தமிழகத்தில் 2026 சட்டமன்றத் தேர்தலுக்கான அரசியல் களம் தற்போதே சூடுபிடிக்கத் தொடங்கிவிட்டது. குறிப்பாக, பாஜக இம்முறை கணிசமான இடங்களைக் கைப்பற்ற வேண்டும் என்ற நோக்கில் தனது 'விஐபி' (VIP) வேட்பாளர்களைக் களமிறக்கத் திட்டமிட்டு வருகிறது.பாஜக சார்பில் போட்டியிட அதிக வாய்ப்புள்ள முக்கியப் பிரமுகர்கள் மற்றும் அவர்கள் போட்டியிட வாய்ப்புள்ள, வெற்றி வாய்ப்புகள் அதிகமுள்ள தொகுதிகள் குறித்து அலசி ஆராய்வோம்.
பாஜகவின் 'விஐபி' வேட்பாளர்கள் :

2024 மக்களவைத் தேர்தலில் பாஜகவின் வாக்கு வங்கி அதிகரித்துள்ள நிலையில், 2026-ல் மாநில சட்டமன்றத்திற்குள் நுழைய அக்கட்சி வலுவான வேட்பாளர்களை முன்னிறுத்துகிறது.
1. கே. அண்ணாமலை (முன்னாள் மாநிலத் தலைவர்) - பாஜகவின் முகமாகத் திகழும் அண்ணாமலை, 2026 தேர்தலில் போட்டியிடுவது உறுதி எனத் தெரிகிறது.அவர் ஏற்கனவே போட்டியிட்ட அரவக்குறிச்சி அல்லது மக்களவைத் தேர்தலில் கணிசமான வாக்குகளைப் பெற்ற கோயம்புத்தூர் தெற்கு / வடக்கு தொகுதிகளில் ஒன்றைத் தேர்வு செய்ய வாய்ப்புள்ளது. இவர் கடந்த லோக்சபா தேர்தலில் 32.79% ஓட்டுக்கள் பெற்று 2ம் இடம் பிடித்தார்.அண்ணாமலை போட்டியிடும் தொகுதி நட்சத்திரத் தொகுதியாக மாறும் என்பதில் சந்தேகமில்லை.கொங்கு மண்டலத்தில் பாஜக.,விற்கும் அண்ணாமலைக்கும் செல்வாக்கு இருப்பதால் இவர் இந்த முறை வெற்றி பெறவும் வாய்ப்புள்ளது.
2. எல்.முருகன் (மத்திய இணை அமைச்சர்) - மத்திய அமைச்சராகப் பொறுப்பு வகித்தாலும், தமிழக சட்டமன்றத்தில் ஒரு இடத்தைப் பிடிக்க பாஜக இவரை மீண்டும் களமிறக்கலாம். தாராபுரம் (தனி) அல்லது கொங்கு மண்டலத்தின் ஏதேனும் ஒரு பாதுகாப்பான தொகுதி இவருக்கு ஒதுக்கப்பட வாய்ப்புள்ளது.காரணம், பட்டியலின மக்களின் வாக்குகளை ஒருங்கிணைக்க இவர் ஒரு முக்கியக் காரணியாக இருப்பார் என பாஜக கருதுவது தான்.
3. வானதி சீனிவாசன் (தேசிய மகளிர் அணித் தலைவர்) -தற்போது கோயம்புத்தூர் தெற்கு தொகுதியின் எம்.எல்.ஏ-வாக இருக்கும் இவர், மீண்டும் அதே தொகுதியில் போட்டியிடவே அதிக வாய்ப்புள்ளது. கடந்த முறை கமல்ஹாசனை வீழ்த்திய இவர், இந்த முறை உதயநிதி ஸ்டாலின் அல்லது டிவிகே (TVK) வேட்பாளரை எதிர்கொள்ள நேரிடலாம்.
