டெல்லி: பஹல்காம் தாக்குதல் தொடர்பாக இந்திய ராணுவம் மற்றும் பாதுகாப்பு அமைப்புகள் குறித்து கலவரத்தை தூண்டும் வீடியோக்கள் வெளியிட்டதாக பாகிஸ்தானை சேர்ந்த 16 youtube சேனல்களுக்கு தடை விதித்துள்ளது மத்திய அரசு.
பஹல்காம் தீவிரவாத தாக்குதலில் அப்பாவி சுற்றுலா படுகொலை செய்யப்பட்ட சம்பவம் நாடு முழுவதும் கடும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. உலக நாடுகள் கண்டனம் கடும் தெரிவித்து வந்தனர்.
இதனையடுத்து பஹல்காம் தாக்குதல் தொடர்பாக முக்கிய சாட்சியிடம் என்ஐஏ அதிகாரிகள் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும் தீவிரவாதிகள் சுட்டுக் கொண்ட சம்பவத்தை வீடியோ எடுத்த உள்ளூர் நபர்களிடமும் விசாரணை நடத்தி வருகின்றனர்.

இதற்கிடையே இந்த தாக்குதல் விவகாரத்தில் ரஷ்யா இந்தியாவிற்கு ஆதரவு தெரிவித்து வருகிறது. அதேபோல் சீனா பாகிஸ்தானுக்கு ஆதரவாக இருப்பதாக பல்வேறு தகவல் வெளியிட்டுள்ளன. இதனால் சீனாவிடம் வலுவான அணு ஆயுதங்கள் தயாராக இருப்பதாக கூறி பாகிஸ்தான் அமைச்சர்கள் மிரட்டல் விடுப்பதாக கூறப்படுகிறது. இதனால் இந்தியா பாகிஸ்தான் இடையே போர் எழும் அபாயம் நிலவி வருகிறது. இது மட்டுமல்லாமல் இந்த பஹல்காம் தாக்குதல் தொடர்பாக பல்வேறு சர்ச்சைகளும் எழுந்து வருகின்றன.
இந்த நிலையில் பஹல்காம் தாக்குதல் தொடர்பாக இந்தியா பாகிஸ்தான் இடையே எழும் சர்ச்சைகளுக்கு முற்றுப்புள்ளி வைக்கும் விதமாக மத்திய அரசு பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. அதன்படி, உள்துறை அமைச்சகத்தின் பரிந்துரையின் பேரில் இந்திய ராணுவ மாற்றும் பாதுகாப்பு அமைப்புகள் குறித்து பொய்யான மற்றும் கலவரத்தை தூண்டும் வீடியோக்கள் வெளியிட்டதாக பாகிஸ்தானை சேர்ந்த 63.08 மில்லியன் சப்ஸ்ரைபர்களை கொண்ட 16 youtube சேனல்களுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.
மேலும், இந்திய ராணுவத்திற்கு நிதி அளிக்கக் கோரி whatsapp உள்ளிட்ட சமூக வலைதளங்களில் பரப்பப்படும் செய்திகளில் எந்த உண்மையையும் இல்லை என மத்திய அரசு விளக்கம் அளித்துள்ளது. இதுபோன்று போலியான செய்திகளை நம்பி பொதுமக்கள் யாரும் தங்களது பணத்தை அளிக்க வேண்டாம் எனவும் அறிவுறுத்தல் வழங்கி உள்ளது.
கல்வி எனும் ஆயுதத்தால் அனைத்தையும் தகர்த்தெறிந்த அறிவுச்சூரியன்தான் அம்பேத்கர்:முதல்வர் முக ஸ்டாலின்
எந்த அயோத்தி போல தமிழ்நாடு மாற வேண்டும்?. நயினார் நாகேந்திரனுக்கு கனிமொழி கேள்வி!
உலகமே உற்றுப் பார்த்த மோடி - புடின் சந்திப்பு.. அசைந்து கொடுக்குமா அமெரிக்கா?
திருவண்ணாமலை கார்த்திகை தீபத்தை நேரில் பார்த்தால்.. 21 தலைமுறைக்கு முக்தி கிடைக்குமாம்!
Festival Trains annoounced.. சொந்த ஊருக்குப் போக கவலையில்லை.. ஸ்பெஷல் ரயில்கள் அறிவிப்பு!
11ம் வகுப்பு மாணவர்கள் தாக்கியதில்... +2ம் வகுப்பு மாணவன் பலி... 15 மாணவர்கள் கைது!
கீரை சாப்பிடாத குழந்தைகளும் விரும்பி உண்ணும் கீரை தொக்கு.. லஞ்சுக்கு சூப்பர் ரெசிப்பி!
காஞ்சிபுரம் ஏகாம்பரநாதர் கோவில் கும்பாபிஷேகம்.. 149 பள்ளிகளுக்கு 8ம் தேதி விடுமுறை
இடியாப்பம்.. நீல கலர் ஜிங்குச்சா.. கலர் கலரா இடியாப்பம் செஞ்சு சாப்பிடலாமா?
{{comments.comment}}