பெங்களூரு: ஜெயலலிதாவின் 27 கிலோ தங்க நகைகள் உள்ளிட்ட பொருட்களை இன்று தமிழக அரசிடம் ஒப்படைக்கும் பணி பெங்களூர் கோர்ட்டில் தொடங்கியது.
1996ம் ஆண்டு வருமானத்திற்கு அதிகமாக சொத்து சேர்த்தாக முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவிடம் இருந்து 27 கிலோ தங்க நகைகள், 800 கிலோ வெள்ளி, வைர நகைகள்,11,344 விலை உயர்ந்த பட்டுப்புடவைகள் உள்ளிட்ட பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டன. இவ்வழக்கு விசாரணை பெங்களூரு நீதிமன்றத்தில் நடைபெற்று வந்ததால் பறிமுதல் செய்யப்பட்ட அனைத்து பொருட்களும் பெங்களூரு கருவூலத்தில் வைக்கப்பட்டது.
இந்த வழக்கு விசாரணையில் இருந்த போது, 2016ம் ஆண்டு முன்னாள் முதல்வர் ஜெயலலிதா உடல் நலக்குறைவால் காலமானார். அவர் குற்றவாளி என உயர்நீதிமன்றம் உறுதி செய்த நிலையில், நகைகள் பெங்களூரில் உள்ள கருவூலத்தில் தான் இருந்தது. இந்நிலையில், பெங்களூரு சிறப்பு நீதி மன்றத்தில் சமூக ஆர்வலர் நரசிம்ம மூர்த்தி என்பவர், ஜெயலலிதாவின் நகைகளை ஏலம் விட வேண்டும் என்றும், அதில் கிடைக்கும் பணத்தில் நலத்திட்ட உதவிகள் செய்ய வேண்டும் என்று வழக்கு தொடுத்திருந்தார். இவரை அடுத்து ஜெயலலிதாவின் அண்ணன் மகள் ஜெ.தீபா தனக்கு இதில் உரிமை உண்டு எனவும், நகைகளை தன்னிடம் வழங்க வேண்டும் என்று மனு தாக்கல் செய்திருந்தார்.

இந்நிலையில், இந்த நகைகளை தமிழ்நாடு அரசிடம் கடந்த ஆண்டு 6 மற்றும் 7ம் தேதிகளில் ஒப்படைக்க சிறப்பு நீதிபதி உத்தரவிட்டிருந்தது. இதனை எதிர்த்து கர்நாடக ஐகோர்ட்டில் ஜெ.தீபா தாக்கல் செய்த மனுவின் அடிப்படையில் ஜெயலலிதாவின் நகைகளை தமிழக அரசிடம் வழங்க இடைக்கால தடை விதிக்கப்பட்டது. அதைத் தொடர்ந்து ஜெயலலிதாவின் நகைகளை ஒப்படைக்கும் பணி நிறுத்தப்பட்டது. இந்த நிலையில் தீபாவின் கோரிக்கை மனு நிராகரிக்கப்பட்டது.
இதையடுத்து பெங்களூரு சிறப்பு கோர்ட் ஜெயலலிதாவின் நகைகளை தமிழக அரசிடம் பிப்ரவரி 14 மற்றும் 15ம் தேதிகளில் ஒப்படைக்கும்படி கடந்த மாதம் ஜனவரியில் உத்தரவிட்டது. இந்தநிலையில், பெங்களூரு சிட்டி சிவில் கோர்ட் வளாகத்தில் உள்ள சிபிஐ சிறப்பு கோர்ட்டில் நீதிபதி மோகன் முன்னிலையில் ஜெயலலிதாவின் நகைகள் சரிபார்க்கப்பட்டு தமிழக அரசிடம் ஒப்படைக்கும் பணி நடைபெற்று வருகிறது.
மகாலட்சுமியின் வடிவம்.. பூமாதேவியின் அம்சம்..வராகி அம்மன் சிறப்புகள்!
ஜனநாயகன் இழுபறி தொடர்கிறது.. பாரசக்திக்கு யுஏ கிடைத்தது.. திட்டமிட்டபடி நாளை ரிலீஸ்!
பொங்கலுக்கு ரூ.3000 கொடுக்க...விவசாயிகளின் பயிர்க் கடன் பணத்தை மடைமாற்றிய திமுக அரசு: அண்ணாமலை
யாருடன் கூட்டணி?...நாளை முடிவெடுக்கிறார் பாமக நிறுவனர் ராமதாஸ்
GOLD RATE:தங்கம் விலை சவரனுக்கு ரூ.400 உயர்வு... வெள்ளி கிராமிற்கு ரூ.4 குறைவு!
தேசியக் கட்சிகள் இல்லாமல் திராவிடக் கட்சிகளால் ஜெயிக்க முடியாதா??
காலை உணவு சாப்பிடுவதற்கு சரியான நேரம் எது? ஏன்?
ஜனநாயகன் பட தீர்ப்பை எதிர்த்து சென்சார் போர்டு மேல்முறையீடு
விஜய்யின் ‘ஜனநாயகன்’ படத்திற்கு யு/ஏ சான்று...சென்னை ஐகோர்ட் அதிரடி உத்தரவு
{{comments.comment}}