சென்னை: வங்கக் கடலில் நேற்று உருவான காற்றழுத்த தாழ்வு பகுதி இன்று அதிகாலை ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதியாக வலுவடைந்தது. மேலும் இந்த ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதி காற்றழுத்த தாழ்வு மண்டலமாக கரையைக் கடக்குமா? அல்லது புயலாக வலுப்பெறுமா என இந்திய வானிலை ஆய்வு மையம் தொடர்ந்து கண்காணித்து வருகிறது.
தென்கிழக்கு வங்கக்கடலில் உருவான குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி நேற்று இரவு வரை நகராமல் அதே இடத்தில் நிலை கொண்டிருந்தது. இதன் பிறகு இன்று அதிகாலை 5.30 மணியளவில் மேற்கு வட மேற்கு திசையில் நகர்ந்து ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதியாக வலுவடைந்தது. இது தற்போது தெற்கு வங்க கடலின் மத்திய பகுதியில் நிலவி வருகிறது. இதன் அடுத்த நர்வாக, இந்த காற்றழுத்த தாழ்வு பகுதி ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெற்று மேற்கு வட மேற்கு திசையில் நகர்ந்து தமிழ்நாட்டை நோக்கி, குறிப்பாக சென்னை கடற்கரைக்கு அருகே வர இருப்பதாக இந்தியா வானிலை ஆய்வு மையம் அறிவிப்பை வெளியிட்டுள்ளது.

இதனைத் தொடர்ந்து வலுவடைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி, ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெற்று இரண்டு நாட்களில் புதுச்சேரி, வட தமிழ்நாடு, தெற்கு ஆந்திரா கடலோர பகுதியை நோக்கி நகர உள்ளது. மேலும் இந்த ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் புயலாக வலுப்பெறுமா அல்லது தாழ்வு மண்டலமாகவே கரையை கடக்குமா என வானிலை ஆய்வு மையம் தொடர்ந்து கண்காணிக்கப்பட்டு வருவதாகவும் இது குறித்து அறிவிப்பு அடுத்தடுத்த செய்தி குறிப்பு வெளியிடப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இன்று ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதியாக வலுவடைந்து வட தமிழ்நாட்டின் நோக்கி நகர்ந்து வர உள்ள நிலையில், இன்றும் நாளையும் வடக்கடலோர மாவட்டங்களில் கன மழை பெய்ய வாய்ப்புள்ளது. அதே சமயத்தில் தென் கடலோர மாவட்டங்களான ஆந்திரா, கர்நாடகா, கேரளா, ஆகிய மாவட்டங்களிலும் பலத்த மழை பெய்ய வாய்ப்புள்ளது.
மீனவர்களுக்கான எச்சரிக்கை:
வங்கக்கடல், தென்கிழக்கு வங்க கடல் உள்ளிட்ட பகுதிகளில் மணிக்கு 60 கிலோமீட்டர் வேகத்தில் சூறாவளி காற்றும் வீச கூடும் என்பதால் அடுத்த மூன்று தினங்களுக்கு மீனவர்கள் வங்கக்கடல் பகுதிகளில் மீன் பிடிக்க செல்ல வேண்டாம். ஆழ் கடலில் மீன் பிடிக்கச் சென்றவர்கள் உடனே கரைக்கு திரும்ப வேண்டும் எனவும் அறிவித்துள்ளது.
செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்
அக்கறையற்ற அமைச்சரின் பேச்சு... வேதனைக்குரியது மட்டுமல்ல கண்டனத்திற்குரியதும்: எடப்பாடி பழனிச்சாமி
நெல்லை தொகுதியையும், என்னையும் பிரித்து பார்க்க முடியாது: நயினார் நாகேந்திரன்
டி20 உலகக் கோப்பை: இந்தியாவைப் புறக்கணிக்கும் முடிவில் பாகிஸ்தான் தீவிரம்?
நான் ரெடி.. அருமை அண்ணன் இபிஎஸ்ஸுடன் பேச டிடிவி தினகரன் தயாரா.. ஓ.பி.எஸ். அதிரடி சவால்!
தைப்பூசம்: முருகப்பெருமானை போற்றிக் கொண்டாடும் திருநாள்!
தவெக மூன்றாம் ஆண்டு தொடக்க விழா: ஆனந்த் அறிவிப்பு
கொலம்பியா எல்லையில் விபத்துக்குள்ளான விமானம்.. எம்.பி உள்பட 15 பேர் பலி
பிப்ரவரி 3ம் தேதி கூட்டணியை அறிவிக்கும் தேமுதிக.. யாருடன் இணைகிறது?
ஒரே நாளில் சவரனுக்கு ரூ.9,520 உயர்ந்த தங்கம் விலை... அதிர்ச்சியில் உறைந்த வாடிக்காயாளர்கள்!
{{comments.comment}}