4. தமிழிசை சௌந்தரராஜன் (முன்னாள் ஆளுநர்) - ஆளுநர் பதவியைத் துறந்து மீண்டும் தீவிர அரசியலுக்கு வந்த தமிழிசை, இம்முறை எப்படியாவது சட்டமன்றத்திற்குள் நுழைய வேண்டும் என்பதில் உறுதியாக இருக்கிறார்.தென் சென்னைக்கு உட்பட்ட மயிலாப்பூர் அல்லது தியாகராய நகர் (T. Nagar) தொகுதிகளில் இவர் களமிறக்கப்படலாம். இந்தத் தொகுதிகளில் பாஜகவிற்குப் பாரம்பரியமான வாக்கு வங்கி உள்ளது.
5. நயினார் நாகேந்திரன் (பாஜக மாநில தலைவர்) - அரசியலில் அனுபவம் வாய்ந்த மூத்த தலைவரான இவர், தென் தமிழகத்தில் பாஜகவின் பலமாக இருக்கிறார். இவர் திருநெல்வேலி தொகுதியிலேயே போட்டியிட வாய்ப்புகள் அதிகம்.
இவர்கள் தவிர பொன். ராதாகிருஷ்ணன் (முன்னாள் மத்திய அமைச்சர்)கன்னியாகுமரி அல்லது நாகர்கோவில்,எச். ராஜா காரைக்குடி எல்லது சிவகங்கை தொகுதியில், குஷ்பு சுந்தர் ஆயிரம் விளக்கு அல்லது எழும்பூர் தொகுதிகளில் வேட்பாளராக நிறுத்தப்பட வாய்ப்புள்ளது. நடிகை கவுதமி, ராதிகா அல்லது அவரது கணவர் சரத்குமார் ஆகியோருக்கும் இந்த முறை பாஜக.,வில் சீட் தர வாய்ப்புள்ளது. இவர்கள் விஐபி.,க்கள் என்பதை விட அனைவருக்கும் நன்கு அறிந்த முகங்கள். தவெக போட்டியிடும் தொகுதிகளில் இவர்கள் போட்டியிட்டால் கண்டிப்பாக அதிக ஓட்டுக்கள் இவர்களுக்கு கிடைக்க வாய்ப்புள்ளது. அது மட்டுமின்றி, திமுக.,விற்கு கடைசி நிமிடம் வரை கடுமையான போட்டி தரக் கூடிய அளவிற்கு செல்வாக்கு மிகுந்தவர்கள் என்பதால் இது போன்ற மக்களுக்கு நன்கு தெரிந்த முகங்களையே பாஜக இந்த முறை களமிறக்கும் என எதிர்பார்க்கலாம்.
CMக்கு முடியவில்லை என்றால் அரசு மருத்துவமனையில் சிகிச்சைபெற வேண்டும் என்று சட்டம் போடுவோம்: சீமான்
4 திட்டங்களால் ஒரு குடும்பத்திற்கு மாதம் ரூ. 4,000 மிச்சமாகிறது: முதல்வர் மு.க.ஸ்டாலின்
தமிழக சட்டசபை தேர்தல் 2026 : பாஜக விஐபி வேட்பாளர்களுக்கு வெற்றி வாய்ப்புள்ள தொகுதிகள்
பொம்மை முதல்வரே... என்னோடு நீங்கள் நேருக்கு நேர் மேடை ஏறத் தயாரா?: எடப்பாடி பழனிச்சாமி சவால்!
ராமதாஸ்-அன்புமணி மோதலால் தமிழக சட்டசபை தேர்தலில் பாமக.,வின் ஓட்டு வங்கி சரியுமா?
பூக்கள் பூக்கும் தருணம்.. அதை விடுங்க.. தமிழகத்தின் மலர் எது தெரியுமா?
14 ஆண்டுகளுக்கு பிறகு சொந்த மண்ணில் ஆஸ்திரேலியாவை வீழ்த்திய இங்கிலாந்து
SIR 2026 தமிழக சட்டசபை தேர்தலில் தாக்கத்தை ஏற்படுத்துமா?
திமுக எதிர்ப்பு .. இது மட்டும் போதுமா அதிமுக வெற்றி பெற.. எங்கேயே இடிக்குதே!
{{comments.comment}}