சென்னை: முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் வரும் 8ம் தேதி தமிழக அமைச்சரவை கூட்டம் நடைபெறுகிறது. துணை முதல்வராக உதயநிதி ஸ்டாலின் நியமிக்கப்பட்ட பிறகு நடைபெறும் முதல் அமைச்சரவைக் கூட்டம் இது என்பது குறிப்பிடத்தக்கது.
கடந்த 28ம் தேதி தமிழக அமைச்சரவை மாற்றி அமைக்கப்பட்டது.அமைச்சரவையில் இருந்து கே.ராமச்சந்திரன், செஞ்சி மஸ்தான், மனோ தங்கராஜ் ஆகிய 3 பேர் நீக்கப்பட்டு, புதிதாக 4 அமைச்சர்கள் பதிவியேற்றுள்ளனர்.புதிய அமைச்சர்கள் ஆளுநர் மாளிகையில் கடந்த 29ம் தேதி பதவியேற்றனர். புதிய அமைச்சர்கள் நால்வருக்கும் ஆளுநர் ஆர். என். ரவி. பதவிப்பிரமாணம் மற்றும் ரகசியக் காப்பு பிரமாணம் செய்து வைத்தார். சேலம் இரா. ராஜேந்திரன், செந்தில் பாலாஜி, கோவி.செழியன் மற்றும் சா.மு.நாசர் ஆகியோர் அமைச்சர்களாகப் பதவியேற்றுக் கொண்டனர்.

விளையாட்டு மற்றும் இளைஞர் நலன்துறை அமைச்சராக உள்ள உதயநிதி ஸ்டாலின் துணை முதலமைச்சர் ஆகியுள்ளார். இந்த பதவியேற்பு நிகழ்ச்சியில் பதவியேற்ற கோவி.செழியன் மற்றும் ராஜேந்திரன் ஆகிய 2 அமைச்சர்களும் முதல் முறையாக அமைச்சர்களாகியுள்ளனர். இதுதவிர, அமைச்சர்கள் பொன்முடி, தங்கம் தென்னரசு, ராஜகண்ணப்பன், மெய்யநாதன், மதிவேந்தன், கயல்விழி செல்வராஜ் ஆகிய 6 பேரின் துறைகளும் மாற்றி அமைக்கப்பட்டுள்ளது.
புதிய அமைச்சர்கள் பொறுப்பேற்ற பின்னர் முதல் முறையாக, வருகிற 8ம் தேதி காலை 11 மணிக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையில், அமைச்சரவை கூட்டம் நடைபெற உள்ளது. இந்த கூட்டத்தில் அனைத்து அமைச்சர்களும் பங்கேற்க வேண்டும் என்று கடிதம் அனுப்பப்பட்டுள்ளது. இந்த கூட்டத்தில் பல்வேறு திட்டங்கள் குறித்து விவாதிக்கப்பட உள்ளதாக கூறப்படுகிறது. மேலும் நவம்பர் மாதத்தில் தமிழக சட்டபேரவை கூட்டமும் நடைபெறும் என்பதால் அதுகுறித்தும் விவதிக்கப்படலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அமைச்சரவை மாற்றத்திற்கு பின்னர் முதன் முதலில் நடக்கும் அமைச்சரவை கூட்டம் இதுவாகும்.
செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்
சென்னை புத்தகக் கண்காட்சி 2026.. தேதி சொல்லியாச்சு.. புத்தகப் பிரியர்களே.. ரெடியாகுங்க!
தென்காசி மற்றும் திருநெல்வேலியில் கனமழைக்கு வாய்ப்பு: வானிலை மையம் கொடுத்த அலர்ட்!
மாமதுரைக்குத் தேவை வளர்ச்சி அரசியலா அல்லது அரசியலா?.. முதல்வர் மு.க.ஸ்டாலின்
இந்தியா முழுவதும் இன்று ஒரே நாளில் 500க்கும் மேற்பட்ட இண்டிகோ விமானங்கள் ரத்து
திருப்பரங்குன்றம் தீப வழக்கு... தீர்ப்பு ஒத்திவைப்பு: உயர்நீதிமன்ற மதுரைக் கிளை
நான் எந்த சூழ்நிலையிலும் தனிக் கட்சி ஆரம்பிப்பேன் என்று சொல்லவில்லை ஓ. பன்னீர்செல்வம்!
சென்னையில்.. 10 லட்சத்திற்கும் மேற்பட்ட வாக்காளர்களின் பெயர்கள் நீக்கப்படும் அபாயம்!
ரெப்போ வட்டி விகிதம் குறைப்பு.. ரிசர்வ் வங்கி நடவடிக்கை.. இஎம்ஐ குறையலாம்!
திருவண்ணாமலை தூய்மைப் பணியாளர்களை.. கையெடுத்து கும்பிட்டு நன்றி சொன்ன கலெக்டர்
{{comments.comment}}