டெல்லி: டேஸ்ட் அட்லஸ் வெளியிட்ட, உலகில் அதிகமாக வெறுக்கப்படும் 100 உணவுகள் கொண்ட பட்டியலில், இந்திய உணவான பஞ்சாப் மக்களின் பிரதான உணவு மிஸ்ஸி ரொட்டி 56 ஆவது இடத்தை பிடித்துள்ளது. வட இந்தியர்களின் பாரம்பரிய உணவு எப்படி இந்த பட்டியலில் இடம்பெற்றுள்ளது என பலரும் கேள்வி எழுப்பி வருகின்றனர்.
அதேசமயம், தமிழ்நாட்டில் பலரும் முகம் சுளிக்கும் ஆனால் அடிக்கடி வீடுகளில் செய்யப்படும் உப்புமாவுக்கு இந்த பட்டியலில் இடம் கிடைக்கவில்லை என்பது உப்புமா வெறியர்களுக்கு பெரும் ஆறுதலையும், சந்தோஷத்தையும் கொடுத்துள்ளது.
உலக அளவில் உணவுகளின் தரவரிசை பட்டியலை வெளியிடுகிறது டேஸ்ட் அட்லஸ் அமைப்பு. இந்த அமைப்பு, உணவு விமர்சகர்கள், சமையல் குறிப்புகள், உணவு பற்றிய ஆய்வுக் கட்டுரைகள் ஆகியவற்றின் அடிப்படையில் இந்தப் பட்டியலை வெளியிடுகிறது. அந்த வரிசையில் ஜனவரி 8, 2025 அன்று டேஸ்ட் அட்லஸ் 100 உணவுகள் கொண்ட உலகில் அதிகம் வெறுக்கப்படும் உணவுகள் பட்டியலை வெளியிட்டுள்ளது.
இதில் இந்திய உணவான பஞ்சாப் மக்களால் அதிகம் விரும்பி உண்ணப்படும் பாரம்பரிய உணவு, மிஸ்ஸி ரொட்டி 56வது இடத்தை பிடித்துள்ளது.
மிஸ்ஸி ரொட்டி என்பது முழு கோதுமை மாவு, உளுந்து மாவு, உப்பு, தண்ணீர், சிவப்பு மிளகாய் தூள், சீரக தூள், கேரம் விதை தூள், மஞ்சள், கொத்தமல்லி மற்றும் உலர்ந்த மாதுளை விதைகள் சேர்த்து தயாரிக்கப்படும் புளிப்பில்லாத ரொட்டி வகையாகும். சமைத்தவுடன், இந்த ரொட்டி நெய்யில் டோஸ் செய்து பருப்புடன் (தால்) சேர்த்து பரிமாறப்படுகிறது.
மிகவும் மோசமான உணவு பட்டியலில் அயர்லாந்தின் பிளாட்பால்ட் முதல் இடத்தை பிடித்துள்ளது. இது ஒரு வகை பாலாடையில் செய்த உணவாகும். அடர்-பழுப்பு நிற பாலாடை, கம்பு மாவு, பார்லி மாவு ஆகியவற்றைக் கொண்டு தயாரிக்கப்படுகிறது.
இதனைத் தொடர்ந்து இங்கிலாந்தின் ஜல்லீடு ஈல்ஸ், அமெரிக்காவின் பிராக் ஐ சாலட், ஸ்பெயினின் அகுலாஸ் ல கசுவா உள்ளிட்டவையும் இப்பட்டியலில் இடம்பெற்றுள்ளன.
செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்
எடப்பாடி பழனிச்சாமி நாளை டில்லி பயணம்...நயினார் சொன்ன நல்லது.. யாருக்கு நடக்க போகிறது?
வாக்கு என்பது மக்களின் நம்பிக்கையை பெற்றதற்கான அடையாளம்: முதல்வர் மு.க.ஸ்டாலின்!
பாமக கட்சியும்,மாம்பழச் சின்னமும் ராமதாஸ் அவர்களுக்குத் தான் சொந்தம்: எம்எல்ஏ அருள் பரபரப்பு பேட்டி!
தேர்தலில் விஜய்-சீமானுக்கு தான் போட்டி...எங்களுக்கு கவலையில்லை: அமைச்சர் ஐ.பெரியசாமி
அதிமுக ஓட்டுகள் தவெகவுக்கு போகாது: விஜய்க்கு ஏமாற்றம் தான் மிஞ்சும்: முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார்
அன்புமணிக்கே மாம்பழ சின்னம்.. தேர்தல் கமிஷன் சொல்லி விட்டது.. வழக்கறிஞர் பாலு தகவல்
ஒட்டுமொத்த மீடியாக்களையும் ஆக்கிரமித்த திமுக, தவெக.. எங்கே கோட்டை விடுகிறது அதிமுக?
10 நாள் கெடு முடிந்தது.. யாருக்கு புரிய வேண்டுமோ புரியும்.. செங்கோட்டையனின் புதிய மெசேஜ்
அன்புக்கரங்கள்.. இரு பெற்றோர்களையும் இழந்த குழந்தைகளுக்கு உதவும் திட்டம்.. இன்று முதல்!
{{comments.comment}}