சென்னை: காற்று சுழற்சி காரணமாக தமிழ்நாட்டில் இன்று 11 மாவட்டங்களில் கன மழை பெய்ய வாய்ப்புள்ளதாகவும், நாளை மூன்று மாவட்டங்களில் கன மழை பெய்ய வாய்ப்புள்ளதாகவும், சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
தமிழ்நாட்டில் வடகிழக்கு பருவமழை நேற்று தீவிரமடைந்து இருப்பதாக வானிலை ஆய்வு மையம் அறிவிப்பை வெளியிட்டது. அதன்படி தமிழ்நாடு முழுவதும் வடகிழக்கு பருவமழை தீவிரமடைந்து பரவலாக கனமழை பெய்து வருகிறது. குறிப்பாக டெல்டா மாவட்டங்களான நாகை, மயிலாடுதுறை, கடலூர், திருவாரூர் உள்ளிட்ட பகுதிகளிலும், தென் மாவட்டங்களான நெல்லை, தூத்துக்குடி, இராமநாதபுரம், தென்காசி, உள்ளிட்ட பகுதிகளிலும் நல்ல மழை பெய்து வருகிறது. இதனால் நீர்நிலைகளில் தண்ணீர் பெருக்கெடுத்து ஓடுகிறது. அதேபோல் டெல்டா விவசாயிகள் பாசனத்திற்காக தண்ணீர் அதிகம் வருவதால் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

இந்த நிலையில் மன்னார் வளைகுடா மற்றும் அதனை ஒட்டிய இலங்கை கடலோர பகுதிகளின் மேல் ஒரு வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நீடித்து வருகிறது. இதன் காரணமாக தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் ஒரு சில இடங்களில் நவம்பர் 18, 19, 22 ஆகிய தேதிகளில் மிதமான மழைக்கு வாய்ப்பிருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அதேபோல் சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் அடுத்த 48 மணி நேரத்தில் இடி மின்னலுடன் கூடிய மிதமான மழை பெய்ய வாய்ப்பு இருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இன்று கனமழை:
விழுப்புரம், கடலூர், மயிலாடுதுறை, நாகை, தஞ்சாவூர், திருவாரூர், அரியலூர், தென்காசி, தூத்துக்குடி, திருநெல்வேலி, கன்னியாகுமரி, ஆகிய 11 மாவட்டங்களில் இன்று கனமழை பெய்ய வாய்ப்புள்ளது.
நாளை கனமழை:
நாகை, மயிலாடுதுறை, திருவாரூர், ஆகிய மூன்று மாவட்டங்களில் நாளை கன மழை பெய்ய வாய்ப்புள்ளது.
செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்
விஜய்யின் ‘ஜனநாயகன்’ பட வழக்கு: நாளை காலை 10.30 மணிக்கு தீர்ப்பு
ஜனநாயகன் பட விவகாரம்... விஜய்க்கு ஆதரவாக.. சினிமா, அரசியல் துறையில் உரத்து ஒலிக்கும் குரல்கள்!
மிரட்டல் அரசியல் தமிழ்நாட்டில் பலிக்காது...ஜனநாயகனுக்கு ஆதரவாக குரல் கொடுக்கும் காங்கிரஸ்
தவெக தனித்து போட்டியா? கூட்டணியா?... ரகசியத்தை உடைத்த கிரிஷ் சோடங்கர்
அமலாக்கத்துறை ரெய்டு என்ற பெயரில் டேட்டாக்களை திருடுகிறார்கள்...மம்தா பகீர் குற்றச்சாட்டு
'பழைய ஓய்வூதிய திட்டமே நிரந்தர தீர்வு': தமிழக அரசுக்கு டிடிவி தினகரன் கோரிக்கை
சோனியா காந்தி டெல்லி மருத்துவமனையில் அனுமதி: உடல்நிலை சீராக இருப்பதாக மருத்துவமனை தகவல்
தமிழக சட்டசபை தேர்தல் 2026...நாம் தமிழர் கட்சிக்கு டஃப் கொடுக்க போவது யார்?
கூட்டணி அமைப்பதற்கே திண்டாட்டம்...அதிமுக கூட்டணி பற்றி திருமாவளவன் கிண்டல்
{{comments.comment}}