திருநெல்வேலி: கரூர் செல்ல விஜய் தயக்கம் காட்டுவதற்கு, அவரது உயிருக்கு உத்தரவாதம் இல்லை என்று அவர் நினைத்திருக்கலாம் என்று தமிழ்நாடு பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன் தெரிவித்துள்ளார்.
கரூர் சம்பவத்திற்குப் பிறகு தவெக தலைவர் விஜய் சென்னை திரும்பிய பிறகு வெளியில் எங்கும் செல்லாமல் இருக்கிறார். வீட்டில் இருந்தபடியே சட்ட ரீதியான ஆலோசனைகளை நடத்தி வருகிறார். தனது கட்சியினருடன் ஆலோசனை நடத்தியுள்ளார். மேலும் கரூரில் பாதிக்கப்பட்ட குடும்பத்தினருடன் வீடியோ கால் மூலம் பேசியுள்ளார். விரைவில் கரூர் வருவேன் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

இந்த நிலையில் வெளியில் வராமல் இருப்பதையும் அவரது எதிர்க்கட்சியினர் அரசியலாக்கி வருகின்றனர். இந்த விவகாரம் தொடர்பாக பாஜக தலைவர் நயினார் நாகேந்திரனிடம் செய்தியாளர்கள் கேட்டபோது, கரூரில் 41 பேர் உயிரிழந்த சம்பவம் விஜய்யைப் பாதித்திருக்கிறது. சதி வேலை என்று அவர் கருதுகிறார். இப்போது நாம் போனால் நம்மையும் கூட ஏதாவது செய்து விடலாம் என்று அவர் நினைக்கலாம். தனது உயிருக்கு உத்தரவாதம் இல்லை என்றும் கூட விஜய் கருதலாம். இதனால்தான் அவர் போகாமல் இருக்கலாம் என்றார்.
அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிச்சாமியும், விஜய்யும் தொலைபேசியில் பேசியதாக செய்திகள் வருகிறதே என்ற கேள்விக்கு அதுகுறித்து எனக்குத் தெரியாது. அவர்கள் பேசியிருக்கலாம் என்று பதிலளித்தார் நயினார் நாகேந்திரன்.
நவம்பர் 1-க்குள் தமிழில் கடையின் பெயர் பலகைகள்...சென்னை உயர் நீதிமன்றம் அதிரடி உத்தரவு!
"பூச்சாண்டிகளுக்கு எல்லாம் அஞ்சிட மாட்டோம்": கே.என்.நேரு வீடு ரெய்டிற்கு மு.க.ஸ்டாலின் கண்டனம்!
"ராகுல் காந்திதான் பிரதமர் வேட்பாளர்": தவெக கூட்டணி குறித்து மாணிக்கம் தாகூர் பரபரப்பு பேட்டி!
"ஸ்கிரீன் டைம் போதையாக மாறிவிட்டது" – பிரதமர் நரேந்திர மோடி எச்சரிக்கை!
பெண்களை இழிவுபடுத்தும் விளம்பரங்களை வைக்கலாமா.. மெட்ரோவுக்கு சு. வெங்கடேசன் கேள்வி
முன்னாள் காங்கிரஸ் எம்.எல்.ஏ அசன் மௌலானாவுக்கு 3 ஆண்டுகள் தேர்தலில் போட்டியிடத் தடை
திமுக முன்னாள் அமைச்சர் கே.என்.நேரு வீடுகளில் லஞ்ச ஒழிப்புத்துறை அதிரடி சோதனை
கப்பலோட்டிய தமிழர் வ.உ.சிதம்பரனார்.. சிறைப்பட்டார் செக்கிழுத்தார் அது செக்கல்ல!
ஆசிரியர் ஓர் அகல்விளக்கு
{{comments.comment}}