர பல்வேறு குழப்பங்களும் ஏற்பட்ட நிலையில் அவருடன் தொடர்ந்தால் சரிப்பட்டு வராது என்ற எண்ணத்துக்கு விஜய் வந்துள்ளதாக சொல்கிறார்கள். எதுவும் அதிகாரப்பூர்வாக தெரியவில்லை.



செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்

சமீபத்திய செய்திகள்

news

கதை அல்ல நிஜம்.. "ரோஷினியின் டைரி" .. அவள் எழுதிய வரிகள் நிஜமானது!

news

Sunday Special: சுவையான மக்ரூனி பிரியாணி.. சாப்ட்டுப் பாருங்க.. கிறங்கிப் போய்ருவீங்க!

news

கதை கேளு... கதை கேளு!

news

Malliga Selvaraj: அன்னை மடி!

news

தென்தமிழ் தலையங்கம்: திரைக்கலைத் தாத்தா சிங்கீதம் சீனிவாச ராவ்!

news

Asiad 2026 Cricket: தங்க மகளிரைப் பின்பற்றி.. பாகிஸ்தானை வீழ்த்தி தங்கம் வென்ற இந்திய ஆடவர்!

news

தவெக வேட்பாளர் குறித்து உருவக் கேலி: திமுக தலைவர் மு.க.ஸ்டாலினுக்கு முதல்வர் விஜய் கண்டனம்!

news

தாராபுரம் தவெக வேட்பாளரை உருவகேலி செய்த விவகாரம் : மு.க.ஸ்டாலின் மீது புகார்

news

மதுராந்தகம் இடைத்தேர்தல்: செங்கல்பட்டு மாவட்டம் முழுவதும் 4 நாட்கள் டாஸ்மாக் கடைகள் மூடல்

அதிகம் பார்க்கும் செய்திகள்