சென்னை: தமிழ்நாட்டில் இன்று பெரிய அளவில் மழை இருக்காது. மழைக்கு பிரேக் என தமிழ்நாடு வெதர்மேன் பிரதீப் ஜான் தெரிவித்துள்ளார்.
தென்மேற்கு வங்க கடல் பகுதிகளில் நாளை காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாக இருக்கிறது. இதற்கிடையே தென்கிழக்கு அரபிக் கடல் மற்றும் அதனை ஒட்டிய லட்சத்தீவு பகுதிகளில் மேல் நிலவும் கீழடுக்கு சுழற்சி காரணமாக தமிழ்நாட்டில் பரவலாக மழை பெய்து வருகிறது. குறிப்பாக சென்னை மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் தொடர்ந்து இரண்டு நாட்களாக மழை பெய்து வருகிறது.
அதேபோல் தென் மாவட்டங்களான மதுரை, ராமநாதபுரம், விருதுநகர், தூத்துக்குடி, தேனி, திண்டுக்கல், உள்ளிட்ட பகுதிகளிலும் நல்ல மழை பெய்தது. இது தவிர டெல்டா மாவட்டங்களான தஞ்சை நாகப்பட்டினம் மயிலாடுதுறை திருவாரூர் உள்ளிட்ட பகுதிகளிலும் பரவலாக மழை பெய்துள்ளது.
இந்த நிலையில் தமிழ்நாடு வெதர்மேன் பிரதீப் ஜான் தமிழ்நாடு மலை குறித்த அறிவிப்பை வெளியிட்டுள்ளார். அதில், தென் தமிழகம் மற்றும் காவிரி டெல்டா பகுதிகளிலும் கடந்த 24 மணி நேரத்தில் நல்ல மழை பெய்துள்ளது. தமிழ்நாட்டில் இன்று பெரிய அளவில் மழை இருக்காது. மழைக்கு விடுமுறை நாளாக இருக்கும். இருந்தாலும் டெல்டா மற்றும் கன்னியாகுமரி பகுதிகளில் ஒரு சில இடங்களில் கன மழை பெய்ய வாய்ப்புள்ளது.
அதேபோல் சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், ராணிப்பேட்டை, ஆகிய மாவட்டங்களில் இன்று வெயில் அடிக்கும். மழைக்கு வாய்ப்பு இருக்காது என்ன தெரிவித்துள்ளார்.
கன்னியாகுமரி மாவட்டத்தில் கடந்த 24 மணி நேரத்தில் அடையாமலை மற்றும் தக்கலையில் தலா 88.8 மில்லி மீட்டர் மழையும், கோலிப்போர்விளையில் 88.2 மிமி மழையும் பதிவாகியுள்ளது.
செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்
விடிஞ்சா தீபாவளி.. அலை அலையாக சொந்த ஊர்களில் குவிந்த மக்கள்.. வெறிச்சோடியது சென்னை
ஆளுநர்களை வைத்துக் குழப்பம் விளைவித்து என்ன சாதிக்கப் போகிறீர்கள்.. முதல்வர் மு.க.ஸ்டாலின்
நீலகிரி, கோவைக்கு ஆரஞ்ச் அலர்ட்... சென்னை உள்ளிட்ட பிற மாவட்டங்களுக்கு மஞ்சள் அலர்ட்: வானிலை மையம்
ஜிஎஸ்டி வரி குறைப்பால் கார், ஏரி, டிவி விற்பனை அதிகரிப்பு: மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமன்
கரூர் துயரம் எதிரொலி.. தீபாவளி கொண்டாட வேண்டாம்.. தொண்டர்களுக்கு தவெக வேண்டுகோள்
எனது பெயரில் நற்பணி மன்றம் தொடங்க வேண்டாம்.. விட்ருங்க.. அண்ணாமலை கோரிக்கை
திமுக அரசுக்கு நிதி நிர்வாகமே தெரியவில்லை..பாமக கூறி வந்த குற்றச்சாட்டு உறுதியாகியுள்ளது: அன்புமணி
10 கிராம் தங்கத்தோட விலை என்ன தெரியுமா.. தீபாவளியையொட்டி வச்சு செய்யும் நகை விலை!
நிதீஷ் குமார் நிச்சயம் முதல்வராக மாட்டார்.. பாஜக முடிவெடுத்து விட்டது.. சொல்கிறது காங்கிரஸ்
{{comments.comment}}