சென்னை: தமிழ்நாடு பட்ஜெட் கூட்டத்தொடர் பிப்ரவரி 12ஆம் தேதி ஆளுநர் உரையுடன் தொடங்கும் என சட்டசபை சபாநாயகர் அப்பாவு அறிவித்துள்ளார்.
சட்டப்பேரவையில் பிப்ரவரி 19ஆம் தேதி நிதியமைச்சர் தங்கம் தென்னரசு தமிழ்நாடு பட்ஜெட்டை தாக்கல் செய்ய உள்ளார்.
மத்திய பட்ஜெட் இன்று தாக்கல் செய்துள்ள நிலையில், பிப்ரவரி 12ஆம் தேதி தமிழ்நாடு பட்ஜெட் கூட்டம் நடைபெறும் என சபாநாயகர் அப்பாவு அறிவித்துள்ளார். இதில் என்ன சிறப்பம்சங்கள் இடம்பெற வாய்ப்புள்ளது.. எதற்கெல்லாம் நிதி ஒதுக்க இயலும்..புதிய திட்டங்கள் பற்றிய அறிவிப்புகள் வெளியாகுமா.. போன்றவை குறித்து தமிழக பட்ஜெட்டில் இடம்பெறும் என்ற எதிர்பார்ப்புகள் நிலவி வருகிறது.
தமிழ்நாட்டிற்கு புதிய தொழில் முதலீடுகளை ஈர்ப்பது தொடர்பாக அரசு முறை பயணமாக ஸ்பெயின் நாட்டிற்கு சென்றுள்ள முதல்வர் ஸ்டாலின் வரும் 7ஆம் தேதி தமிழகம் வருவதாக தகவல் வெளியாகி உள்ளது. இந்நிலையில் தமிழ்நாடு பட்ஜெட் கூட்டத்தொடர் தொடர்பாக, சபாநாயகர் அப்பாவு செய்தியாளர் சந்திப்பின்போது கூறுகையில், தமிழ்நாடு பட்ஜெட் கூட்டத்தொடர் பிப்ரவரி 12ஆம் தேதி தொடங்கும். இந்த பட்ஜெட் கூட்டத்தொடர் ஆண்டின் முதல் கூட்டம் என்பதால் தமிழக சட்டப்பேரவையில் ஆளுநர் ஆர்.என் ரவி உரையுடன் தொடங்கும்.
இதனைத் தொடர்ந்து பிப்ரவரி 19ஆம் தேதி அமைச்சர் தங்கம் தென்னரசு பட்ஜெட்டை தாக்கல் செய்ய உள்ளார். பிப்ரவரி 20ஆம் தேதி 2024 - 25 நிதியாண்டுக்கான வேளாண் பட்ஜெட் தாக்கல் செய்யப்படுகிறது. 21ஆம் தேதி 2023- 24 ஆண்டுக்கான முன்பண செலவு மானிய கோரிக்கை மீதான விவாதம் நடைபெறும். இந்த சட்டப்பேரவை நிகழ்வுகள் மற்றும் நடவடிக்கைகளை நேரலையில் முழுமையாக காண்பிக்க வேண்டும் என விரும்புகிறோம் என்று கூறியுள்ளார்.
கடந்த ஆண்டு ஆளுநர் உரையின்போது, உரையில் சில பகுதிகளை திருத்தியும், சில பகுதிகளைப் படிக்காமலும் விட்டார் ஆளுநர் ஆர். என். ரவி. இது சர்ச்சையைக் கிளப்பியது. இதுதொடர்பாக உடனடியாக முதல்வர் மு.க.ஸ்டாலின் சுட்டிக் காட்டி அறிக்கை வாசிக்கவே, கோபமடைந்த ஆளுநர் கூட்டத்திலிருந்து வெளிநடப்புச் செய்தார் என்பது நினைவிருக்கலாம். இந்த முறை சுமூகமான கூட்டமாக இது இருக்குமா என்ற பரபரப்பான எதிர்பார்ப்பு நிலவுகிறது.
முட்டி மோதிய சென்னை சூப்பர் கிங்ஸ்.. மீண்டும் தோல்வி.. தட்டித் தூக்கிய ஹைதராபாத்!
ஆளுநர் ஆர். என். ரவி.. பாஜக தலைவராக வந்து அரசியல் செய்யலாமே.. அமைச்சர் கோவி. செழியன்
துணைவேந்தர்களுக்கு மிரட்டல்.. முதல்வர் ஸ்டாலின் அச்சப்படுகிறாரா.. ஆளுநர் ஆர். என். ரவி கேள்வி
ஏ.ஆர்.ரஹ்மான் மீது காப்புரிமை வழக்கு... ரூ.2 கோடி செலுத்த டெல்லி உயர்நீதிமன்றம் உத்தரவு!
பாகிஸ்தானியர்களை வெளியேற்றுங்கள்.. மாநில அரசுகளுக்கு மத்திய அமைச்சர் அமித்ஷா அறிவுறுத்தல்!
ஒரு வருஷத்துக்கு முன்பு என்னைப் புகழ்ந்தவர்களா இவர்கள்??.. ஒலிம்பியன் நீரஜ்சோப்ரா பெரும் வேதனை!
எல்லைக் கட்டுப்பாட்டுக் கோட்டுப் பகுதியில்.. துப்பாக்கிச் சூட்டில் இறங்கிய பாக்.. இந்தியா பதிலடி
முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கு மே 3ம் தேதி பாராட்டு விழா: அமைச்சர் கோவி செழியன் அறிவிப்பு
ஆளுநர் ஆர். என். ரவி கூட்டிய ஊட்டி மாநாடு.. அரசு பல்கலைக்கழக துணைவேந்தர்கள் பங்கேற்கவில்லை
{{comments.comment}}