சென்னை: தெற்கு கேரளா கடலோரப் பகுதிகளில் நிலவி வரும் வளிமண்டல கீழடுக்கு சுழற்சி காரணமாக தமிழ்நாட்டில் இன்று முதல் ஐந்து நாட்களுக்கு மிதமான மழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
வடகிழக்கு பருவமழை தீவிரமடைந்துள்ள நிலையில் தமிழ்நாட்டில் பல்வேறு பகுதிகளில் கனமழை கொட்டி தீர்த்து வருகிறது. குறிப்பாக நேற்று தேனி,மதுரை அந்தியூர், திண்டுக்கல், உள்ளிட்ட பகுதிகளில் சுமார் ஒரு மணி நேரத்திற்கு மேலாக நல்ல மழை பெய்தது. அதேபோல் நீலகிரி, வால்பாறை, குன்னூர், ஆகிய பகுதிகளில் தொடர்ந்து கனமழை வெளுத்து வாங்கி வருகிறது. அப்பகுதிகளில் நேற்று இரவு விடிய விடிய பெய்த கனமழையால் நீர்நிலைகள் நிரம்பி உள்ளன. இதனால் ஆறுகளில் தண்ணீர் ஆர்ப்பரித்து ஓடுகிறது.

நீலகிரியில் தொடரும் கன மழை
நீலகிரி மாவட்டத்தில் கடந்த 24 மணி நேரத்தில் 10 சென்டிமீட்டர் மழை பெய்துள்ளது. இந்த கனமழை காரணமாக மலைப்பகுதியை ஒட்டி உள்ள பகுதிகளில் ஆங்காங்கே நிலச்சரிவும் ஏற்பட்டு வருகிறது. குன்னூரில் பெய்து வரும் தொடர் மழை காரணமாக, மாணவர்களின் நலனைக் கருத்தில் கொண்டு குன்னூர் தாலுகாவிற்கு மட்டும் இன்று பள்ளி கல்லூரிகளுக்கு விடுமுறை அளித்து அம்மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டுள்ளார்.
கோவை மற்றும் நீலகிரி மாவட்டத்தில் பெய்து வரும் கனமழை எதிரொலியால் மேட்டுப்பாளையத்தில் இருந்து புறப்படும் ஊட்டி மலை ரயில் சேவை நாளை வரை ரத்து செய்யப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
சென்னைக்கும் மழை வாய்ப்பு
இந்த நிலையில் தெற்கு கேரளா கடலோரப்பகுதிகள் மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளின் மேல் ஒரு வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது. இதன் காரணமாக தமிழ்நாட்டில் இன்று முதல் ஐந்து நாட்களுக்கு மிதமான மழைக்கு வாய்ப்புள்ளதாகவும் சென்னையில் இன்று ஒரு சில இடங்களில் மிதமான மழைக்கு வாய்ப்புள்ளதாகவும் சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்
மதுராந்தகம், தாராபுரம் இடைத்தேர்தல் 2026 : நான்கு முனை போட்டி உறுதியானது
மதுராந்தகம், தாராபுரம் இடைத்தேர்தல் 2026 : திமுக வேட்பாளர்கள் அறிவிப்பு
‘தாய்மாமன் தங்க மோதிரம்’ திட்டம் தள்ளிவைப்பு: அமைச்சர் அருண்ராஜ் அதிகாரப்பூர்வ அறிவிப்பு
இதுதான் சூப்பர் Couple Goal.. மனைவி மாநகராட்சி ஆணையர்.. கணவர் எஸ்.பி.. வேலூரில்!
சர்வதேச சுடோகு தினம் .. மூளைக்கு வேலை கொடுக்கும் புதிர் விளையாட்டு!
"லட்க்கி கொய்லா கொஞ்சம் கொடுப்பா".. நாக்பூரை பதற வைத்த மெட்ராஸ்!
சிந்தனைச் சிதறல்.. வடிப்பது சிற்பம் தான் என்றாலும்.. சிறுகச் சிறுக சிதைக்கும் உளிகள்!
சென்னையில் மிதமான மழைக்கு வாய்ப்பு: தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களுக்கும் எச்சரிக்கை!
காலை உணவுத் திட்ட விரிவாக்கம்: நகராட்சி சார்பில் மாணவர்களுக்கு தட்டு, டம்ளர் வழங்கல்
{{comments.comment}}