சென்னை: சென்னையில் இன்று பகலில் வெப்பம் கொளுத்தினாலும், மாலையில் பரவலாக நல்ல மழை பெய்யும் என தமிழ்நாடு வெதர்மேன் பிரதீப் ஜான் தெரிவித்துள்ளார்.
சென்னையில் பருவநிலை மாற்றத்தால் கடந்த ஒரு வாரமாக பரவலாக மழை பெய்து வருகிறது. மழை பெய்தாலும் பகல் நேரத்தில் நிலவும் வெயிலின் தாக்கத்தால் புழுக்கம் அதிகமாக இருந்து வருகிறது. வெயில் அடித்த சுவடே தெரியாமல் மாலையில் பலத்த காற்றுடன் கனமழை கொட்டி தீர்த்து விடுகிறது. நேற்று முன்தினம் ஒரு மணி நேரத்தில் ஆறு சென்டிமீட்டர் மழை பெய்தது.
ஜூலை மாதத்தில் சராசரியாக 10 cm மழை பெய்யும். அதில் நேற்று முன்தினம் ஒரு மணி நேரத்திலேயே 6 சென்டிமீட்டர் மழை கொட்டி தீர்த்தது. கடந்த 1996 ஆம் ஆண்டுக்குப் பிறகு நடப்பாண்டில் ஜூன் மாதத்தில் சென்னையில் அதிக மழைப்பொழிவு பதிவாகியுள்ளது என ஏற்கனவே தமிழ்நாடு வெதர்மேன் தெரிவித்திருந்தார்.
இந்த நிலையில் சென்னை மழை குறித்த மீண்டும் ஒரு அப்டேட்டை தமிழ்நாடு வெதர்மேன் தெரிவித்துள்ளார். அதன்படி, அரக்கோணத்தில் நேற்று பலத்த சூறாவளி காற்று வீசியது. இதன் எதிரொடியாக இன்று பகலில் வெயில் வாட்டி எடுத்தாலும் மாலை நேரங்களில் சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர், செங்கல்பட்டு, ராணிப்பேட்டை, ஆகிய மாவட்டங்களில் பரவலாக நல்ல மழை பெய்ய கூடும். இது தவிர கர்நாடக மாநிலம் குடகில் காவிரி நீர் பிடிப்பு பகுதியான கேஆர் எஸ் பகுதியிலும் கனமழை தொடரும்.
அதேபோல் வயநாடு காவிரி கபினி அணை பகுதிகளிலும் நல்ல மழை பெய்து வருகிறது. இதனால் ஒரு சில நாட்களில் கபினி அணை நிரம்பிவிடும். இதனால் கபினியில் இருந்து நேரடியாக மேட்டூருக்கு தண்ணீர் திறக்கப்படும் என தெரிவித்துள்ளார்.
எதிர்ப்பேன்... ஆதரிப்பேன்... ஆலோசனை சொல்வேன்... எம்.பி., கமல்ஹாசனின் முதல் பதிவு!
கமல்ஹாசன்.. களத்தூர் கண்ணம்மா முதல் ராஜ்யசபா வரை!
இன்ஸ்டாகிராம் ரீல்ஸ் பிரபலம்... நடிகை இலக்கியாவுக்கு என்னாச்சு?
உஷார் மக்களே உஷார்... தமிழ்நாட்டில் இன்று எங்கெல்லாம் கனமழை பெய்யப்போகுது தெரியுமா?
விஜய் சீமானை நேரடியாக அழைக்கவில்லை... எங்களது விருப்பத்தை நாங்கள் சொல்கிறோம்...எடப்பாடி பழனிச்சாமி
கமல்ஹாசனின் புதிய அத்தியாயம்.. ராஜ்யசபா உறுப்பினராக தமிழில் பதவியேற்றார்
Friday Motivation: மனைவி ஸ்ரீதேவியின் ஆசையை.. 69 வயதில் நிறைவேற்றிய போனி கபூர்
ருத்ர தாண்டவம் (சிறுகதை)
உரிமை மீட்க தலைமுறை காக்க... திட்டமிட்ட படி இன்று நடைபயணம் தொடங்குகிறார் அன்புமணி ராமதாஸ்!
{{comments.comment}}