Tamil Nadu Rains: 6 நாட்களுக்கு கன மழை நீடிக்கும்.. என்ஜாய் பண்ண ரெடியா இருங்க மக்களே!

Oct 10, 2024,11:27 AM IST

சென்னை:  வட தமிழக பகுதிகளில் நிலவும் கீழடுக்கு சுழற்சி காரணமாக தமிழ்நாட்டில் அடுத்த ஆறு நாட்களுக்கு கனமழை நீடிக்கும் என சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.


லட்சத்தீவு கேரள மற்றும் வட தமிழக பகுதிகளின் மேல் ஒரு வளிமண்டல கீழெடுக்கு சுழற்சி நீடித்து வருவதால் தமிழகத்தில் பல பகுதிகளிலும் நேற்று பரவலாக கன மழை கொட்டி தீர்த்தது. குறிப்பாக சென்னையில் அநேக இடங்களில் நேற்று இரவு விடிய விடிய கன மழை வெளுத்து வாங்கியது. இந்த மழை காரணமாக கோயம்பேடு மெட்ரோ சாலையில் மழை நீர் தேங்கியதால் வாகன ஓட்டிகள் கடும் சிரமத்திற்கு உள்ளாகினர்.


இதனால் அப்பகுதிகளில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. இதனை தடுக்க மாநகராட்சி தற்போது மழை நீரை வெளியேற்றும் பணிகளில் ஈடுபட்டு வருகிறது. அதேபோல் திண்டுக்கல், தேனி,கோயம்புத்தூர், புதுக்கோட்டை, உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் இரவில் பலத்த மழை கொட்டி தீர்த்தது. இது தவிர தூத்துக்குடியில் பெய்த கனமழையால் கொம்புகாரநத்தம் தரைபாலத்தையும் மழை வெள்ளம் மூழ்கடித்தது. 




தமிழகம் முழுவதும் பெய்து வரும் கனமழையால் தற்போது வெப்பம் தணிந்து குளிர்ச்சி நிலவி வருகிறது. மேற்கு தொடர்ச்சி மலையை ஒட்டிய  பகுதிகளிலும் கனமழை பெய்து வருவதால் குற்றால அருவிகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. இதனால் மக்களின் பாதுகாப்பு கருதி குற்றால அருவிகளில் குளிக்க தடை விதிக்கப்பட்டுள்ளது.


இதனிடையே அரபிக் கடலில் உருவாகியுள்ள புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி அடுத்த மூன்று தினங்களில் வடக்கு மேற்கு திசை நோக்கி நகர்ந்து காற்றழுத்த தாழ்வு மண்டலம் வலுப்பெற கூடும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.


மேலும்  வட தமிழகம் பகுதிகளில் நிலவும் வளிமண்டல மேலடுக்கு சுழற்சியால் தமிழ்நாட்டில் அடுத்த ஆறு நாட்களுக்கு கனமழை நீடிக்கும் எனவும் தெரிவித்துள்ளது.


இன்று கனமழை:


சேலம், கிருஷ்ணகிரி, திருப்பத்தூர், தர்மபுரி, நாமக்கல், அரியலூர்,பெரம்பலூர், கரூர், திருச்சி, திண்டுக்கல், ஆகிய 10 மாவட்டங்களில் இன்று கனமழை பெய்ய வாய்ப்புள்ளது.



செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்

சமீபத்திய செய்திகள்

news

ஜெம் கிரானைட்ஸ் வீரமணி வழக்கில் லஞ்சம் வாங்கிய அதிகாரிகள் யார்? விசாரிக்க சிறப்பு குழு அமைப்பு!

news

"நிர்வாக அறிவு இருக்கிறதா?" – தவெக அரசை கடுமையாக விமர்சித்து மு.க.ஸ்டாலின் எச்சரிக்கை!

news

குற்றவாளிகள் ஒருவரையும் விடக்கூடாது: ஜெம் கிரானைட்ஸ் வீரமணி விவகாரத்தில் முதல்வர் அதிரடி உத்தரவு

news

ஜெம் கிரானைட் வீரமணி விவகாரம்: தவெக-திமுக இடையே முற்றும் மோதல்

news

ஆளுக்கு 8 ஓட்டு.. 9 மாத மழலை எடுத்துக் கொடுத்த சீட்டு.. கலகலப்பாக முடிந்த பள்ளித் தலைவர் தேர்தல்!

news

நடிகை அம்பிகா மீது சகோதரி ராதா பரபரப்பு புகார்: ரூ.46 கோடி மோசடி செய்ததாக போலீசில் புகார்

news

வங்கக்கடலில் தீவிரமடையும் காற்றழுத்த தாழ்வுப்பகுதி: இந்திய வானிலை மையம் எச்சரிக்கை!

news

ஏகாந்தம்.. அழகிய முழு நிலவொளியில் ஆனந்த ராகம் பாடி!

news

Short Story: காணாமல் போன கண்ணன்

அதிகம் பார்க்கும் செய்திகள்