சென்னை: வட தமிழ்நாட்டை ஒட்டிய பகுதிகளில் காற்றழுத்த தாழ்வு பகுதி மையம் கொண்டிருப்பதால், தமிழ்நாட்டில் இன்று முதல் 4 நாட்களுக்கு ஒரு சில இடங்களில் கனமழை பெய்யக்கூடும் என இந்திய வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.
தென்மேற்கு வங்க கடல் பகுதிகளில் உருவான காற்றழுத்த தாழ்வு பகுதியால் வடகிழக்கு பருவமழை தீவிரமடைந்து கடந்த சில நாட்களாகவே தமிழ்நாட்டில் பரவலாக கனமழை பெய்து வருகிறது. சென்னை உள்ளிட்ட வடகடலோர மாவட்டங்களிலும், டெல்டா மாவட்டங்களிலும் நல்ல மழை பெய்து வருகிறது.
குறிப்பாக மயிலாடுதுறை, கடலூர், காரைக்கால், புதுச்சேரி, உள்ளிட்ட பகுதிகளில் கனமழை கொட்டி தீர்த்து வருகிறது. மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழியில் அதிகபட்சமாக 14 சென்டிமீட்டர் மழை கொட்டி தீர்த்தது. அதேபோல் புதுச்சேரியிலும் அதிகபட்சமாக கடந்த 24 மணி நேரத்தில் 12 சென்டிமீட்டர் மழை வெளுத்து வாங்கியது.
இந்த தொடர் மழை காரணமாக மயிலாடுதுறை காரைக்காலில் உள்ள பள்ளி கல்லூரிகளுக்கு விடுமுறை கொடுக்கப்பட்டுள்ளது. அதேபோல் கடலூர் மாவட்டத்தில் பெய்து வரும் மழை காரணமாக பள்ளிகளுக்கு மட்டும் இன்று விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.
இதற்கிடையே தென்மேற்கு மற்றும் அதனை ஒட்டிய மத்திய மேற்கு வங்கக் கடல் பகுதிகளில் கடந்த இரண்டு தினங்களுக்கு முன்பு காற்றழுத்த தாழ்வு பகுதி உருவானது.இந்த காற்றழுத்த தாழ்வு பகுதி தற்போது வட தமிழ்நாடு மற்றும் அதனை ஒட்டிய தெற்கு ஆந்திரா கடல் பகுதிகளில் நீடிக்கிறது. மேலும் இந்த காற்றழுத்த தாழ்வு பகுதி தமிழ்நாட்டை ஒட்டிய கடலோரப் பகுதிகளில் மையம் கொண்டிருப்பதால் வடகடலோர பகுதிகள் மற்றும் டெல்டா மாவட்டங்களில் கன மழை பெய்யும் என சென்னை வானிலை ஆய்வு மையம் ஏற்கனவே அறிவித்திருந்தது.
இந்த நிலையில் தமிழ்நாடு மழை குறித்த அறிவிப்பை இந்திய வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ளது. அதன்படி, தமிழ்நாட்டில் இன்று முதல் நவம்பர் 16 வரை ஒரு சில இடங்களில் கன மழை பெய்ய வாய்ப்புள்ளது. குறிப்பாக வடகடலோர மாவட்டங்கள், டெல்டா மாவட்டங்கள் மற்றும் தென் மாவட்டங்களில் பரவலாக கனமழை பெய்யக்கூடும். இப் பகுதிகளில் நான்கு நாட்கள் மழை பெய்யக்கூடும் என்பதால், கன மழைக்கான மஞ்சள் நிற எச்சரிக்கை விடுத்துள்ளது.
அதேபோல் கர்நாடகா மற்றும் ஆந்திராவிலும் இன்று முதல் இரண்டு நாட்களுக்கு கனமழை நீடிக்கும் எனவும் தெரிவித்துள்ளது.
1 மணிக்குள் இங்கெல்லாம் மழை பெய்யும்
இதற்கிடையே, இன்று பிற்பகல் 1 மணிக்குள் எங்கெல்லாம் மழை பெய்யும் என்ற அறிவிப்பையும் வானிலை மையம் வெளியிட்டுள்ளது. அதன்படி, மயிலாடுதுறை, அரியலூர், பெரம்பலூர், கள்ளக்குறிச்சி, கடலூர், விழுப்புரம், செங்கல்பட்டு, காஞ்சிபுரம், திருவண்ணாமலை, சென்னை, திருவள்ளூர், ஆகிய 11 மாவட்டங்களில் பகல் ஒரு மணிக்குள் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது.
செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்
இன்னும் எத்தனை காலந்தான் ஏமாற்றுவார் இந்த நாட்டிலே சொந்த நாட்டிலே நம் நாட்டிலே?: டாக்டர் அன்புமணி
எப்போது வாய்ப்பு கிடைக்கிறதோ அப்போது அஜித்தை வைத்து படம் இயக்குவேன்: லோகேஷ் கனகராஜ்
சென்னையில் தூய்மை பணியாளர்களுக்கு காலை உணவு திட்டம் தொடக்கம்: அமைச்சர் தங்கம் தென்னரசு
அவதூறு பரப்புகிறார்கள்..போற்றுவோர் போற்றட்டும்..புழுதி வாரி தூற்றுவோர் தூற்றட்டும்..டாக்டர் ராமதாஸ்
மலையாள நடிகை மினு முனீர் கைது.. சிறுமியை தவறாகப் பயன்படுத்தியதாக சென்னையில் புகார்
பணி நிரந்தரம் கோரி போராட்டத்தில் ஈடுபட்ட தூய்மை பணியாளர்கள் கைதுக்கு ஈபிஎஸ் கண்டனம்
Coolie Movie Review: ரஜினியின் "கூலி" படம் எப்படி இருக்கு.. தியேட்டர் அதிருதா.. இல்லை..?
ஆபரணத் தங்கத்தின் விலை இன்று எவ்வளவு தெரியுமா?
79வது சுதந்திர தினம்.. தாய்த் திருநாட்டின் தியாகிகளுக்கு சல்யூட்.. பாரத அன்னைக்கு வணக்கம்!
{{comments.comment}}