அரபு நாடுகளுக்கு மலையாளிகள்.. அமெரிக்காவில் தெலுங்கர்கள்.. கிடுகிடுவென அதிகரித்த பாப்புலேஷன்!

Jun 27, 2024,05:43 PM IST

வாஷிங்டன்: அமெரிக்காவில் தெலுங்கு பேசும் மக்களின் எண்ணிக்கை பல மடங்கு அதிகரித்துள்ளது. தற்போது அமெரிக்காவில் கிட்டத்தட்ட 12.5 லட்சம் தெலுங்கு பேசுவோர் இருப்பதாக புள்ளிவிவரத் தகவல் ஒன்று தெரிவித்துள்ளது.


பல்வேறு நாடுகளைச் சேர்ந்தவர்களைக் கவரும் நாடாக அமெரிக்கா இன்றும் திகழ்கிறது. படிப்பதற்காகத்தான் பலரும் அமெரிக்காவை விரும்புகிறார்கள். படித்த பின்னர் பலர் இங்கேயே வேலை பார்க்க விரும்புகின்றனர். அப்படியே இங்கேயே செட்டிலாக விரும்புவோரும் அதிகரித்து வருகின்றனர்.


பல்வேறு நாட்டவர்கள் போல இந்தியர்களும் கூட பெருமளவில் அமெரிக்காவில் படிக்கவும், வேலை பார்க்கவும், செட்டிலாகவும் விரும்புகின்றனர். இந்த எண்ணிக்கை வருடா வருடம் அதிகரித்தபடிதான் உள்ளதே தவிர குறைந்தபாடில்லை. இந்த நிலையில் அமெரிக்காவில் வசிக்கும் இந்தியர்களில் தெலுங்கு பேசுவோர் எண்ணிக்கை கிடுகிடுவென அதிகரித்துள்ளதாம்.


அதிகம் பேசப்படும் இந்திய மொழிகள்




அமெரிக்காவில் அதிகம் பேசப்படும் மொழிகள் வரிசையில் 11வது இடத்திற்கு முன்னேறியுள்ளது தெலுங்கு. இதற்கு முன்பு இந்தி, குஜராத்தி ஆகிய மொழிகள் டாப் 10க்குள் உள்ளன. தெலுங்குக்கு அடுத்து அதிகம் பேசப்படும் இந்திய மொழிகளாக பெங்காலி, தமிழ், பஞ்சாபி ஆகியவை டாப் 25க்குள் உள்ளன.  மலையாளம், கன்னடம் ஆகியவை 40 இடங்களைத் தாண்டி உள்ளன. 


அமெரிக்காவிலேயே கலிபோர்னியாவில்தான் அதிக அளவிலான தெலுங்கு பேசுவோர் உள்ளனர். இங்கு மட்டும் கிட்டத்தட்ட 2 லட்சம் பேர் உள்ளனராம். டெக்சாஸில் 1.5 லட்சம், நியூ ஜெர்சியில் 1.1 லட்சம், இல்லினாய்ஸில் 83,000, விர்ஜீனியாவில் 78,000, ஜார்ஜியாவில் 52,000 தெலுங்கு பேசுவோர் உள்ளனராம். வருடா வருடம் அமெரிக்காவுக்கு கிட்டத்தட்ட 60,000  முதல் 70,000 தெலுங்கு பேசும் மாணவர்கள் படிப்பதற்காக வருகிறார்கள். 


தடுக்கி விழுந்தால் தெலுங்கர்தான்




அமெரிக்காவைப் பொறுத்தவரை தகவல் தொழில்நுட்பத்துறை, நிதித்துறை ஆகியவற்றில்தான் அதிக அளவிலான தெலுங்கு பேசுவோர் வேலை பார்க்கிறார்கள். அமெரிக்காவில் தடுக்கி விழுந்தால் யாராவது ஒரு தெலுங்கர் மீதுதான் விழ வேண்டும். அந்த அளவுக்கு தெலுங்கு பேசுவோர் எண்ணிக்கை வருடா வருடம் அதிகரித்து வருவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. 


டல்லாஸைச் சேர்ந்த வினய் என்பவர் கூறுகையில், நான் கடந்த ஆண்டுதான் இங்கு வந்தேன். எனக்கு ஆந்திராவில் இருப்பது போலத்தான் ஃபீல் ஆகிறது. காரணம், இங்கு எனது அலுவலகம் முதல் நான் தங்கியிருக்கும் இடம் வரை, தெருக்களில், மால்களில் என எங்கு பார்த்தாலும் தெலுங்கர்கள்தான் அதிகம் காணப்படுகின்றனர். சொந்த மாநிலத்தில் இருப்பது போலத்தான் எனக்கு தோன்றுகிறது. அமெரிக்காவில் இருப்பது போலவே தெரியவில்லை என்றார்.


அரபு நாடுகளுக்கு மலையாளிகள் போல, அமெரிக்காவில் தெலுங்கர்கள் மயமாகி விட்டது.. பேசாமல் இந்திய மொழிக்காரர்களுக்காகவே அமெரிக்காவில் ஒரு தனி மாகாணம் அமைச்சுடலாம் போலயே!

சமீபத்திய செய்திகள்

news

ரபேல் விமானத்தில் பறந்தார் குடியரசுத் தலைவர் திரெளபதி முர்மு.. கலாம், பிரதீபா பாட்டீல் வழியில் சாதனை

news

வைரலானது.. ஜப்பானின் முதல் பெண் பிரதமரின் கைப்பை.. உள்ளூர் நிறுவனத்திற்கு கிராக்கி!

news

பைந்தமிழே பயிற்று மொழி...!

news

Cyclone Montha effect: திருவள்ளூருக்கு ஆரஞ்சு... சென்னை உள்ளிட்ட 8 மாவட்டங்களுக்கு மஞ்சள் அலர்ட்!

news

2026 தேர்தலிலும் திமுக.,வுக்கு தான் வெற்றி...முதல்வர் ஸ்டாலின் நம்பிக்கை

news

வாக்குரிமைப் பறிப்பைத் தடுப்போம்... வாக்குத் திருட்டை முறியடிப்போம்... முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்

news

விவசாயிகள் வயிற்றில் அடிக்கும் அரசு...திமுக மீது விஜய் தாக்கு

news

ஷ்ரேயாஸ் ஐயருக்கு என்ன தான் ஆச்சு?...குழப்பத்தில் கிரிக்கெட் ரசிகர்கள்

news

இயற்கை வளங்களை அழித்து மணல் கொள்ளையை அரங்கேற்ற துடிக்கும் திமுக அரசு: அன்புமணி காட்டம்!

அதிகம் பார்க்கும் செய்திகள்