சென்னை:தமிழக கல்வி அமைச்சரே தாங்கள் மத்திய ஆட்சியில் இருக்கும் போது மறந்து விடுவதும், எதிர்க்கட்சி ஆட்சியில் இருக்கும் போது கோரிக்கை வைப்பதும் திருந்தாத திராவிட மாடல் என டாக்டர் தமிழிசை சௌந்தரராஜன் கடுமையாக சாடியுள்ளார்.
திருவள்ளுவர் சிலை வெள்ளிவிழா ஆண்டு கொண்டாட்டத்தை முன்னிட்டு சென்னையில் பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொண்ட தமிழக பள்ளிக் கல்வி துறை அமைச்சர் அன்பில் மகேஷ், தமிழ்நாட்டிற்கு தர வேண்டிய நிலுவைத் தொகையை தராமல் மத்திய அரசு வஞ்சிக்கிறது. மும்மொழிக் கொள்கையை ஒப்புக்கொண்டதால் தான் நிதியை விடுவிப்போம் என மத்திய அரசு நெருக்கடி கொடுக்கிறது. கல்வியை மாநில பட்டியலுக்கு மாற்ற வேண்டும் என செய்தியாளர்களிடம் தெரிவித்திருந்தார்.

இந்த நிலையில் அமைச்சர் அன்பில் மகேஷ் பேச்சுக்கு எதிர்ப்பு தெரிவித்து பாஜக பொதுசெயலாளர் டாக்டர் தமிழிசை சௌந்தரராஜன் சரமாரியாக கேள்வி எழுப்பியுள்ளார்.
இது குறித்து அவர் எக்ஸ் தள பக்கத்தில் பதிவிட்டு கூறியதாவது , தமிழக மக்கள் ஒன்றை புரிந்து கொள்ள வேண்டும் திமுக தான் தமிழக மக்களை வஞ்சிக்கிறது... ஒரே ஒரு கேள்வியைத்தான் நாம் கேட்கிறோம் தமிழகத்தில் தனியார் பள்ளிகளில் மும் மொழிக் கொள்கை பின்பற்றப்படுகிறது.. புதிய கல்விக் கொள்கை கூட ஏதாவது ஒரு மொழி என்று தான் சொல்கிறது. ஆனால் தமிழகத்தில் உள்ள தனியார் பள்ளிகள் மூன்றாவது மொழியாக ஹிந்தி சொல்லிக் கொடுக்கிறார்கள் என்பதை மறுக்க முடியுமா.?. எங்கள் பிள்ளைகளை பார்த்துக் கொள்கிறோம் என்கிறீர்கள்.. தமிழகப் பிள்ளைகளின் தனியார் பள்ளிகளில் மும் மொழிக் கொள்கை அரசு பள்ளி பிள்ளைகளுக்கு இருமொழிக் கொள்கை என்ற பாகுபாடு சரியா? ஏழைக் குழந்தைகளை இப்படி வஞ்சிக்கலாமா?
மும்மொழிக் கல்வியை ஒப்புக்கொண்டால் என்ன? தெலுங்கானாவில் அனைத்து பள்ளிகளிலும் இந்தி படிக்கிறார்கள். மூன்றாவது மொழியை கற்றுத்தராமல் தமிழ்நாடு அரசுதான் மாணவர்களை வஞ்சிக்கிறது. தமிழக அரசின் கல்வி அமைச்சர் அவர்களே...மத்திய ஆட்சியில் நீங்கள் பங்கெடுத்துக் கொண்டிருந்தபோது இதை ஏன் செய்யவில்லை... வளமாக ஆறு மத்திய அமைச்சர்கள் திமுகவில் வலம் வரும்போது கல்வி துறையைப் பெற்று இந்த மாற்றத்தை ஏற்படுத்தி இருக்கலாமே... தாங்கள் மத்திய ஆட்சியில் இருக்கும் போது மறந்து விடுவதும், எதிர்க்கட்சி ஆட்சியில் இருக்கும் போது கோரிக்கை வைப்பதும் திருந்தாத திராவிட மாடல்.. என கூறியுள்ளார்.
செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்
அத்தே.. அத்தே...!
காஞ்சிபுரம் மக்களை தவெக தலைவர் விஜய் நாளை சந்திக்கிறார்: புஸ்ஸி ஆனந்த்!
முட்டி நின்று பார்த்ததனால்... புத்தம் புதிதாய் பூத்த மலர் போல்...!
சற்று ஆறுதலடைந்த வாடிக்கையாளர்களை மீண்டும் அதிர்ச்சிஅடையச் செய்த தங்கம் விலை.. விலை என்ன தெரியுமா?
திமுகவுடன் பேச 5 பேர் குழு.. விஜய்யுடன் பேச்சு கிசுகிசுப்புக்கு.. முற்றுப்புள்ளி வைக்கிறது காங்!
ஆட்டுக்குட்டி ஆட்டுக்குட்டி இங்கே வா வா (மழலையர் பாடல்)
ஜனநாயகன் விஜய்.. ஓவர் டூ மலேசியா.. உற்சாகத்தில் ரசிகர்கள்.. டிசம்பர் 27ல் சரவெடி!
நான் விரும்பும் வகுப்பறை
12 ராசிகளுக்குமான இன்றைய ராசிபலன் நவம்பர் 22, 2025... இன்று பணவரவு அதிகரிக்கும்
{{comments.comment}}