ஐந்து மாவட்டங்களில் இன்று கன மழை.. நாளை 8 மாவட்டங்களில் அதி கன மழை.. வானிலை மையம் தகவல்

Nov 25, 2024,02:45 PM IST

சென்னை: தமிழ்நாட்டில் நாளை, நாளை மறுநாள் அதி கன மழைக்கான ரெட் அலர்ட் எச்சரிக்கை கொடுக்கப்பட்டுள்ள நிலையில், இன்று ஐந்து மாவட்டங்களில் கன மழைக்கும், நாளை 8 மாவட்டங்களில் அதிக கன மழைக்கும், நாளை மறுநாள் இரண்டு மாவட்டங்களில் அதிக கனமழைக்கும் வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.


வங்கக்கடலில் உருவான காற்றழுத்த தாழ்வு பகுதி ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெற்றது. இந்த ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதி அடுத்த இரண்டு நாட்களுக்கு அதே பகுதிகளில் நிலை கொண்டு இருப்பதால் தமிழ்நாட்டில்  நாளை, நாளை மறுநாள் ஆகிய இரண்டு நாட்கள் அதி கனமழை பெய்யக்கூடும் என்பதால், ரெட் அலர்ட் எச்சரிக்கையை இந்திய வானிலை ஆய்வு மையம் விடுத்துள்ளது. 




இந்த நிலையில் தமிழ்நாட்டில் எந்த பகுதிகளில் கன முதல் அதிக கனமழை வரை பெய்யக்கூடும் என்ற அறிவிப்பை சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ளது. அதன்படி,


இன்று கன மழை: 


மயிலாடுதுறை, நாகை, புதுக்கோட்டை, தஞ்சாவூர், திருவாரூர், ராமநாதபுரம், ஆகிய ஆறு மாவட்டங்களில் இன்று கனமழை பெய்ய வாய்ப்புள்ளது.


நாளை அதி கனமழை: 


நாகை, மயிலாடுதுறை, திருவாரூர், ஆகிய மூன்று மாவட்டங்கள் மற்றும் காரைக்காலில் நாளை அதிக கன மழைக்கான ரெட் அலர்ட் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.


நாளை மிக கனமழை: 


விழுப்புரம், கடலூர், தஞ்சை, புதுக்கோட்டை, சிவகங்கை, அரியலூர், ஆகிய 6 மாவட்டங்களில் நாளை மிக கனமழை பெய்ய வாய்ப்புள்ளது.


நாளை கன மழை:


செங்கல்பட்டு, கள்ளக்குறிச்சி, பெரம்பலூர், திருச்சி, ராமநாதபுரம் ஆகிய ஐந்து மாவட்டங்களில் நாளை கனமழை பெய்ய வாய்ப்புள்ளது. 


நாளை மறுநாள் அதிக கன மழை: 


நாளை மறுநாள் மயிலாடுதுறை, கடலூர், ஆகிய இரண்டு மாவட்டங்களில் அதிக கனமழைக்கான ரெட் அலர்ட் எச்சரிக்கை கொடுக்கப்பட்டுள்ளது.


நாளை மறுநாள் மிக கனமழை: 


விழுப்புரம், அரியலூர், தஞ்சை, திருவாரூர், நாகை, புதுக்கோட்டை, ஆகிய ஆறு மாவட்டங்களில் நவம்பர் 27ஆம் தேதி மிக கனமழை பெய்ய வாய்ப்புள்ளது.


சென்னை மக்களே நாளை மறுநாள் உஷார்!


சென்னை, செங்கல்பட்டு,  காஞ்சிபுரம், கள்ளக்குறிச்சி, பெரம்பலூர், திருச்சி, சிவகங்கை, இராமநாதபுரம், ஆகிய 8 மாவட்டங்களில் 27ஆம் தேதி கனமழை பெய்ய வாய்ப்புள்ளது.



செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்

சமீபத்திய செய்திகள்

news

தமிழ்நாட்டில்.. இன்று 9 மாவட்டங்களில் கன மழைக்கு வாய்ப்பு.. நாளை 5.. வானிலை மையம் தகவல்

news

பொது சிவில் சட்டம், ஒரே நாடு ஒரே தேர்தல் திட்டத்தால் பேராபத்து.. உதயநிதி ஸ்டாலின் கருத்து

news

நடிகர் விஜய் இந்தியா கூட்டணியில் வந்து சேரலாம்.. காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்தகை யோசனை!

news

வெகுவிரைவில் மக்கள் திமுக ஆட்சியை புறக்கணிப்பார்கள்.. பிரேமலதா விஜயகாந்த் பேச்சு

news

இந்த வருடம் நாங்கள் ஏன் சர் ஜான் மார்ஷல் பொங்கல் என்று கொண்டாடினோம்?

news

Taste Atlas most hated foods 2025.. லிஸ்ட்டுல உப்புமா இல்லை.. பஞ்சாபி மிஸ்ஸி ரொட்டிக்கு 56வது இடம்!

news

சாம்பியன்ஸ் டிராபி 2025.. இந்திய அணியை அறிவித்தது பிசிசிஐ.. துணை கேப்டனானார் சுப்மன் கில்!

news

Budget 2025.. ஜன. 31 முதல் பிப். 13 வரை பட்ஜெட் கூட்டத்தொடர்.. பிப். 1ல் பட்ஜெட் தாக்கல்!

news

ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல்.. திமுக, நாம் தமிழர் கட்சி வேட்பு மனுக்கள் ஏற்பு!

அதிகம் பார்க்கும் செய்திகள்