சென்னை: 2024- 25-ம் கல்வி ஆண்டுக்கான பிளஸ் 2 பொதுத் தேர்வுக்கான முடிவுகள் இன்று வெளியானது. இதனை பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் வெளியிட்டார்.
தமிழகத்தில் அரசு பள்ளிகள், அரசு உதவி பெறும், பள்ளிகள் மற்றும் தனியார் பள்ளிகளில் பிளஸ் டூ பொதுத்தேர்வுகள் கடந்த மார்ச் மூன்றாம் தேதி தொடங்கி 25ஆம் தேதி வரை நடைபெற்றது. மொத்தம் எட்டு லட்சத்து 25 ஆயிரத்து 57 மாணவ மாணவிகள் இந்த தேர்வு எழுதினர். கடந்த ஆண்டை விட இந்த ஆண்டு தேர்ச்சி சதவீதம் 0.43 சதவீதம் அதிகரித்துள்ளது.
இதனைத் தொடர்ந்து விடைத்தாள்கள் திருத்தும் பணி மும்மரமாக நடைபெற்று வந்த நிலையில், தேர்வு முடிவுகள் வெளியீடு தொடர்பான பதிவிட்டு பட்டியல் பணிகள் முடிவடைந்து மே ஒன்பதாம் தேதி தேர்வு முடிவுகளை வெளியிட பள்ளி கல்வித்துறை திட்டமிடப்பட்டிருந்தது. ஆனால் பொது தேர்வு முடிவுகள் வெளியிடும் பணிகள் விரைவாக முடிவடைந்ததால் ஒரு நாள் முன்கூட்டியே பிளஸ் டூ தேர்வு முடிவுகள் வெளியாகும் என அறிவிக்கப்பட்டது.

இந்த நிலையில் தமிழக முழுவதும் 12-ஆம் வகுப்பு பொதுத் தேர்வு முடிவுகள் இன்று வெளியானது. காலை 9:00 மணிக்கு தேர்வு முடிவுகளை பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் வெளியிட்டார். அதன்படி, தமிழகத்தில் பிளஸ் டூ மாணவர்களின் தேர்ச்சி விகிதம் மொத்தம் 95.03% ஆகும். அதாவது 7.92 லட்சம் மாணவர்கள் தேர்வு எழுதியதில் 7.53 லட்சம் மாணவர்கள் தேர்ச்சி பெற்றுள்ளனர். இதில் 93.16 சதவிகிதம் மாணவர்களும், 96.7 சதவிகிதம் மாணவிகளும் தேர்ச்சி பெற்றுள்ளனர். வழக்கம்போல் பிளஸ் டூ பொதுத்தேர்வில் மாணவிகளே அதிகம் தேர்ச்சி பெற்றுள்ளனர்.
தமிழில் 135 பேரும், கணினி அறிவியலில் 9536 பேரும், கணினி பயன்பாடுகள் 4208 பேரும், கணிதத்தில் 3022 பேரும், வேதியியலில் 3181 பேரும், வணிகவியலில் 1624 பேரும் 100 க்கும் 100 மதிப்பெண்கள் எடுத்துள்ளனர். அரசு பள்ளிகளில் 95.71 சதவீதமும், தனியார் சுயநிதிப் பள்ளிகளில் 98.88 சதவீதமும், இருபாலர் பள்ளிகள் 95.30 சதவீதமும், பெண்கள் பள்ளிகள் 96.50 சதவீதமும், ஆண்கள் பள்ளிகள் 90.14 சதவீதமும் தேர்ச்சி பெற்றுள்ளனர்.
அதிக சதவீதம் தேர்ச்சி பெற்ற டாப் 5 மாவட்டங்களில் அரியலூர் முதல் இடமும்(98.82%), ஈரோடு 2வது இடமும் (97.98%), திருப்பூர் 3வத இடமும் (97.53%), கோவை 4வது இடமும் (97.48%), கன்னியாகுமரி 5வது(97.01%) பிடித்துள்ளன.
மதுராந்தகம், தாராபுரம் இடைத்தேர்தலில் தவெக அமோக வெற்றி.. விஜய்யின் அடுத்த மூவ் என்ன?
மதுராந்தகம், தாராபுரம் இடைத்தேர்தல் முடிவுகள்...திமுக.,வுக்கு லாபமா.. நஷ்டமா?
3வது இடத்திற்கு தள்ளப்பட்ட அதிமுக.. கொங்கு மண்டலத்தில் செல்வாக்கை இழக்கும் இரட்டை இலை!
மதுராந்தகம், தாராபுரம் இடைத் தேர்தலில்.. மொத்தமாக சரிந்து போன நாம் தமிழர் கட்சி!
Jo's quick Film review: "பத்தா".. மினிமம் 10 முறையாவது பார்க்க வேண்டும்!
2026 அமைதிக்கான நோபல் பரிசு: தமிழ் வம்சாவளி மனித உரிமை வழக்கறிஞர் நவநீதம் பிள்ளைக்கு அறிவிப்பு!
சமையல் With ஸ்வர்ணா.. கொங்கு நாட்டு பாரம்பரிய சந்தகை!
6 அதிமுக எம்எல்ஏ.,க்கள் ராஜினாமா வழக்கின் தீர்ப்பு தள்ளிவைப்பு: சென்னை உயர் நீதிமன்றம் அறிவிப்பு
டெல்லியில் கரப்பான் ஜனதா கட்சி போராட்டம்: மெட்ரோ மற்றும் ரயில் சேவைகள் முடக்கம்
{{comments.comment}}