ஆஹா.. பெண்கள் அழுதா.. ஏன் ஆண்கள் பொட்டிப் பாம்பா அடங்குறாங்கன்னு இப்பத்தாய்யா தெரியுது!

Dec 24, 2023,12:27 PM IST

டெல்லி: பொம்பளப் புள்ளைய அழ விடாதப்பா. பொண்ணுங்களை கண் கலங்காம பார்த்துக்கணும் என்று அந்தக் காலத்து பெரியவர்கள் சொல்வதைக் கேட்டிருப்போம்.. இப்பெல்லாம் பெண்கள் ரொம்ப தைரியமாகவும், தன்னம்பிக்கையோடும் மாறிட்டாங்க.. அவ்வளவு சீக்கிரமா யாரும் அவங்களை அழ வச்சுட முடியாது.. பட்.. இந்த ஸ்டோரி பெண்களோட "கண்ணீர்" பத்தினதுதான்.


இஸ்ரேலைச் சேர்ந்த ஆய்வு நிறுவனம் வெய்ஸ்மேன் அறிவியல் கழகம். இந்த நிறுவனம் ஒரு வித்தியாசமான ஆய்வை மேற்கொண்டது. பெண்களின் கண்ணீர் குறித்து அது பல்வேறு விதமான ஆய்வுகளை மேற்கொண்டு வருகிறது. அதில் ஒரு ஆய்வில் வித்தியாசமான, சுவாரஸ்யமான முடிவு கிடைத்துள்ளதாம்.


அதாவது, பெண்களின் கண்ணீரில் சில வேதிப் பொருட்கள் இருப்பதாகவும், அது ஆண்களின் மூளையில் கோபத்தைத் தூண்டும் பகுதியை கட்டுப்படுத்துவதாகவும், இதனால் அவர்களின் கோபம் மட்டுப்பட்டு அவர்கள் சாந்தமடைய அது உதுவுவதாகவும் கூறுகிறது அந்த ஆய்வு. அதாவது பெண்களின் கண்ணீரை நுகர்ந்து பார்த்தால் இந்த "மாயாஜாலம்" நடக்கிறதாம்.




இது ஏற்கனவே எலிகளிடம் சகஜமாக இருக்கிறதாம். அதாவது பெண் எலிகள் விடும் கண்ணீரை ஆண் எலிகள் நுகர்ந்து பார்க்குமாம். அப்படிச் செய்த பிறகு ஆண் எலிகள் அமைதியாகி விடுமாம், அதன் கோபம், முரட்டுத்தனம் போய் விடுமாம். இந்த ஆய்வு தற்போது மனிதர்களிடமும் அதேபோன்ற விளைவை ஏற்படுத்துவதாக இந்த ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர்.


இதற்காக ஆண்கள் சிலரையும், பெண்கள் சிலரையும் ஆய்வுக்குட்படுத்தினர்.  ஆய்வில் ஈடுபடுத்தப்பட்ட ஆண்களிடம் பழி வாங்கும் உணர்வையும், கோபத்தையும் கொண்டு வந்துள்ளனர். அதன் பின்னர், 

பெண்களிடமிருந்து சேகரிக்கப்பட்ட கண்ணீரை ஆண்களிடம் கொடுத்து அதை நுகர்ந்து பார்க்கச் சொல்லியுள்ளனர். ஆனால் அது பெண்களின் கண்ணீர் என்பதை அவர்களுக்குச் சொல்லவில்லை. அதன் பிறகு அவர்களது மூளையில் ஏற்பட்ட மாற்றங்களைக் கண்காணித்துள்ளனர். அப்போது கண்ணீரை நுகர்ந்து பார்ப்பதற்கு முன்பு இருந்த அந்த வேகம், கண்ணீரை நுகர்ந்து பார்த்த பிறகு இல்லை என்பதை கண்டறிந்துள்ளனர். அதாவது 40 சதவீத அளவுக்கு அந்த எண்ணம் குறைந்திருந்ததாம்.


இதை எம்ஆர்ஐ ஸ்கேன் மூலம் கண்டறிந்துள்ளனர். ஆண்களின் மூளையில் பிரிபிரன்டல் கார்டெக்ஸ் மற்றும் ஆன்டீரியர் இன்சுலா ஆகிய இரு பகுதிகளும் கோபம் தொடர்பானவை. இந்த இடத்தில்தான் அந்த பெண்களின் கண்ணீரில் இருந்த வேதிப் பொருட்கள் செயல்பட்டு கோபத்தைக் குறைத்துள்ளதாம். ஆய்வுக்கு முன்பு ஆக்டிவாக இருந்த இந்த பகுதிகள், கண்ணீரை நுகர்ந்த பின்னர் ஆக்டிவிட்டி குறைந்து காணப்பட்டதாம்.


ஆஹா.. இப்பத்தாய்யா புரியுது.. பெண்கள் அழுதா ஆண்கள் ஏன் பொட்டிப் பாம்பா அடங்கறாங்கன்னு!

சமீபத்திய செய்திகள்

news

நெல்லின் ஈரப் பதம்.. தமிழ்நாட்டில் மத்தியக் குழு.. நாமக்கல் அரிசி ஆலையில் இன்று ஆய்வு

news

10 மற்றும் 12ம் வகுப்பு பொதுத்தேர்வு அட்டவணை நவ., 4ம் தேதி வெளியீடு: அமைச்சர் அன்பில் மகேஸ்!

news

காலையில் தினமும் கண் விழித்தால் கை தொழும் தேவதை... டீ.. ஆனால் வெறும் வயிற்றில் குடித்தால்??

news

மிரட்ட வரும் மோன்தா புயல்... யாருக்கு ஆபத்து... யாருக்கு மழை... தமிழ்நாட்டு நிலவரம் என்ன தெரியுமா?

news

விலை உயர்வு எதிரொலி.. பழைய தங்க நகைகளைப் போட்டு.. புது நகை வாங்க ஆர்வம் காட்டும் மக்கள்!

news

அமைதி பலவீனம் அல்ல.. காந்தியின் ஆயுதம் அதுதான்.. நோபல் வென்ற வெனிசூலா தலைவர் புகழாரம்

news

தொடர் உயர்வில் தங்கம் விலை... இன்றும் சவரனுக்கு ரூ.800 உயர்வு!

news

அவார்டுகளைக் குறி வைக்கும் சூப்பர் மேன்.. தீவிரப் பிரச்சாரத்தில் குதித்த வார்னர் பிரதர்ஸ்

news

மரத்தை வைத்தவன் தண்ணீர் ஊற்றுவானா?

அதிகம் பார்க்கும் செய்திகள்