திருப்பூர்: அதிகாலை காட்சியெல்லாம் தேவையில்லாதது.. நாங்க போட மாட்டோம் என்றெல்லாம் லியோ பட வெளியீட்டுக்கு முன்பு சவடாலாக பேசி வந்த திருப்பூர் சுப்பிரமணியம், இப்போது தனது தியேட்டரிலேயே சட்ட விரோதமாக அதிகாலை காட்சியை ஒளிபரப்பி சிக்கலில் மாட்டியுள்ளார்.
கலெக்டரிடமிருந்து நோட்டீஸ் பெற்றுள்ள அவர் தற்போது தமிழ்நாடு திரையரங்க உரிமையாளர்கள் சங்கத்திற்குள் எழுந்த கடும் எதிர்ப்பு காரணமாக தலைவர் பதவியையே ராஜினாமா செய்து விட்டார்.
தமிழ்ப் படத்துக்குத்தான் அதிகாலை காட்சி கிடையாது, இந்திப் படங்களுக்கு உண்டு என்று தெரியாமல் நினைத்து காட்சியை போட்டு விட்டதாக அவர் சப்பைக்கட்டு விளக்கமும் அளித்துள்ளார்.

சுப்பிரமணியனுக்கு திருப்பூரில் சக்தி சினிமாஸ் என்கிற திரையரங்கு உள்ளது. இந்த திரையரங்கில், தீபாவளியை முன்னிட்டு அரசாணையை மீறி டைகர் 3 படத்தை காலை 7 மணிக்கு திரையிட்டதாக இவர் மீது குற்றச்சாட்டு எழுந்தது. காலை 7 மணிக்கு திரையிட்டதற்கான ஆன்லைன் புக்கிங் செய்யப்பட்டதற்கான ஆதாரங்களும் வெளியாகின. சுப்பிரமணியன் மீது ஏற்பட்ட புகாரின் அடிப்படையில் தாசில்தார் நேரடியாக சென்று விசாரித்து அதுதொடர்பான தகவல்களை திருப்பூர் மாவட்ட கலெக்டருக்கு அனுப்பி வைத்தார்.
இந்த அறிக்கையில், அரசு அனுமதித்த நேரத்திற்கு முன்பாக சிறப்பு காட்சிகள் வெளியிட்டதற்கான ஆதரங்கள் இருந்தன. இதற்கான விளக்கம் கேட்டு தியேட்டர் உரிமையாளர் சக்தி சுப்ரமணியத்திற்கு மாவட்ட நிர்வாகம் தரப்பில் இருந்து நோட்டீஸ் அனுப்பட்டது. இந்த சம்பவத்தால் அவர் அதிர்ச்சி அடைந்தார். மேலும், அவர் விளக்கும் கொடுப்பதை வைத்தே அடுத்த கட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டிருந்த நிலையில், தற்போது சுப்பிரமணியன் அதிரடியாக தன்னுடைய தலைவர் பதவியை தானாக முன் வந்து ராஜினாமா செய்வதாக அறிவித்துள்ளார்.
இந்த நிலையில் சக்தி சுப்பிரமணியம் இன்று நிருபர்களை சந்தித்து கூறுகையில், "எனது சொந்த வேலை காரணமாக, நமது சங்க தலைவர் பதவியை ராஜினாமா செய்கிறேன். இதுவரை ஒத்துழைப்பு கொடுத்த, அனைவருக்கும் எனது மனமார்ந்த நன்றி என தெரிவித்துள்ளார்.
லியோ படத்தின்போது இவர் விஜய் ரசிகர்களின் கடும் கோபத்தையும், எதிர்ப்பையும் சம்பாதித்திருந்தார். இப்போது அவர் பேசிய பேச்சு அவருக்கே எதிராக திரும்பியிருப்பது குறிப்பிடத்தக்கது.
SIR-க்கு எதிராக ஒருங்கிணைந்து குரல் கொடுக்க வேண்டியது நமது கடமை.. முதல்வர் மு.க.ஸ்டாலின்
அடிப்படை ஜனநாயக உரிமையைக் கேள்விக்கு உள்ளாக்கும் சிறப்புத் தீவிரத் திருத்தம்.. தவெக
தமிழ்நாடு சட்டசபைத் தேர்தலை சீர்குலைக்கும் முயற்சியே SIR.. விசிக தலைவர் திருமாவளவன் பேச்சு
SIR பணிகளை நிறுத்த வேண்டும்.. இல்லாவிட்டால் வழக்குத் தொடர்வோம்.. அனைத்துக் கட்சிக் கூட்டம் தீர்மானம்
தமிழகத்தில் இன்று முதல் நவம்பர் 7ம் தேதி வரை மழைக்கு வாய்ப்பு: சென்னை வானிலை மையம்!
ஸ்ரீகாகுளம் கோவில் நிர்வாகம் அனுமதி வாங்கவில்லை...விசாரணைக்கு ஆந்திர முதல்வர் உத்தரவு
அரசின் தோல்விக்காக.. ஆசிரியர்கள் மற்றும் கல்வி அதிகாரிகளை கையேந்த வைப்பது கண்டிக்கத்தக்கது: அன்புமணி
மத்திய அரசு பள்ளிகளில் இந்தியை திணிக்கிறது...சித்தராமைய்யா காட்டம்
திமுகவிடம் இருந்து தமிழ்நாட்டை மீட்போம்.. 2026ல் உண்மையான மக்களாட்சியை அமைப்போம்: தவெக தலைவர் விஜய்
{{comments.comment}}