மழை அப்டேட்: தமிழ்நாட்டில் இன்று 6 மாவட்டங்களில் மிக கனமழை.. 11 மாவட்டங்களில் கன மழை வாய்ப்பு!

Dec 11, 2024,02:40 PM IST

சென்னை: வங்கக் கடலில் நிலவும் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதி காரணமாக தமிழ்நாட்டில் இன்று ஆறு மாவட்டங்களில் மிக கனமழையும்,  11 மாவட்டங்களில் கனமழையும் பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.

தென்மேற்கு மற்றும் அதனை ஒட்டிய தென்கிழக்கு வங்க கடல் பகுதிகளில் நேற்று நிலவிய ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதி இன்று காலை 8:30 மணி அளவில் இலங்கை கடலோரப் பகுதிகளை ஒட்டிய தென்மேற்கு வங்க கடலில் பகுதிகளில் நிலவுகிறது. இது அடுத்த 24 மணி நேரத்தில் மேற்கு வட மேற்கு திசையில் இலங்கை தமிழக கடலோரப் பகுதிகளை நோக்கி நகரக்கூடும். 

இதன் காரணமாக தமிழ்நாட்டில் இன்று முதல் 17ஆம் தேதி வரை ஒரு சில இடங்களில் கன மழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. இதுதொடர்பான விவரம்:

இன்று மிக கனமழை ஆரஞ்சு அலர்ட் 



கடலூர், மயிலாடுதுறை, நாகை, தஞ்சை, புதுக்கோட்டை, திருவாரூர், ஆகிய ஆறு மாவட்டங்களில் இன்று மிக கனமழை பெய்ய வாய்ப்புள்ளது.

இன்று கனமழை:

சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம், திருவள்ளூர், விழுப்புரம், கள்ளக்குறிச்சி, திருச்சி, பெரம்பலூர், அரியலூர், சிவகங்கை, ராமநாதபுரம் ஆகிய 11 மாவட்டங்களில் இன்று கனமழை பெய்ய வாய்ப்புள்ளது. 

நாளை மிக கனமழை (ஆரஞ்சு அலர்ட்): 

அரியலூர், தஞ்சை, திருவாரூர், புதுக்கோட்டை நான்கு மாவட்டங்களில் நாளை மிக கனமழை பெய்ய வாய்ப்புள்ளது. 

நாளை கனமழை: 

சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு, திருவண்ணாமலை, கள்ளக்குறிச்சி, விழுப்புரம், கடலூர், பெரம்பலூர், திருச்சி, சிவகங்கை, ராமநாதபுரம், மயிலாடுதுறை, நாகை, கோவை, திருப்பூர், கரூர், திண்டுக்கல், தேனி, மதுரை, விருதுநகர், தென்காசி, தூத்துக்குடி, ஆகிய 23 மாவட்டங்களில் நாளை கனமழை பெய்ய வாய்ப்புள்ளது. 

டிசம்பர் 13ஆம் தேதி கனமழை:

நீலகிரி, கோவை, திருப்பூர், தேனி, திண்டுக்கல், மதுரை, சிவகங்கை, ராமநாதபுரம், விருதுநகர், தென்காசி, தூத்துக்குடி, நெல்லை, கன்னியாகுமரி ஆகிய 13 மாவட்டங்களில் டிசம்பர் 13ஆம் தேதி கனமழை பெய்ய வாய்ப்புள்ளது.



செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்

சமீபத்திய செய்திகள்

news

தீஞ்ச சக்தியிலிருந்து ஆட்களை இழுக்கும் நீங்க என்ன.. காஞ்சு போன சக்தியா? .. மு.க. ஸ்டாலின் தாக்கு

news

KG முதல் PG வரை இலவச கல்வி.. ஒடிசா அதிரடியை எல்லோரும் கடைப்பிடிக்கலாமே?

news

தவெக.,வை நோக்கி படையெடுக்கும் மாற்று கட்சியினர்... பலமா? பலவீனமா?

news

டீசல் விற்பனைக்கு கடும் கட்டுப்பாடு: மத்திய அரசு அதிரடி உத்தரவு!

news

Vijay Birthday: முதல்வராக முதல் முறையாக.. 52வது பிறந்த நாளைக் கொண்டாடத் தயாராகும் விஜய்

news

அதிமுக தேர்தல் தோல்வி எதிரொலி: மாவட்ட வாரியாக எடப்பாடி பழனிசாமி ஆலோசனை

news

பாஜவிலிருந்து விலகி தவெகவில் இணைகிறார் முன்னாள் எம்.எல்.ஏ விஜயதரணி

news

லியோனல் மெஸ்ஸியின் உலகக் கோப்பை வேட்டை எப்போது தொடங்குகிறது?

news

Seven Days, Twenty Kilometres.. மற்றும் மறக்க முடியாத சில நினைவுகள்!

அதிகம் பார்க்கும் செய்திகள்