TET தேர்வு.. சோசியல் சயின்ஸுக்கு மட்டும் ஏன் இந்த சலுகை.. முரண்களைக் களையுங்களேன்!

Nov 19, 2025,10:13 AM IST

சென்னை: டெட் எனப்படும் ஆசிரியர் தகுதித் தேர்வில் சில முரண்பாடுகள் உள்ளதாக ஒரு ஆசிரியை நம்மிடம் குமுறியுள்ளார். அவரது குமுறலும் நியாயமாகத்தான் இருக்கிறது. அப்படி என்னதான் முரண்பாடுகள் உள்ளன.. அந்த சோகத்தை நீங்களே படிச்சுப் பாருங்க.


தமிழ், ஆங்கிலம், கணிதம், அறிவியல் ஆகிய பாடங்களை முதன்மை பாடங்களாக படித்தவர்களுக்கு முதன்மை பாடத்தில் 30 மதிப்பெண்களுக்கு வினாக்கள் .


ஆனால் சமூக அறிவியல் பாடத்தை முதன்மை பாடமாக படித்தவர்களுக்கு மட்டும் முதன்மை பாடத்தில் 60 மதிப்பெண்களுக்கு வினாக்கள். அதாவது மற்ற பாடங்களை விட சமூக அறிவியல் பாடம் படித்தவர்களுக்கு மட்டுமே தேர்ச்சி பெறும் வாய்ப்பு அதிகமாக உள்ளது...  கடந்த ஆண்டுகள் ஆசிரியர் தகுதி தேர்வு _ தேர்ச்சி விகிதங்கள் இதற்கு சான்று.


ஏன் இந்த பாரபட்சம்...




இதே மதிப்பெண் முறையை  ஆசிரியர்களுக்கான சிறப்பு தகுதி தேர்விலும் பின்பற்றினால் சமூக அறிவியல் பாடம் கற்பிக்கும் ஆசிரியர்களுக்கு மட்டுமே வெற்றி வாய்ப்புகள் அதிகம்.. பாதிக்கப்படுவது தமிழ், ஆங்கிலம் கற்பிக்கும் ஆசிரியர்கள் மட்டுமே...


இந்த முறையை முற்றிலும் உடனடியாக மாற்ற வேண்டும்.. வெற்றி வாய்ப்புகள் அனைத்து பாடப்பிரிவிற்கும் சமமாக வழங்கப்பட வேண்டும்..


அனைவரும் எழுத வேண்டிய பொதுப்பகுதி


1.தமிழ் 30 மதிப்பெண் 

2.ஆங்கிலம் 30 மதிப்பெண் 

3.உளவியல் 30 மதிப்பெண் 


90 மதிப்பெண் வினாக்கள் (பொதுபிரிவு)


கணிதம் & அறிவியல்  பாடங்களை முதன்மை பாடமாக எடுத்தவர்கள்.


1.கணிதம் - 30மதிப்பெண்

2.அறிவியல் 30மதிப்பெண் 


தமிழ் & ஆங்கிலம் - பாடங்களை முதன்மை பாடமாக எடுத்தவர்கள்


1.சமூக அறிவியல் _ 60 மதிப்பெண்


சமூக அறிவியல் _ முதன்மை பாடமாக எடுத்தவர்கள்


1. சமூக அறிவியல் 60மதிப்பெண்...


இந்த முறைமை சரியா?  மதிப்பெண் பெறும் வாய்ப்புகள் அனைத்து பாடப்பிரிவிற்கும் ஏன் சமமாக வழங்கப்படவில்லை...


மாற்றம் தேவை:


1. சமூக அறிவியல் போன்றே அனைத்து முதன்மை பாடத்திற்கு மதிப்பெண் 60

2. அல்லது சமூக அறிவியல் பாடம் படித்தவர்களுக்கு 30 மதிப்பெண் என அனைத்து பாடம் படித்தவர்களுக்கு உள்ளது போல் மதிப்பெண் குறைப்பது


இந்த மாற்றம் இல்லையேல் கல்வியில் சம உரிமை இல்லை என்று தான் அர்த்தம்...


உரியவர்கள் இதைப் பார்த்து மாற்றத்தைக் கொண்டு வந்தால் அனைத்துப் பிரிவு ஆசிரியர்களும் அகமகிழ்வார்கள்.. செய்வார்களா.. அவர்கள் செய்வார்களா.. பொறுத்திருந்து பார்ப்போம்.

செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்

சமீபத்திய செய்திகள்

news

வானம் அருளும் மழைத்துளியே!

news

12 ராசிகளுக்குமான இன்றைய ராசிபலன் நவம்பர் 19, 2025... இன்று கார்த்திகை மாத அமாவாசை

news

வெடிகுண்டு மிரட்டல்.. அதிகாலையிலேயே வந்த பரபரப்பு மெயில்.. உஷாரான போலீஸார்

news

கோவையில் இயற்கை வேளாண் மாநாடு.. பிரதமர் நரேந்திர மோடி இன்று வருகை

news

TET தேர்வு.. சோசியல் சயின்ஸுக்கு மட்டும் ஏன் இந்த சலுகை.. முரண்களைக் களையுங்களேன்!

news

கொரியன்களுக்கு ஏன் தொப்பை இல்லை தெரியுமா.. கவிஞர் சொல்கிறார் கேளுங்கள்!

news

9 மாவட்டங்களுக்கு இன்று கனமழையும்.. நெல்லைக்கு மிக கன மழைக்கான ஆரஞ்ச் அலர்ட் : வானிலை மையம் தகவல்!

news

திமுக ஆட்சியில் சென்னை ரவுடிகளின் சாம்ராஜ்யமாக மாறிவிட்டது: எடப்பாடி பழனிச்சாமி குற்றச்சாட்டு!

news

சுகாதாரமற்ற குடிநீரை வழங்கி தமிழக மக்களைக் காவு வாங்கத் துடிக்கிறதா திமுக அரசு?: நயினார் நாகேந்திரன்

அதிகம் பார்க்கும் செய்திகள்